Saturday, 18 December 2010

களமாடி

தன் இனம் காக்க
உயிரை ஒப்புவிப்பவன் களமாடி.

பகைவனை சூறையாட
உடம்பையே ஆயுதமாக்குவன் களமாடி.

அன்பான இருதயம் கொண்ட மனிதனை
களமாடியாக்கிய  களவானியும் மனிதனே.

எங்கிருந்து வந்தது களவானிக்கு
இந்த மிருக குணம்.
தன் இனமற்றவனை கொன்று
குவிக்கும் அரக்க குணம்.

அறிவியல் வளர்த்த மனிதன்
பிற இனத்தவனை அன்பால் அரவணைக்க மறந்தான்.

ஒரு நாடு, ஒரு இனத்தை
கூண்டோடு கைலாசம் அனுப்ப
வெட்கங்கெட்டு பிற நாடுகளிடம்
பிச்சை கேட்கிறது.
அந்த இனத்தின் மகிமை தெரியாத
முட்டாள் அதிபர்களும் நேசக்
கரம் நீட்டுகின்றனர்.
இதை மக்களும் மதிகெட்டு
வேடிக்கை பார்கின்றனர்.

சிறுபான்மை இனமாக வாழ என்ன பிரச்னை?
சொல்கிறேன் கேளுங்கள்..

உங்கள் உடைமைகள் சில நேரம் சூறையாடப்படும்,
புகார் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
உங்கள் மொழி கூத்தியாலாக்கபடும்.
தேர்தலில் நிற்க முடியாது.

அதிபராக பெறும்பான்மை இனத்தை
சார்ந்த அயோக்கியனுக்கு மட்டுமே உரிமை உண்டு.

சிறுபான்மை மாணவனின் பாடத் தேர்ச்சி விகிதம்
மட்டும் 80 சதவிகதமாக இருக்கும்.
உயர் கல்வி நுழைவாயிலும் அடைத்தே இருக்கும்.

ராணுவத்தில் பணி புரிய அனுமதி மறுப்பு.
காவல்துறையிலும் கால் பதிக்க முடியாது.
இதைபோல் இன்னும் எவ்வளவோ...

கொடுமைகளை தட்டி கேட்பவன்
களமாடியாகிறான்.
இவனுக்கு தீவிரவாதி என்ற
செல்ல பெயரும் சூட்டப்படும்.

சண்டை மேலும் மூளும்போது
இழைக்கப்டும் கொடுமைகள் ஏராளம்.

சிலவற்றை உங்கள் பார்வைக்கு
படையளிடுகிறேன்..

நம் அக்காளையும், தங்கையையும்
தார்சாலையிலிட்டு கலவானிகளால்
கற்ப்பு களவாடப்படும்.

நம் அம்மாக்களின் மார்புகளை
அறுத்து காட்சி பொருளாக வைப்பர்.

நம் அண்ணன், தம்பியின் தொடையை
வெட்டி, மனித சதைக் கறியை மலிவாக விற்பர்.

பச்சிளம் குழந்தைகளை எறியும்
தார்சூலையில் வதக்கி எடுப்பர்.

களமாடிகளை நிர்வாணப் படுத்தி
சங்கிலியால் கட்டி, களவாணிகள் தங்கள்
கண்களை துணியால் கட்டி சுட்டு விளையாடுவர்.

கைதான களமாடிகளை பத்துக்கு பத்து அறையில்
அடைத்து அட்டகாசம் செய்வர்.
ஒரு அறையில் குறைந்தது நூறு பேரை இட்டு,
வியர்வை, மலம், மூத்திர துர்நாற்றத்தால்
மூச்சடைக்க வைத்து கதையை முடிப்பர்.

பெண் களமாடிகளுக்கு செய்யும் அசிங்கத்தை
எழுத என் பேணா தயங்கியதாள் நிறுத்திக் கொள்கிறேன்.

சுதந்திர காற்றை வரும் சந்ததி சுவாசிக்க,
களமாடிகள் தங்கள் சுவாசக் காற்றை விடுகிறார்கள்.

கொன்று புதைத்த பிணங்கள், நாளய போருக்காக
இடும் விதைகள் என்று அறியாது செய்கின்றனர்.

விலங்குகள் கூட பசிக்காக மட்டுமே வேட்டையாடும்.
இவர்களின் மனித வேட்டையை விளங்கிக்கொள்ள
முடியவில்லை.

உலக நாடுகளும் இதை பார்க்க மறுத்து
இரு கண்களையும் மூடிகொள்வதும்.
பலர் சொல்லத் துடிப்பதையும் கேட்க மறுத்து
இரு காதுகளையும் அடைத்துக்கொள்வதும்.
போர் நிறுத்த அறிவிபை சொல்ல மறுத்து
வாயை பொத்திக் கொள்வதை,
பார்க்கும் போது,

நான் ஏன் இன்னும் இந்த பாவலோகத்தில்,
உயிருள்ள பேசும், கேட்க்கும், பார்க்கும்,
நடை பிணமாக வாழவேண்டும் என்ற கேள்வி
நித்தமும் வருகிறது...

உங்களுக்கு?

1 comment: