Monday, 6 December 2010

சொத்தைப் பல்

பத்து நாட்கள் படாத பாடு.
மோசமான நிலையில் என் கீழ் கடவாய்
பல்லின் நிலைப்பாடு.
 
பார்பவர்களும், கேட்பவர்களும்,
மனதோடு ஒத்த மனைவியும்,
எனக்காகவே பிறந்த மகளும் சொல்லும்
காரணம்...
இனிப்போடு நான் கொண்ட இணக்கமாம்.
பல்லை கடிக்க முடியாததால்,
நாக்கை கடித்து சொல்லுகிறேன்,
அது தவறான மூட நம்பிக்கை.
 
பற்சொத்தை யாரையும் தாக்கும்.
குழந்தை முதல் குமரி வரை.
குமரி முதல் கிழவி வரை.
இதில் ஆண்பாலும் அடக்கம்.
 
வெண் பற்கள் கொண்ட வீரசாமிக்கும் வரும்,
நிறம் தெரியாத முனியம்மாளுக்கும் வரும்.
 
என் பற்களும் வெண் நிறமே.
தினமும் இருமுறை பல்துலக்கியும்,
ஐந்து முறை பற்கால்வாய் சிகிச்சை செய்தும்,
ஆறாம் பல் என்னை கரகாட்டம் ஆட வைக்கிறது.
 
ஒவ்வொரு சிகிச்சைக்கு பின்பும்,
இனி வரும் முன் காப்பேன்!
என்று சூளுரை எடுத்தும், கடைபிடித்தும்
தோல்வியே கண்டேன்.
 
இம்முறை காரணம் கண்டறிய
குடும்பம் குழந்தை மறந்து,
கூகுளுக்குள் குதித்தேன்.
கண்டதை சொல்கிறேன்,
வீங்கிய பல் காறர்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
 
பல்லின் பாதுகாவலன் எனாமல்.
பல்லின் அஸ்திவாரமோ பர்த்தந்தம்.
ஆயிரக்கணக்கான நுண்ணிய  துவாரங்கள் கொண்டதே பல்.
துவாரத்தை பெரிது படுத்துவது சில துஷ்ட பக்டீரியாயாக்கள்.
 
பக்டீரியாயாக்கள் உயிரோடு உள்ளதை
வீங்கிய ஈர்கலே உறுதி செய்யும்.
சில நேரம் தங்கப் பற்களும் பறை சாற்றும்.
 
இயற்கையாகவே இந்த பக்டீரியாயாக்கள்
வீராசாமி வாயிலும், முனியம்மா ஏறிலும்
இருக்க வாய்ப்பு சாத்தியமே.
 
பக்டீரியா இன்னும் பெருக
கொஞ்சும் க்ளுகோஸ் தேவை.
அவை சர்கரயிலும் கிடைக்கும்,
சாதாரண கேரட்டிலும், அருசியிலும் கிடைக்கும்.
 
பெருக நினைக்கும் பக்டீரியாயாக்கள்
எச்சிலோடு ஒட்டி உறவாடி திரவமாக மாறும்.
மாறிவிட்டாலோ நம் பற்கள்
நேசம் கெட்டு, நிறமும் கெட்டு  அல்லாடும்.
 
இந்த வேலையை இன்னும் சுலபம்
செய்ய நாம் லெமன் சூசோ அல்லது
ஆரஞ்சு சூசோ அடிகடி ரசித்து ரசித்து
குடித்தால் ரெடிமேட் திரவம்
நொடியில் ரெடி.
 
திரவமான துஷ்டன் மெதுவாக முதலில்
பல் எலும்பை துளைபோடும், பிறகு மெல்ல மெல்ல
பல்லின் மேல் புறத்தில்  கருப்பு கொடியோடு
கொடுங்கோல் ஆட்சியை தொடங்கும்.
 
இதோடு கூட சாபிட்ட உடனே படுக்கைக்கு
சென்றால் 32 பல்லும் சொத்தையாகி பின்பு
செத்தும் போகும்.
 
மேலே சொன்ன அனைத்தையும் இடைவிடாமல்
நான் செய்த புண்ணியத்தால்.
இன்று ஒரு கருப்பு கர்ம வீரன்,
கடப்பாரை கொண்டு
மேலிருந்து கீழ்நோக்கி
தொட்டு தொட்டு
பர்தந்ததை பந்தாடுகிறான்.
 
இவனை கொன்று குவிக்க இன்னொரு
பற்கால்வாய் சிகிச்சையே தீர்வு,
தீர்க்கமாய் இருக்கிறேன்.
 
பல்லுள்ளவர்கள் பார்த்து நடக்க,
இந்த பல்குச்சியை சமர்பிக்கிறேன்.

2 comments:

  1. beautiful one..... both intersting and knowledgeable.... excellent depiction abt teeth ... i think it wuld bbe 1 in million poem abt health said in detailed but intersting form...

    ReplyDelete
  2. enna ganesh BDS DOCTORS SEMINORUKKU unna kupiduranga book pannidava?

    ReplyDelete