Monday, 24 January 2011

சாலைப் பூக்கள்

 பஸ் நிறுத்தத்தில் இன்று
என் இருதயம் நின்று போனது.

இரும்பில் செய்த இதயம் கொஞ்சம்
இலகியும் போனது.

மூளையும் என்னை சாலையோரம்
நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தது.

வானத்து விண்மீனொன்று சல்வார்
சூடி சாலையில் பூத்திருந்தது.
பூக்களை பறிக்காதீர்கள் என்ற அறிக்கை
கண்ணில் படாததால் அருகில் சென்றேன்.
பறிக்க அல்ல, ரசிக்க.

கொடியின் உயிரம் என்னை பதம் பார்த்தது.
பூவின் வாசமோ என் சுவாசத்தை
சுத்திகரிப்பு செய்தது.

அகண்ட விழிகள் என்னை விழுங்க
மறுத்து தரையை அழந்து கொண்டிருந்தது.
அறைகுறையாய் தெரிந்த அவள் கரு விழிகளின்
நிறம் நீளம்.

படர்ந்து இருந்த புருவமும் புரட்டி போட்டது.
பெரிய நெற்றி என் தலையை சுற்ற வைத்தது.

கோதுமையில்  கொஞ்சம் மஞ்சள் சேர்ந்த நிறம்
அவள் மேனி நிறம்.
விடைத்த மூக்கும், மாதுளை பற்களும்
விரசம் தூண்டும் இதழ்களும் என்னை இழுத்துப் போட்டது.

கரை புரண்டோடும் சுருண்ட கூந்தல் இடுப்பை
தட்டிக் கொண்டே இருந்தது.

என் ரசனை மேலோங்கி விசாரிக்கலானேன்.
பூவின் பெயர் மல்லிகா, அதையும் சிரித்துக்
கொண்டே, மணக்க மணக்கச் சொன்னாள்.

என்ன வேலை செய்கிறாய் என்றதற்கு,
வாடிக்கையாளர் சேவை என்றாள்.

வெட்கப்பட்டுக் கொண்டே அழகாய்
இருகிறாய் என்றேன்.
அக்கம் பக்கம் பார்த்து பின்,
செருப்பு பிஞ்சிடும் என்றாள்.

வார்த்தை சுருக்கென்று பட்டதால்.
கொஞ்சம் ஸ்ருதி குறைத்து,
என் ஆசையும், ரசனையும் பக்குவமாய்
காதில் ஓதினேன்.

பளார் என்று அறைந்த அவள், தரையை
பார்த்து எச்சியை துப்பினாள்.

ஆத்திரம் வந்து, காதலிப்பதும், திருமணம்
செய்து கொள்ள நினைப்பதும் என்ன
கொலை குற்றமா என்றேன்?
அதற்கு அவள் உன் மாமவிடமே  கேள்
என்று டயல் செய்து கொடுத்தாள்.

ஹலோ சொன்னவரிடம்,
என் காதல் விருப்பத்தைச் சொன்னேன்.
அதற்கு அவரோ,
அரைதினம் காதலிக்க
பத்தாயிரம் என்றார்!!!!!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment