Sunday, 28 November 2010

எறுமை (சிறுகதை)

ஐயையோ! என்னண்ணா சொல்றேள்?
உண்மதானா? ஒழுங்கா சொல்லுங்கோண்ணா?
ஏன் சவம்மாறி நிக்கிறேள்?
சொல்லித் தொலையும்!

ஏண்டி இப்படி கத்தி ஊரக்கூட்டுறாய்?
ஒன்னுமில்லடி அசமந்தம், நான் தான் சொன்னேனே,
கும்பகோணம் கோனாரு ஆத்து எறுமை கடிச்சிடுத்து!

அப்படி என்னண்ணா எறுமை இருக்கிற இடத்துல நோக்கு
சவகாசம்? இத எப்படி ஊருக்குள்ள சொல்லுவேன்?
மத்த மனுஷாளெல்லாம் உம்ம ஈசமாடால?
உம்ம யாரு கோனாரு ஆத்துக்கு போக சொன்னது?
நான் பாக்கெட் பாலல்ல கேட்டேன்?

இல்லடி பட்டு தீபாவளி பால்கோவா எறுமப் பால்ல பண்ணா
ஏடு ஏடா வரும்ணா என் பால்ய நண்பன் பீதாம்பரம்.
அதான் எறுமப் பாலத்தேடி ஏடா கூடமா மாடிண்டேன்.

கேடு கெட்ட உமக்கு பால்கோவா ஏடு ஏடா கேக்குதோ? சொல்லும்?

சரிடி பட்டு, ஆனது ஆச்சு, அடுத்து என்னன்னு அலட்டாம சொல்லு?
என்ன்னத்த சொல்றதுன்னா டாக்டராதுக்கு போவோம், ஆனா, எந்த டாக்டர பாக்க, மனுஷ டாக்டரா? இல்ல மாட்டு டாக்டரா?

அடியே வணபத்திரகாளி, மனுஷ டாக்டர தாண்டி பாக்கணும்.
சரி வாங்கோ, போய் தொலையுவோம்.

டாக்டராதுக்கு போற வழியெல்லாம் ஒரே சண்டை. பட்டு கத்த, மாமா கத்த,
ஒரு சந்தற்பத்துல மாமா கோபம் உச்சம் தொட்டு, சத்தமா கத்தீடார்.
ஆத்துக்கு பட்டு மாமி, ஏண்ணா இப்படி எறுமை மாதிரி கத்தேராள்னா!
அத கேட்ட மாமா முட்டவே வந்துட்டார்.

டாக்டர ஆத்துல கூட்டமோ கூட்டம், டோகெநெடுத்து அமர்ந்தனர்.
ஏண்டா அம்பி இவாலெல்லாம் எதுக்கு வந்திருக்கான்னு டோகேன் பையன
மாமி கேட்டா. அதுக்கு அம்பி, எல்லாம் காச்சல், தலைவலி, இருமல், ஜலதோஷம் கேசுக்கா.
அம்பி எங்க ஆத்துக்காரர் கேஸ் கொஞ்சம் பெரிசுடா.
பெருசுன்னா என்னக்கா?
எரும டா?
என்னக்கா ஐயாவ எருமைன்னு சொல்லுற?
அதில்லடா அவர எறுமை கடிசிடுத்து.
இதக் கேட்ட மாமா தலையில துண்டப்போட்டு மூடிண்டார்.

டோகேன் பையன் பதரி உள்ளே ஓடி, டாக்டரிடம் உரைக்க,
டாக்டர வியந்து எழுந்து, வெளியே வந்து மாமாவை இன்முகத்தோடு அழைத்தார்.
வெட்ட்கப் பட்டுக் கொண்டே உள்ளே சென்றனர்.
சிரிப்பை அடக்கி கொண்டே டாக்டர நலம் விசாரித்தார்.

சரி சொல்லுங்கோ, எங்க கடிச்சிது?
சந்தகட கருமாரியம்மன் கோவில் சந்தாண்ட கும்பகோணம்
கோனாரு ஆத்து முன்னாடி டாக்டர்.
ஐயா நான் அத கேட்கல்ல! உம்ம உடம்புல எந்த எடத்துல கடிச்சிது?
ஒ அதுவா? வலது தோல் பட்டை மேல டாக்டர்.

என்னையா சொல்றீங்க? எறுமை எகிறி கடிச்சாதான் உம்ம தோல தொட முடியும்.
அப்படி என்ன செஞ்சேல்?
இல்ல டாக்டர், பால் வாங்கிட்டு வெளியே வரும்போது, சாணத்து மேல ஒரு
ரூபாய் நாணயம் மின்னுரத பார்த்தேன், குனிஞ்சு எடுக்கும் போது, எறுமை பயந்து
தோல் பட்டையை பதம் பார்திடிச்சு!

ஒ அப்படியா? ஐயா ரொம்ப ஆழமா பல்லு பதிஞ்சிருக்கு, ஆனா எது மேல் பல்லு, எது கீழ் பல்லுன்னு கண்டுபிடிக்க முடியல, நீங்க கொஞ்சம் சொல்றேளா? எறுமை கடிக்கும் போது, கீழ் தாடை மொதல்ல பட்டுச்சா? இல்ல மேல் தாடை மொதல்ல பட்டுச்சா? சொல்லுங்கோ ஐயா?

ஏன் டாக்டர், உங்க மருந்துல கீழ் தாடைக்கு ஒன்னு, மேல் தாடைக்கு ஒண்ணுன்னு இருக்க என்ன?
இல்லீங்க ஐயா, எல்லாம் ஒரு ஆர்வம் தான். என் செர்வீசுல எறுமை கடிச்ச கேசு நீங்க மட்டும்தான். உங்கள குணபடுதீடன்னா, எறுமை கடிக்கு வைத்தியம் பார்கப்படும்ன்னு போர்டு வச்சிடுவேன். சரி அத விடுங்க. எறுமை கடிக்கும் போது கோபமா இருந்ததா?
டாக்டர் வலிக்கிற வலியபாத்தா கோபமா இருந்த மாதிரி தான் தெரியுது.
சரி கடிச்ச மாட நெனவு இருக்கா?
மாமா யோசிக்கும் போது, பட்டு மாமியோ, ஏண்ணா இப்படி எரும மாடுமேல மழை பெஞ்சமாதிரியே நிகிறேல், சொல்லுங்கோன.
ம்ம்ம் டாக்டர் நல்ல நெனவு இர்ருக்கு, மாடு காதுல பச்ச கடுக்கன் போட்டிருக்கும்.
வெரி குட் ஐயா. உங்க ட்ரீட்மென்ட் முடியும் வரை ஜாக்கிரதையா பார்த்துகொங்கோ!
சரி டாக்டர், ஒரு மாதம் லீவு போட்டு வீட்லேய இருந்து உடம்ப நல்ல பார்த்துக்குறேன்.
ஐயா உங்க உடம்ப சொல்லல, எறுமை உடம்ப. எருமைக்கு எதாவுதுன்னா, உங்கள கடவுள் கூட காப்பாத்த முடியாது, புரியுதா?
புரியுது டாக்டர்.
சரி இந்த மருந்த வேலா வேலைக்கு போடுங்க.
டாக்டர் எறுமை மாத்திரை சாப்பிடுமா?
அடடே மாத்திரை உங்களுக்கு ஐயா! போய்வாங்கோ. உங்க கேசை லண்டனுக்கு அனுப்புறேன். அவுங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க, மருந்தும் அனுப்புவாங்க.
சரி டாக்டர் போய் வரேன்.

பட்டுவ வீட்டுக்கு அனுப்பி, சந்தகட சந்து வந்தார் மாமா.
கோனாரு வீடு போயி நடந்ததை சொன்னால். கோனாரு நம்பவே இல்லை.
பின்பு காயத்தை பார்த்து நம்பினார் கோனார்.
ஏனென்றால் எல்லா எருமையையும் பல்லை பிடித்து பார்த்தே வாங்கியவர் ஆயிற்றே. பல்லச்சை பாத்து வெள்ளையனிடம் இட்டுச்சென்றார், அறிமுகபடுத்தினார்.
மாமா பயந்து பயந்து உறுதிப் படுத்தினார் கடித்த வெள்ளையனை.

வாங்கி வந்த புண்ணாக்கு, உயர்தர தட்டு குச்சி, சோழக் கருது, ஆரஞ்சு, ஹோர்லிக்ஸ் மற்றும் அருகம் புல்லை கோனாரிடம் கொடுத்து வெள்ளையனை கண்ணும் கருத்துமாக பார்துகொல்லச் சொன்னார் மாமா. அதோடு நிறுத்தாமல் சோழக் கருதும், ஆரஞ்சும் இன்று இரவு மட்டும் தர வேண்டாமென்று சொன்னார்.
புரியாத கோனார் என்னென்றார்?
மாமாவோ நாளை காலை முதல் மூத்திரத்தையும், முதல் சாணத்தையும் வைத்து டாக்டர் சர்கரை நோய் வெள்ளையனுக்கு இருக்கா, இல்லீயா என்று பரிசோபிபதை எடுத்து சொன்னார். சர்கரை நோய் இருந்தால் என் த்ரியமென்ட் அவதிக்குள்ளாகும் என்று சொல்லி மாமா நகர்ந்தார்.

ஒரு மாதம் இடை விடாமல் உடம்புக்கு மருந்தும், மாட்டுக்கு கல்நீரில் ஹோர்லிக்க்சும் கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் பல லோக்கல் டிவி சேனல்கள் மாமாவை பேட்டியும் கண்டனர். மாமா விருப்பு, வெறுப்புகள், பிடித்த பாடல்கள், பொழுதுபோக்குகள், எறுமை கடிக்காமல் இருந்தால் என்ன செய்து கொண்டிருபீர்கள் போன்ற கேள்விகளை நேயர்கள் பதிவு செய்த, சில நேரம் நேரடி ஒளிபரப்பில் கண்டு கழித்தனர்.

எப்படியோ மாமா குணமாகி, எருமையும் உண்டு உண்டு சினையாகி இருந்த தருணம். வீட்டின் கதவை தட்டிய சத்தங் கேட்டு திறந்தார்.
சில நொடிகளில் வெடுக்கென்று கதவை மூடி உள்ளே வந்தார்.
இதை பட்டு வினவ.
மாமா சொன்னார், லண்டன் BBC இல் Worlds Most  Extrodinary  People ன்னு ஒரு ப்ரோக்ராம்முக்கு என் பேட்டி வேணுமா அந்த கடன்காரங்களுக்கு......

3 comments:

  1. very nice Ganesh...
    good humour!!!
    keeo writing!!!
    gopal

    ReplyDelete
  2. Ganesh... I am amazed to see the Story writer Ganesh.. Enjoyed the story very much ... Particular the "Avaa" slang, I could imagine the screen and the flow is very nice, wonderful... please write more. Also you should try entertainment media too. Wish you all the Best....

    ReplyDelete
  3. A good light hearted story. But was expecting a twist at the end .... Expecting more light hearted stories from you.

    ReplyDelete