Saturday, 27 July 2013

நான் கடவுள்!!!

 விந்தை வித்தாக்கி,
வீதி வந்தடைந்த தோண்டியே?

நீ தோன்றிய முதலாய்,
தொட்டதையும், பார்த்ததையும்,
நினைத்ததையும், கேட்டதையும்,
கவனமின்றி பற்றிக்கொண்டு....

அதைத் தக்கவைக்க,
பேயனாய் சுற்றித் திரிந்து,
நிந்தன் நிந்தையை அறியாமலே,
உடல் நீர்த்துபோய்,
சவமாகி, சுடலையடைந்து,
தோண்டியுடைந்து,
சாம்பலாய் போயினவே......

மானுடத் தோண்டியே!
நீ மண்ணாய்ப் போவதற்குள்,
மானுடத்தின் பயனறிய,
மந்திரம் சொல்கிறேன்,
மண்டியிட்டு கேள்!

ஐந்து பூதங்களின்
ஆதாரக் கலவையே நீ.

உன் தேகத்தில்,
ஐந்து நிலமும்,
நான்கு நீரும்,
மூன்று நெருப்பும்,
இரண்டு வாயுவும்,
ஒரே ஒரு ஆகாயமும் அடக்கம்.

இந்த ஆகாய பூதமே மனம்.
மனமிருந்ததாலே நீ மனுசனாய்,
அறியப்படுகிறாய்....

இந்த உலகமானது,
அண்டவெளியிலிருந்து உருவானதே.

வாழ்வில் எதிர்கொள்ளும்,
இன்பத்திற்கும், துன்பதிருக்கும்,
ஆகாய பூதமே காரணம்.
புரிந்துகொள்!

இந்த ஒரு பூதத்தை,
சரிசெய்தால், மற்ற பூதங்களும்
தானாகவே சரியாகும்.

மனதை சரி செய்யவே,
கோயில்களும், வேதங்களும்,
உருவாகப் பட்டன.

எவனொருவன் தண்ணுடலை,
கடந்து உள் செல்கிறானோ?
அவனே கடவுள்.

நீ கடவுலானபின்,
அருகிலுள்ளவனையும் கடவுளாக்கு.
அவனும் கடவுளென உணர்ந்தால்,
அங்கே தெய்வீக சூழல் உண்டாகும்.
அதுவே தெய்வமென அறியப்படும்.

ஆக கடவுள் வேறு,
தெய்வம் வேறு என்பதை
புரிந்துகொள்.

தன்னை தானறியாமல்,
கோயில் கண்டும்,
வேதம் ஓதியும்,
கடவுளை உணர முடியாது.

மனமே கோவில்,
அதனுள் அமர்திருக்கும் நீயே,
கடவுள்.

மனதை அறிவதும், அடக்குவதும்,
ஆள்வதும் எப்படி?

முதலில் நீ யாரென்று
அறிந்துகொள்.

உன்னையறிய, தேகம் போற்று,
தேகம் போற்ற,
பஞ்சாட்சரம் ஜெபி.

முறையான தியானம் பழகு,
மூலாதாரத்து ஜோதியை,
கருத்தில் இருத்தி,
கபாலமேற்று.

மனது மாடு போன்றது,
மேய்ந்து கொண்டே இருக்கும்,
மேய மேய, எண்ணைகள் உதிக்கும்,
உதிக்க உதிக்க, மாயவலை பிண்ணப்படும்,
பிண்ணிப் பிண்ணி, அதுவே உலகமாகும்.

இந்த மாயை வேட்டையில்,
சிக்கித் சிதறி,
மன்றாடும் மானிட வர்க்கமே,
நீ தான்...

இதில் பெரும்பாலும் உன் மனம்,
பிறறின் ஆசையை,
பிறறின் லட்சியத்தை ,
பிறறின் துக்கத்தை,
சுமந்து கொண்டும்,
அதை அடைய முற்பட்டுகொண்டும்,
வாழ்வதை உணரிந்து கொள்!

இந்த பிறறின் அபிலாசையை
அகற்ற, அடிக்கடி தேக
விசாரணை செய்து கொள்!

எண்ணங்கள் உதிக்கும்போது,
விசாரித்த பின்பே பதிந்துகொள்!

எப்பொழுதும் விசாரியுங்கள்,
எதையும் விசாரியுங்கள்,
எல்லாவற்றையும் விசாரியுங்கள்!

விசாரித்து பதிந்த எண்ணைகள்,
தெளிவான, உங்களுக்கான எண்ணங்களே.
இதுவெறும் சொற்ப எண்ணங்களே,
இதை அடைய அதிக,
அவகாசம் தேவையிரா!!!

நினைத்த அனைத்தையும் அடைந்துவிட்டால்,
மரணத்தையும் எளிதில்,
ஏற்றுக்கொள்வீர்!

இந்த புத்தாண்டிலிருந்து,
தினந்தோறும்,
பஞ்ச பூத தேகத்தை போற்றுவோம்,
மனதை புரிந்துகொண்டு,
மனித பிறப்பின் பயனை அறிந்துகொண்டு,
வாழ்வாங்கு வாழ்வோமாக!!!!!!!!!!! 

No comments:

Post a Comment