பத்து வருடங்கள் தாண்டிவிட்டது.
எத்தனையோ சாவல்களை,
சமாளித்து இருக்கிறோம்.
அளவில்லா அன்பை
அள்ளித் தெளித்திருகிறோம்.
காலச் சுழற்சியில்
சிக்கிய போதும்,
மனவுலச்சலின்றி மீண்டிருக்கிறோம்.
இருந்தாலும்,
முன்பிருந்த தருணங்கள் தந்த
ஆனந்தம், இந்நாளில் எங்கும்
காணோம்.
அதே காதலன்,
அதே காதலி,
புரியும் காதலிலும் மாற்றம் இல்லை.
இருந்தும், ஏன் இந்த மாற்றம்?
யோசிக்கிறேன்!
அன்று,
இருவரின் நோக்கமும்,
கைத்தலம் பற்றுவதே,
பற்றியதை பற்றியவண்ணம் கடைபிடிப்பதே!
இன்று,
என் நோக்கம்
உன்னை காதலிப்பதும்,
காதலித்துகொண்டே சமுதாயத்தில்
சிறந்து விளங்க ஒரு நிலையான
இடத்தை அடைவதும்.
அதற்கான போராட்டமும்..
தொடர்ந்து போராட,
என் அறிவும்,
என் ஆற்றலும்,
கூடவே நேரத்தையும் செலவிடுகிறேன்.
செலவிட்ட அறிவும்,
அட்ற்றலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால், நேரமோ தொலைந்து விடுகிறது.
தொலைத்த நேரத்தில்,
காதலும் கரைந்து காணாமல் போகிறது.
காணாமல் போன காதலோடு,
என் காதலியும் தொலைத்து விட்டதால்,
என் முன்னே மனைவி மட்டுமே தெரிகிறாள்.
மனைவிக்கு கணவனாய் நடக்கும்போது....
ஆசைகள் அனைத்தும்,
ஆடம்பரமாய் படுகிறது.
அன்பை அள்ளித்தெளிக்க
அளவுகோல் தேடுகிறது.
கோபங்கள் மட்டும் குறைவின்றி
தெறித்து கொட்டுகின்றன.
குதுகல வார்த்தைகள் கூட,
குஷி படுத்த மறுக்கின்றன.
இப்படி இருக்க...
மறுபுறத்தில்,
காதலியாய் மட்டுமே காத்துக்
கொண்டிருக்கும் மனைவியின்
நோக்கம் மாறாமலே இருக்கிறது.
இவ்வாறே நாட்கள் நகர்ந்தால்,
நீயும் என்னை காதலனாய்
பார்க்க மறுத்து,
கணவனாய் பாவிக்க நேரும்.
பாவித்துவிட்டால்!
நான் இப்போது
சமுதாய இடத்துக்காக போராடும்
போராட்டத்தை, என் இல்லற வாழ்விருக்கும்
போராட நேரும் அவலம் நேரிடும்,
எனப் புரிகிறது.
ஆகவே,
காதலிக்கும் நேரத்தை
இந்த காதலர் தினத்திலிருந்து,
கூட்டப் போகிறேன்,
என் ஆசைக் காதலியே!
தொலைய இருந்த காதலை,
உயிர் கொடுத்து,
ஊக்கபடுத்துவோம்,
ஓடி வா!

Very nice words Ganesh! ! Vazha Tamil. ..:)
ReplyDeleteRomba nalla irukku Ganesh.
ReplyDelete