Saturday, 27 July 2013

ஒரு அபலையின் கண்ணீர்.....

உம்மக் கைபுடிக்க,
உம்மனச குளிரவைக்க,
பெத்தவளையும்,
பேரு வட்ச்சவனையும்,
ஊர் சிரிக்க விட்டுப்புட்டு,
ஓடியாந்தேனே?

ஒய்யாரமா இருப்பேன்னு,
ஓராயிரம் கெனாக் கண்டேன்!

ஒரு கெனாவும் பலிக்கிலியே,
உனக்கு இந்த சிரிக்கி
மனம் புரியலியே?

கைபுடிச்ச நாள் மொதலா,
கண்கலங்க வைக்கிறியே?
கன்னிப் பொண்ணுன்னு பார்க்காம,
காலால ஒதைகிறையே?

வலியொன்னு தெரியாம,
வளந்த பொண்ணு நானாக்கும்,
இப்போ எந்த அடிக்கு,
எந்த மருந்துன்னு மனப்பாடம் செஞ்சேனே?

அடிச்சாலும், ஓதச்சாலும்,
அடி மனசுல நீ தான் மாமா,
கொஞ்சம் புடிகுடுக்கக் கூடாதோ?

ஆடம்பர வீடு வேணாம்,
அடுக்கடுக்கா நகையும் வேணாம்,
நொடிக்கொரு தரம்,
மவன கொஞ்சவும் வேணாம்.

ஆசை ஆசையா உருகிறியே,
ஐயோன்னு பதருறியே,
கல்லுகுடிச்சாலும் கொணம் மாறாம பேசுறியே,
பித்துப் பிடிச்சு பின்னாடியே திரியிறியே,
நடுசாமத்திலும் நினைக்கிறியே,
இப்படி ஊர் தோழிகளுக்கு,
உசுர குடுக்குற நீ,
ஒட்டியே இருக்கிற எனக்கு,
ஆடிகொரு தரம்,
அடுப்படிக்கு வந்து,
மனசார அள்ளி முடியக் கூடாதோ?

இதைக் கேட்ட பாவத்துக்கா,
அல்லையில எட்டி உதைப்ப?
திடீருன்னு இத பாத்த,
எம்புள்ள வெசனப்பட்டு நடுங்கிடிச்சு !

கோவத்த கொறசுக்க சாமி,
ஆத்திரப்பட்டு, அப்பனூடுக்கு அனுப்பிடாதே..?
அவகாசம் கொஞ்சங் கொடு,
ஆசமவன் தூங்கிடட்டும்...

உன் ஆத்திரம் கொறைய,
இந்த அம்மணிய அடிச்சுப்போடு,
ஆன்னு அழமாட்டேன்,
ஊன்னு கத்தி,
ஊரக்கூட்டமாட்டேன்,
அமைதியா வாங்கிகுவேன்.

ஆறாறோ ஆறிறாறோன்னு,
பாட்டு படிச்சு, பிஞ்சு மவன,
தூங்கவச்சா!!

மவன் தூங்கினத புரிஞ்ச, ,
கம்ச மவராசா,

காஞ்ச வெறகு கொண்டு,
ராமாயிய காய்ச்சி எடுத்தான்,
காலுல, கையில, முதுகுலன்னு,
மாறி, மாறி மந்திரிச்சு எடுத்தான்.

முந்தான தலப்பு கொண்டு,
வாயிக்கு அடப்பு கொடுத்து,
அடி வாங்கி அடி வாங்கி,
சுருண்டு விழுந்தா...

வெறகு ஒடஞ்சு போனதால,
மவராசி உசிரு ஏனோ பொலசிறிச்சு .

பொலச்ச பொம்பள உசிரு,
பொதகுலிக்கு போகும்வர,
பேணிக் காக்க வேணுமானா,
நெதம் நெதம், இந்த
ஆம்பள அசிங்கத்தை அண்டித்தான்,
இருக்கனும்.

சில நேரங்கள்,
ஒரு தெரு நாயைப்போல,
இந்த நாசமாப்போன
நயவஞ்சகனை நக்கித்தான்
பொழச்சாகனும்...

இந்த திமிர் பிடித்த ஆண் கிரிமிகளை,
உயிர் கொல்லி தாக்காதோ?

தாக்கிய தேகத்தை வலுவிழக்க செய்யாதோ?
வலுவிழந்த தேகத்தில் சீழ் புகுந்து கொள்ளாதோ?
சீழ்பிடித்த தேகத்தில் புழுபுழுத்து சீரழியாதோ?
சீரழிந்த தேகம் பூத உடலாகும் முன்பு,
கொடூர நரக வேதனையை,
குறைவின்றி அனுபவித்து,
மாளமாட்டாறோ????

No comments:

Post a Comment