Thursday, 30 December 2010

பத்திண்டு வர்றது....(சிறுகதை)

படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்த டேவிட் தன் கண்களை கசக்கி, கசக்கி தெளிவடைய முனைந்தான், ஆனால் தோற்றான். நேற்று தன் நாதேறி நண்பர்களோடு நட்டுவைத்த ஓல்ட் மங்க் ரம்மை முட்ட முட்ட குடித்தால் வந்த சோதனை. ஹான்கோவெர் இல் இருந்து மீள அவன் மூளை தயாராக இல்லை.

முயற்சி செய்து சுவர் கடிகாரத்தை பார்த்து, பாடையில் ஏறிய பாடி போல் சிலையானான். அடுத்த நொடியே வெடித்த இளவன் காயில் இருந்து பறக்கும் பஞ்சு போல் பறக்கலானான்.

மணியோ காலை 10.43 , திரை கடல் ஓடி மொபைலை எடுத்தான். அதில் 43 மிஸ்ஸுடு கால்கள், அதை கண்ட அவன் கால்களும் நடுக்கம் கண்டது. ஓடோடி டாய்லெட்டுக்கு பதில் பாத் ரூமில் நுழைந்தான், நுழைந்த பின் எதற்கு இங்க வந்தோமென்று குழம்பி, பின்பு தெளிவாகி, குளித்து, பிறகு சரியாக டாய்லெட் சென்று, அதையும் முடித்து கிளம்பினான்.

அதற்குள் ஏழு மிஸ்ஸுடு கால்கள்!! ஐயையோ என்று வாய் பிளந்ததால், பல் துலக்காதது பளிச் என்று மூக்கிற்கு பட்டதால், பாய்ந்து சென்று சுவிங் கம் எடுத்து பாக்கெட்டில் இட்டு, பைக்கை முடிக்கினான்.

எப்படியோ 60 மிஸ்ஸுடு கால்கள் ஆவதற்குள் இலக்கை அடைந்தான். பைக்கின் சைடு ஸ்டான்ட் பாதியாய் போட்டு, சாவி எடுக்காமல், ஒரு இண்டிகேட்டர் இரும விட்டு விட்டு உள்ளே ஓடினான்.

அங்கே எரிந்து கொண்டிருந்தது ஒரு தங்கத் தாமரை. புலிபோல் பாய்ந்து பூனை குரலில் ஹாய் என்றான், லஷ்மியை பார்த்து.

லக்ஷ்மி : என்ன பார்த்த உனக்கு எப்படி தெரியுது?
டேவிட் : இல்ல லக்ஷ்மி பத்து மணிக்குள்ள முடிஞ்சிரும்னு நெனைச்சேன் ஆனா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

லக்ஷ்மி : பாவி!! கொஞ்சமாட லேட் ஆச்சு?
டேவிட் : ம்ம் புரியுது...
லக்ஷ்மி : இன்னைக்கு சனிக்கிழமை தான, சர்ச்சும் கிடையாது. எங்க போய் பொறிக்கிண்டு வந்த?

டேவிட்: நீ வேர, சர்ச்சுக்கு தான் போனேன், ஒரு விசேஷ கூட்டம் இருந்தது.
லக்ஷ்மி : ஒ! உபவாச ஜெபமா??
டேவிட் : ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்.

லக்ஷ்மி : ஏன் இத முன்னாடியே சொல்லல? எனக்கு எவ்வளவு கஸ்டமா இருக்கு தெரியுமா. இந்த ஒரு மணி நேரமா, யார் யாரோ வரா,ஒரு மாதிரி பாக்கிறா. சிலர் லிப்ட் வேனுமான்க்ரா. எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச மனுஷாலெல்லாம் பார்த்தா. யாரவது அப்பாகிட்ட போய் சொன்னா, அதோ கதி தான். நீ பாட்டுக்கு சர்ச்சு, கிர்ச்சு சொல்லுற. உன்ன நெனச்சாலே அப்படியே பத்திண்டு வர்றது.
டேவிட்: ம்ம்ம் புரியுது.

லக்ஷ்மி : புரிஞ்சு என்பன்றதாம்?
டேவிட்: "மௌனம்"...
லக்ஷ்மி : நான் பேச ஆரம்பிச்சா மட்டும் ஊமக் கோட்டான மாறிற..
டேவிட்  : "மௌனம்".
லக்ஷ்மி : என் சும்மாவே இருக்க? எதாஞ்சு சொல்லு டா?
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : ஐயோ பத்திண்டு வர்றது!!!!
டேவிட் : "மௌனம்"
லக்ஷ்மி : என்ன பாத்தா வன பத்திரகாளி மாதிரி தெரியரனா? வாய் தெறந்து பேசு டா மூதேவி?
டேவிட் : என்னக்கு பத்திரகாளி, கித்திரகாளி எல்லாம் தெரியாது!
லக்ஷ்மி : ஒ! அப்ப நான் மட்டும் தான் உங்க சாமி பத்தி தெரிஞ்சிருக்கணும். ஆனா நீ மட்டும் தெரிஞ்சுக்க பிடாது? அப்படித்தான?
டேவிட் : இல்ல இல்ல, உங்களுக்கு ஆயிரக் கணக்கான சாமிகள் இருக்கு. அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொல்லுறேன்.
லக்ஷ்மி : தெரியாதா? இல்ல தெரிஞ்சுக்க விருப்பம் இல்லியா?
டேவிட்: "மௌனம்"...
லக்ஷ்மி : நீ மௌனம் சாதிக்கிறத பாத்தா பசி மயக்கம் போல இருக்கே?
டேவிட் : அதெல்லாம் ஒன்னும் இல்ல கலையில தான் நேத்து வாங்கின பிரியாணி, மட்டன் சுக்கா எல்லாம் வெளுத்து கட்டிட்டு வந்தேன். தெரிஞ்சுக்கோ.

லக்ஷ்மி : டேய்!! அப்போ உபவாச ஜெபம்ன்னு சொன்னது போய்! உபவாசம்ன விரதம் தானே? சோ, நீ காலையில சர்ச்சுக்கு போகல? அப்போ எங்க இருந்து வர்ற? உன்ன நெனச்சாலே அப்படியே பத்திண்டு வர்றது!!!!!!!!!!! உண்மைய சொல்லு டா?
டேவிட் : ஓகே. என் ரூம் மேட் சிவாவோட ட்ரீட். அவனுக்கு ப்ரோமோஷன். அவன் சந்தோசத்தில பங்கு எடுகிலன்னா வருத்தபடுவேன்னா, அதுதான் கொஞ்சமா குடிச்சேன்.
லக்ஷ்மி : அட சண்டாள, குடுச்சியா? பத்திண்டு வர்றது டா பாவி!
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : எனக்கு எவ்வளவு பேர் ப்ரொபோஸ் பண்ணா, எல்லாரையும் வேண்டானுட்டு உன்ன புடிச்சேனே, என் புத்திய சொல்லணும்.
டேவிட் : சும்மா நிறுத்து லக்ஷ்மி! என்னக்கு மட்டும் ப்ரோபோசல் வருலியா?
லக்ஷ்மி : ஒ! அப்போ என்ன போன போகுதுன்னு தான் லவ் பண்ணினியா? சொல்லுடா அசமந்தம்...பத்திண்டு  வர்றதே...
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : உன் லவ்வுக்கு ஓகே சொல்லறதுக்கு முன்னாடி குட்டி போட்டா பூனை போல முட்டின்டே வருவே? இப்போ கசக்குதோ?? நேத்து ராத்திரி போன் பண்ணினே ஏன் சொல்லல?
டேவிட்: ஒரு ரௌண்டு தான் லச்சு. ஒரு ரவுண்டேல்லாம் சரக்குன்னு கணகெடுதுக்க மாட்டோம்.

லக்ஷ்மி : லச்சு, கிச்ச்சு சொன்னா பல்ல கழட்டிடுவேன். நூட்லஸ் சாபிட்டத சொன்ன, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கு சாபிட்டத சொன்ன. ஆனா தண்ணி அடிச்சத மட்டும் ஏன் சொல்லல?
டேவிட் : அதான் சொன்னேனே, அடிச்சது தண்ணியே இல்ல, சும்மா.....
லக்ஷ்மி : சரி காலையில போன் பண்ணினேனே ஏன் எடுக்கல?
டேவிட் : போனா?
லக்ஷ்மி : டேய் புளுகு மூட்டை, அப்படியே பத்திண்டு வர்றது டா...
டேவிட் : இல்லடா செல்லம்...
லக்ஷ்மி : டேய் சும்மா இரு டா..கோவத்த கெளறாத..செல்லம் சொல்லாத...சரியா 60 மிஸ்ஸுடு காள்ல்ஸ் விட்டேன்..அதுவும் புல் ரிங் விட்டேன்..போய் சொல்லாம சொல்லு?
டேவிட் : இல்லம்மா, சத்தியம்மா கால் வரலம்மா..சொன்னா நம்பு..
லக்ஷ்மி : பத்திண்டு வர்றது டா!! கால் பண்ணின நான் என்ன ஜடமா?
டேவிட்: நீ நம்பித்தான் ஆகணும்.
லக்ஷ்மி : சரி நம்புறேன், மொபைல குடு.
டேவிட் : இந்தா புடின்னு ஓதரிகிட்டே குடுத்தான்..
லக்ஷ்மி : டேய் ஆமான் டா..மிஸ்ஸுடு காலே இல்ல?
டேவிட் : அதான் சொன்னேனே..
லக்ஷ்மி : ஓகே. ஆனா கால் ஹிஸ்ட்ரில...அதென்ன பேரு இது.. PART HINDU VARTHU ? நேரிய தடவ கால்ஸ் வந்திருக்கு?
டேவிட் : அது என் உறுப்படாத பிரெண்ட் வரதராஜன், ஹிந்து ஆபீச்ல பார்ட் டைம்ல வேலை பண்ணுறான்.
லக்ஷ்மி : சரி சரி. உன் மொபைல ஏதோ பால்ட் இருக்கு..செக் பண்ணு டா..
டேவிட் : சரி லக்ஷ்மி.

லக்ஷ்மி : அதென்ன மூணா மனுஷாள கூப்பிடற மாதிரி கூப்பிடுற? செல்லமா லச்சுன்னு கூபிடுடா?

டேவிட் : சரி லச்சுன்னு சிருச்சேன். மனசுக்குள்ள இன்னும் வேகமா வாய் விட்டு சிருச்சேன். ஏன்னா, இந்த லூசு மாமிக்கு அவ செல்ல பேர் "பத்திண்டு வர்றது" ன்னு தெரியாது. அத விட காமெடி மொபைல அவ பேர "PART HINDU VARTHU " ன்னு தப்பா படிச்சு புரிஞ்சுகிட்டது...நல்ல வேலை தப்பிச்சேன், இல்லேனா ஒரு மணி நேரம் பத்திண்டு வர்றது!!  பத்திண்டு வர்றது!!  ன்னு ஒப்பாரி வச்சிருப்பா!!!!!!!!!

2 comments:

  1. your sense of humour is too good... i liked your creation...

    Jananisri

    ReplyDelete
  2. ganeshhhhhhhhhhhhh............
    PATHINDU VARUTHU. DAAAAA.......
    very very nice twist in the words..........
    completely a different journer...... nice keep goin.........

    ReplyDelete