Saturday, 27 July 2013

நிலையற்ற நிலை.....!

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!!
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!

இருட்டு.
இருட்டோ இருட்டு.

அங்கம் அடைபட்டுக் கிடக்கிறதே,
ரணமான ரணம்.

ஏதோ அதளபாதாளத்தில்,
புதையுண்டு கிடக்கிறேனோ?

வலியால் அலறி அலறி,
துடிக்கிறேன்.
கண்ணீர் கூட கசிய மறுக்கிறது.

விதியை நினைத்து,
விம்ம ஆரம்பித்து,
எங்கே இருக்கிறேனென்று,
யூகித்து யூகித்து,
புரிந்து கொண்டேன்.

ஆம்,
நான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த கொடூர நரகத்திலிருந்து விடுபட,
இறைவனை வேண்டினேன்.

கடவுளே எனக்கு
மட்டும் ஏன்?
சோதனை சோதனை,
மேலும் மேலும் சோதனை.

என்னால் உலகத்தை பார்க்கமுடியாதா?
உலகோடு உறவாட முடியாதா?
நான் படும் பாட்டை,
போக்கமாடாயா?

கதறி, கதறி பிராதித்தும்,
பதில் கிடைக்கவில்லை.

வெறுத்துப்போய்,
கண்கள் மூடி,
கிடந்தேன்

நாட்கள் கழிந்தன,
நிலைப்பாடு மாறவில்லை.

ஒரு நாள்,
ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன்

அந்தக் குரல் சொன்னது,

கவலைப்படாதே!
இது முடிவல்ல.
இது உன் நிரந்தர நிலையன்று.
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.

என்று சொல்லி முடித்தது.

சிலமாதங்கள் கழித்து,
ஒரு நாள்,
அடை மழை,
என் மேனி முழுதும்,
மழை நீர் நனைத்தது,
மண்ணோடு நான்,
பிண்ணிப் பிணைந்தேன்,
ஏதோ ஒரு பூரிப்பு,
இனம் தெரியாத சந்தோசம்,
சொல்லமுடியாத மகிழ்ச்சி,
சற்றுத் திளைத்துப்போனேன்.

திடீரென்று, உடலில் ஒரு மாற்றம்,
அங்கம் சுற்றிலும்,
ஏதோ வளர்கிறது,
வளர்ந்துகொண்டே இருக்கிறது,
மேலும் கீழும், இடமும் வலமும்,
முளைத்து முளைத்து,
மண்ணைப் பிளந்துகொண்டு,
மேலே வரப்பெற்றேன்.

ஒரே வெளிச்சம்,
செங்கதிர்கள் தேகத்தை தாலாற்றிற்று,
நான் பூமியில் இருந்து,
வெளியே வந்துவிட்டேன்

சூரியன் தெரிகிறது,
வானம் தெரிகிறது,
செடி கொடிகள் தெரிகிறது,
தென்றல் தீண்டுகிறது,
சுவாசிக்க முடிகிறது,
பேரானந்தத்தில் இன்புற்று இருந்தேன்.

சில காலம் கழித்து,
ஒரு ஏக்கம்.

அருகில் உள்ள மரங்களும்,
செடிகளும்,
அழகாய் திடமாய் இருக்க,
நான் மட்டும் தளிராய் இருக்கிறேனே
என்ற வருத்தம்.

வேதனை கூடக் கூட.
கவலை காதடைத்தது.

அப்பொழுது,
உள்ளுக்குள் ஒலித்தது,
அதே குரல்.

கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.

என்று சொல்லி முடித்தது.

வேதனையை தவிர்த்து,
என்னை நானறிய,
கற்க்கலானேன்.

சில மாதங்களில்,
செடியானேன்.

வேர்கள் வலுப்பெற்று,
பூப் பூத்து,
காய் காய்த்தது.

இது வேறு மாதிரியான,
ஆனந்தம்.
எனை மறந்து,
கலியாட்டமாடி களைத்திருந்தேன்.

யாரோ என்னை அசைக்கிறார்கள்,
விழித்துப் பார்த்தால்,
ஒரு குட்டி யானை.
என் இழைகளை,
உண்டுகொண்டிருந்தது,
துதிக்கையால், என்னை
இறுக்கி இறுக்கி,
உயிரை உருவ நினைத்தது.
துடிக்கிறேன், அழுகிறேன்,
கண்ணீரில் கரைகிறேன்,
தேகம் முழுதும், துயரம் அப்பிக்கிடந்தது.

நல்ல வேலை,
யானை பசியடங்கி,
விலகிச் சென்றது.

காயத்தோடு,
சுற்றி முற்றிப் பார்த்தேன்,
மயான அமைதி,
காட்டு யானைகள்,
செடிகொடிகளை சிதைத்திருந்தது,
ஆனால் பெரும் மரங்கள்,
மட்டும் சேதாரமின்றி,
ஜீவித்திருந்தது.

ஆண்டவா!
ஏன் சோதனை மேல் சோதனை தருகிறாய்,
என் நிம்மதியை,
கொஞ்சம் நீட்ட மாட்டாயா?
என்னையும் அடர்ந்த மரமாய்,
உருமாற்ற மாட்டாயா?
என்று கெஞ்சினேன்.

திரும்பவும் என்னுள்,
அதே குரல்,

கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.

என்று சொல்லி முடித்தது.

உலகத்தை உற்றுப் பார்ப்பதை,
தவிர்த்து,
உள்நோக்கி பார்க்களானேன்.
அறிந்துகொண்டேன்,
பல அற்புதங்களை.

ஆண்டுகள் கழிந்தன,
புறம் என்னவாயிற்று என்று,
விழித்துப் பார்த்தால்,
ஆச்சிர்யம்!!

நான் அடர்ந்த மரமாய் மாறியுள்ளேன்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்,
பறந்து விரிந்து கிடக்கிறேன்.
பல நூறு பறவைகளின்,
வீடாய் இருக்கிறேன்.

பலரும் பசியாற,
பழங்கள் தருகிறேன்.
ஓய்வெடுக்க என் கிளையை,
விரித்து நிழல் தருகிறேன்.

இதை எண்ணி எண்ணி,
ஈடு இணையற்ற இன்பத்தில்,
இளைப்பாறினேன்.

இதற்க்கு மேல் என்னவேண்டும்
இவ்வையகத்தில்.
மறித்துப் போ! என்றாலும் கூட,
மறுக்க மாட்டேன்.

உடனே அடித்தது,
சூறாவளிக் காற்று.
அருகில் இருந்த செடி கொடிகள்,
சின்னாபின்னமாகின.
சிறு தளிர்களெல்லாம்,
செத்துப் போயின.

என் உடம்பும் உலுக்கி,
எடுத்தது
என் வாரிசு விதைகளெல்லாம்,
எனை விட்டு வெளியே தூக்கி,
எறியப்பட்டன.

ஆனாலும், நான் அங்ககீனமாகாமல்,
அங்கேயே இருந்தன

சில மணி நேரம் கழித்து,
காடெங்கிலும் மரண ஓலம்.

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!!
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!

என்று வீசி எறியப்பட்ட,
விதைகள் அழுது,
புலம்பின.........

விபச்சாரம்...(குறுங்கதை)

ரங்காச்சாரி நல்லவர்,
நாளும் தெரிந்தவர்.
சுத்த சைவர்,
நடுத்தர வர்க்கமானாலும்,
நியாயமானவர்.

நிதானமாக நாளிதழ்கள் புரட்டினாலும்,
புரண்டு தவிப்பது இவரே.
வரும் கற்பழிப்பு செய்திகள்,
மனதை ரணப்படுத்தும்.

இவரின் பாராட்டைப் பெறுவது
விபச்சார அழகிகளின் கைது
செய்தி மட்டுமே.

நிதம் நிதம்,
விபச்சாரம் கொலைக்கு
சமமென்று கோஷமிடுவார்.

இவரின் எதிர்
அடுக்ககத்தில் ஒர் பேரழகி.
பார்வையே போதும்,
பஸ்பமாகி விழ.

நேர்த்தியான முகம்,
நெஞ்சை அள்ளும் சிரிப்பு,
வழிந்தோடும் கூந்தல்,
வகையான நடை.

இவள் உடுத்தும் உடையனைத்தும்,
பார்ப்பவரை உடையச்செய்யும்.

தினமும் காலையில் ஒருவர்,
மாலையில் ஒருவர், காரில்
ஏற்றி, இறக்கி விடுவர்.

உதட்டுச் சாயம் கூட,
காலை வேறு, மாலை வேறு.
இதைக் கூட கூர்ந்து கவனித்து,
கவனத்தில் வைத்திருக்கின்றனர்,
தெருவாசிகள்.

ரங்காச்சாரி மட்டும்,
அழகியை ஒரு தெரு நாயைப்
போல் பார்பார்.

அவள் விபச்சாரியே தான்,
என்று முடிவும் செய்துவிட்டார்.

இவருக்கு ஒரு மகன்,
இரு மகள்கள் உண்டு.

மூவரையும் கண்ணியம்
குலையாமல் வளர்கிறார்.

இருவரில் ஒருத்தி,
இறந்துபோன மனைவிபோல்,
மிக மிக அழகானவள்.
பல துணை இயகுனர்கள்
தூண்டில் போட்டும்,
சினிமாவில் சிக்காதவள்.

இன்னொருத்தியோ,
தன் உயிர் நண்பன்
பரிசாய் கொடுத்த
உயர் ஜாதி நாய் - பிங்கி.
இவளும் கூட, எந்த நாயைப்
பார்த்தும் பல் இலிக்காதவள்.

ஒரு நாள் கல்லூரி
சென்ற மகன்,
நடுரோட்டில் லாரி மோதி
விழுந்தான்.
அவசர சிகிட்சையில் அனுமதி.
பெரிய அறுவை சிகிச்சை
செய்து காப்பாற்றினார்.

பல இடத்தில கடன்பட்டதால்
சமாளிக்க முடியாமல்
தற்கொலைக்கு தயாராகி,
தைரியப் பற்றாக்குறையால்
தப்பித்தார்.

இதிலிருந்து மீள,
ஒரு நண்பனின்
அறிவுரை படி
முதலில் கோபப்பட்டு
பின்பு வெறும் பணத்திற்காக,
மனதை கல்லாக்கி,
தன் மகளை
கூட்டிக்கொண்டு,
ஒரு இடைத் தரகர்போல்,
தோட்டத்து பங்களாவிற்குள்
நுழைந்தார்.

முதலாளி மேலும் கீழும் பார்த்து
பரவசப் பட்டார்.
கொள்ளை அழகில்
சொக்கி நின்றார்.

ரங்காச்சாரி அழுதுகொண்டே,
முதலாளி காதில்,
பாசமா வளர்த்துட்டேன்,
அதிர்ந்து கூட நடக்க மாட்டாள்,
வீட்டில் இருபதே தெரியாது,
கொஞ்சம் பார்த்து நடத்துங்கோ என்றார்.

சரி என்றதுபோல்
சிரித்துக்கொண்டே
அவளை அறைக்குள்
அழைத்துக்கொண்டு
அறைக்கதவைத் தாழிட்டார்.

வெறியோடு இருந்த
நாயொன்று சீறிப் பாய்ந்து
தன் ஆசை மகளை
சிதறவிட்டு, சீர் குலைத்தது.

காமவேட்டையின் சத்தம் கேட்டு,
ரங்காச்சாரி வராண்டாவில்
ஒரு கிழ நாய்போல்
கூனிக் குறுகி
துண்டால் வாய்பொத்தி,
விம்மி விம்மி அழுகிறார்.

சில மணிநேரம் கழித்து
வெளியே வந்த முதலாளி,
ரங்காச்சாரியிடம்,
ஒரு வேலை இவள் பிரசவித்தாள்,
ஒவ்வொரு குட்டிக்கும்,
இரண்டு லட்சம் தருவேன்
என்றார்.......!!!

வர்ணஜாலம்

கருவறை கருப்பிருட்டைப்
பழகிய குழந்தை.

உலகத்து வெள்ளை வெளிச்சம்
பட்டு உற்சாகம் கொள்கிறது.

வண்ணங்கள் தட்டுப்படும்போது,
அதன் துள்ளல்கள் தலை தூக்குகிறது.

ஒவ்வொரு நிறத்திற்கும்,
ஓர் மகத்துவம் உண்டென்பர்.

நிறங்கள் விழியடைந்து,
வேதியல் மாற்றம் ஊற்றேடுபதால்,
தேகம் சிலாய்த்துப் போவதும்
உண்மையே.

இதை உணர்ந்து,
கொஞ்சம் உள்வாங்கி,
என் குடியிருப்பின்,
நிறத்தையும் மாற்றலானேன்.

வாழரையில்,
நீல வானத்தை சற்று சுருக்கி,
பிரதான சுவரில் சூடினேன்.
மற்ற சுவர்களில்,
இளம் பச்சையில்,
இளைத்தெடுதேன் - இந்நிரங்கள்,
மனச்சிக்களின் வீரியத்தை,
மங்கச் செய்யுமாம்.

பசியாறும் அறையை,
இளம் சிகப்பு நிறத்தில்,
முக்கி எடுத்தேன் - இது
செரிமான சக்தியை
அதிகரிக்குமாம்.

சமையல் அறைக்கு,
பழுப்பு நிறம் - இது
சமைப்பவரின் சலிப்பை,
சற்று குறைக்குமாம்.

படுக்கை அறைக்கு,
பல பல வண்ணங்களின்
கலவை நிறம் - இது
கருத்து வேறுபாடுகளை,
கத்தரித்து விடுமாம்.

குழந்தையின் அறையில்,
பொம்மைகள் நிறைந்த
ஓவியங்கள் - இது
குழந்தை தன்மையை குறையாமல்,
பார்த்துக் கொள்ளுமாம்.

குளியல் அறைக்கு,
நீர்வீழ்ச்சி நிறம் - இது
குளிப்பவரின் கவனத்தை
குளிப்பதில் மட்டுமே கட்டிப்போடுமாம்.

கழிப்பறைக்கு,
வயல்வெளி நிறம் - இது
காலைக்கடனை சுமூகமாக்கும்.

இந்த ரம்மியத்தை,
ருசித்துப் பார்க்க,
பலாயிரம் செலவு செய்து,
நிறங்களைத் திருத்தியமைதேன்.

வண்ணப் பரிச்சைக்கு,
என் நான்கு வயது,
வண்ண மகளை,
அவளின் மூன்று வயது
நண்பணோடு,
குழந்தை அறைக்கு கூடிச்
சென்றேன்.

ஆச்சிரியமாய் பார்த்தாள்,
அடுத்த நொடியே,
நண்பனோடு ஓடி விளையாட,
ஆரம்பித்து விட்டாள்,
வேறு அறையில்!!!

பல நாட்கள் முயன்று பார்த்தும்,
அந்த அதிசிய அறை,
அவளை வசியப்படுத்தவே இல்லை.

ஒவ்வொரு முறையும்,
நான் மட்டுமே குழந்தையாய் மாறினேன்.

மனச்சிக்கல் குறைந்ததாய்,
நம்பலானேன் - இருந்தும்
ஒரு மனநோயாளியாய்,
வாழரையில் வாடிக் கிடந்தேன்.

பல வண்ணத்தில் நம்பிக்கை கொண்டு,
பொய் காதல் பூண்டு,
கட்டிப் புரண்டோம் - இன்றோ
ஒரே படுக்கையறையில்
இரு படுக்கைகள்.

படுக்கை தனியானதால்,
அடுப்படியிலும் பிளவு.

களிப்பரைகூட,
காலையில் கடுப்பேற்றுகிறது.

எங்கே போயின,
வர்ணஜாலத்தின் மகிமை?
ஆசையின்றி ஆராய்ந்தேன்.....

ஐயும் புலன்களுக்கும்,
நிறத்திற்கும், தொடர்பிருப்பது,
உண்மையே.

மரங்களின் பச்சை நிறம்,
நம்மை பாந்தப் படுத்தும் - எப்போது?

பச்சை நிறம் விழிகளில்,
விழும்பொழுது - கூடவே
மரத்தின் தென்றல் நம்
தேகத்தை தீண்டும்போது.

நீல வானம்,
நிம்மதி தரும் - எப்போது?
வானத்தில் சிறகடித்து பறக்கும்,
பறவைகளின் ரீங்காரம் நம்,
செவிகளை சில்லிப்பூட்டும் பொழுது.

இதை புரிந்துகொள்ளாமல்,
இயற்கையை செயற்கை முறையில்,
சிறைபிடிக்க நினைத்தால்,
அடைபட்டுக்கொள்வது,
நாம் மட்டுமே......!!!

நான் கடவுள்!!!

 விந்தை வித்தாக்கி,
வீதி வந்தடைந்த தோண்டியே?

நீ தோன்றிய முதலாய்,
தொட்டதையும், பார்த்ததையும்,
நினைத்ததையும், கேட்டதையும்,
கவனமின்றி பற்றிக்கொண்டு....

அதைத் தக்கவைக்க,
பேயனாய் சுற்றித் திரிந்து,
நிந்தன் நிந்தையை அறியாமலே,
உடல் நீர்த்துபோய்,
சவமாகி, சுடலையடைந்து,
தோண்டியுடைந்து,
சாம்பலாய் போயினவே......

மானுடத் தோண்டியே!
நீ மண்ணாய்ப் போவதற்குள்,
மானுடத்தின் பயனறிய,
மந்திரம் சொல்கிறேன்,
மண்டியிட்டு கேள்!

ஐந்து பூதங்களின்
ஆதாரக் கலவையே நீ.

உன் தேகத்தில்,
ஐந்து நிலமும்,
நான்கு நீரும்,
மூன்று நெருப்பும்,
இரண்டு வாயுவும்,
ஒரே ஒரு ஆகாயமும் அடக்கம்.

இந்த ஆகாய பூதமே மனம்.
மனமிருந்ததாலே நீ மனுசனாய்,
அறியப்படுகிறாய்....

இந்த உலகமானது,
அண்டவெளியிலிருந்து உருவானதே.

வாழ்வில் எதிர்கொள்ளும்,
இன்பத்திற்கும், துன்பதிருக்கும்,
ஆகாய பூதமே காரணம்.
புரிந்துகொள்!

இந்த ஒரு பூதத்தை,
சரிசெய்தால், மற்ற பூதங்களும்
தானாகவே சரியாகும்.

மனதை சரி செய்யவே,
கோயில்களும், வேதங்களும்,
உருவாகப் பட்டன.

எவனொருவன் தண்ணுடலை,
கடந்து உள் செல்கிறானோ?
அவனே கடவுள்.

நீ கடவுலானபின்,
அருகிலுள்ளவனையும் கடவுளாக்கு.
அவனும் கடவுளென உணர்ந்தால்,
அங்கே தெய்வீக சூழல் உண்டாகும்.
அதுவே தெய்வமென அறியப்படும்.

ஆக கடவுள் வேறு,
தெய்வம் வேறு என்பதை
புரிந்துகொள்.

தன்னை தானறியாமல்,
கோயில் கண்டும்,
வேதம் ஓதியும்,
கடவுளை உணர முடியாது.

மனமே கோவில்,
அதனுள் அமர்திருக்கும் நீயே,
கடவுள்.

மனதை அறிவதும், அடக்குவதும்,
ஆள்வதும் எப்படி?

முதலில் நீ யாரென்று
அறிந்துகொள்.

உன்னையறிய, தேகம் போற்று,
தேகம் போற்ற,
பஞ்சாட்சரம் ஜெபி.

முறையான தியானம் பழகு,
மூலாதாரத்து ஜோதியை,
கருத்தில் இருத்தி,
கபாலமேற்று.

மனது மாடு போன்றது,
மேய்ந்து கொண்டே இருக்கும்,
மேய மேய, எண்ணைகள் உதிக்கும்,
உதிக்க உதிக்க, மாயவலை பிண்ணப்படும்,
பிண்ணிப் பிண்ணி, அதுவே உலகமாகும்.

இந்த மாயை வேட்டையில்,
சிக்கித் சிதறி,
மன்றாடும் மானிட வர்க்கமே,
நீ தான்...

இதில் பெரும்பாலும் உன் மனம்,
பிறறின் ஆசையை,
பிறறின் லட்சியத்தை ,
பிறறின் துக்கத்தை,
சுமந்து கொண்டும்,
அதை அடைய முற்பட்டுகொண்டும்,
வாழ்வதை உணரிந்து கொள்!

இந்த பிறறின் அபிலாசையை
அகற்ற, அடிக்கடி தேக
விசாரணை செய்து கொள்!

எண்ணங்கள் உதிக்கும்போது,
விசாரித்த பின்பே பதிந்துகொள்!

எப்பொழுதும் விசாரியுங்கள்,
எதையும் விசாரியுங்கள்,
எல்லாவற்றையும் விசாரியுங்கள்!

விசாரித்து பதிந்த எண்ணைகள்,
தெளிவான, உங்களுக்கான எண்ணங்களே.
இதுவெறும் சொற்ப எண்ணங்களே,
இதை அடைய அதிக,
அவகாசம் தேவையிரா!!!

நினைத்த அனைத்தையும் அடைந்துவிட்டால்,
மரணத்தையும் எளிதில்,
ஏற்றுக்கொள்வீர்!

இந்த புத்தாண்டிலிருந்து,
தினந்தோறும்,
பஞ்ச பூத தேகத்தை போற்றுவோம்,
மனதை புரிந்துகொண்டு,
மனித பிறப்பின் பயனை அறிந்துகொண்டு,
வாழ்வாங்கு வாழ்வோமாக!!!!!!!!!!! 

ஒரு அபலையின் கண்ணீர்.....

உம்மக் கைபுடிக்க,
உம்மனச குளிரவைக்க,
பெத்தவளையும்,
பேரு வட்ச்சவனையும்,
ஊர் சிரிக்க விட்டுப்புட்டு,
ஓடியாந்தேனே?

ஒய்யாரமா இருப்பேன்னு,
ஓராயிரம் கெனாக் கண்டேன்!

ஒரு கெனாவும் பலிக்கிலியே,
உனக்கு இந்த சிரிக்கி
மனம் புரியலியே?

கைபுடிச்ச நாள் மொதலா,
கண்கலங்க வைக்கிறியே?
கன்னிப் பொண்ணுன்னு பார்க்காம,
காலால ஒதைகிறையே?

வலியொன்னு தெரியாம,
வளந்த பொண்ணு நானாக்கும்,
இப்போ எந்த அடிக்கு,
எந்த மருந்துன்னு மனப்பாடம் செஞ்சேனே?

அடிச்சாலும், ஓதச்சாலும்,
அடி மனசுல நீ தான் மாமா,
கொஞ்சம் புடிகுடுக்கக் கூடாதோ?

ஆடம்பர வீடு வேணாம்,
அடுக்கடுக்கா நகையும் வேணாம்,
நொடிக்கொரு தரம்,
மவன கொஞ்சவும் வேணாம்.

ஆசை ஆசையா உருகிறியே,
ஐயோன்னு பதருறியே,
கல்லுகுடிச்சாலும் கொணம் மாறாம பேசுறியே,
பித்துப் பிடிச்சு பின்னாடியே திரியிறியே,
நடுசாமத்திலும் நினைக்கிறியே,
இப்படி ஊர் தோழிகளுக்கு,
உசுர குடுக்குற நீ,
ஒட்டியே இருக்கிற எனக்கு,
ஆடிகொரு தரம்,
அடுப்படிக்கு வந்து,
மனசார அள்ளி முடியக் கூடாதோ?

இதைக் கேட்ட பாவத்துக்கா,
அல்லையில எட்டி உதைப்ப?
திடீருன்னு இத பாத்த,
எம்புள்ள வெசனப்பட்டு நடுங்கிடிச்சு !

கோவத்த கொறசுக்க சாமி,
ஆத்திரப்பட்டு, அப்பனூடுக்கு அனுப்பிடாதே..?
அவகாசம் கொஞ்சங் கொடு,
ஆசமவன் தூங்கிடட்டும்...

உன் ஆத்திரம் கொறைய,
இந்த அம்மணிய அடிச்சுப்போடு,
ஆன்னு அழமாட்டேன்,
ஊன்னு கத்தி,
ஊரக்கூட்டமாட்டேன்,
அமைதியா வாங்கிகுவேன்.

ஆறாறோ ஆறிறாறோன்னு,
பாட்டு படிச்சு, பிஞ்சு மவன,
தூங்கவச்சா!!

மவன் தூங்கினத புரிஞ்ச, ,
கம்ச மவராசா,

காஞ்ச வெறகு கொண்டு,
ராமாயிய காய்ச்சி எடுத்தான்,
காலுல, கையில, முதுகுலன்னு,
மாறி, மாறி மந்திரிச்சு எடுத்தான்.

முந்தான தலப்பு கொண்டு,
வாயிக்கு அடப்பு கொடுத்து,
அடி வாங்கி அடி வாங்கி,
சுருண்டு விழுந்தா...

வெறகு ஒடஞ்சு போனதால,
மவராசி உசிரு ஏனோ பொலசிறிச்சு .

பொலச்ச பொம்பள உசிரு,
பொதகுலிக்கு போகும்வர,
பேணிக் காக்க வேணுமானா,
நெதம் நெதம், இந்த
ஆம்பள அசிங்கத்தை அண்டித்தான்,
இருக்கனும்.

சில நேரங்கள்,
ஒரு தெரு நாயைப்போல,
இந்த நாசமாப்போன
நயவஞ்சகனை நக்கித்தான்
பொழச்சாகனும்...

இந்த திமிர் பிடித்த ஆண் கிரிமிகளை,
உயிர் கொல்லி தாக்காதோ?

தாக்கிய தேகத்தை வலுவிழக்க செய்யாதோ?
வலுவிழந்த தேகத்தில் சீழ் புகுந்து கொள்ளாதோ?
சீழ்பிடித்த தேகத்தில் புழுபுழுத்து சீரழியாதோ?
சீரழிந்த தேகம் பூத உடலாகும் முன்பு,
கொடூர நரக வேதனையை,
குறைவின்றி அனுபவித்து,
மாளமாட்டாறோ????