இன்றோடு உன் கைத்தலம் பற்றி,
ஏழு வருடங்கள் ஆகிறது.
யோசித்துப் பார்த்தால்,
கொஞ்சம் மலைப்பாய் இருக்கிறது.
உன்னைப் பார்த்த அந்த
மாலைப்பொழுது, இன்னும்
மங்காமல் மனதிற்குள் மிண்ணிக்
கொண்டே இருக்கிறது.
அன்றைய தினம்,
மின்மினிப் பூச்சியால் செய்த
உடையை அணிந்து நின்றிருந்தது,
இன்னும் கண்ணுக்குள் கலங்காமல் நிற்கிறது.
உன் அடர்ந்த கூந்தல்
அன்றே என்னை கட்டிப் போட்டது
உண்மை தான்.
அந்த வினாடியே முடிவு செய்தேன்,
நீ தான் என் பொன் வசந்தமென்று.
உறுதி செய்தேன்,
என் மூச்சுள்லவரை இவள் தான்
என் வாழ்வாதாரமென்று.
மறுசிந்தனை ஏதுமின்றி
காதல் வலையை காற்றில் வீசினேன்.
நீ மசியவில்லை, ஆனால் உன்
குடும்பம் இசைந்து கொடுத்தது.
கடவுளின் கடைப்பார்வையால்
என் உறவுகளும் உளமாற வாழ்த்தியது.
உலகறிய உன் கழுத்தில்
தாலி கட்டினேன்.
அன்று முதல் என் வாழ்கையை
உந்தன் கையில் ஒப்புவித்தேன்.
எதிர்காலம் பற்றிய
பயத்தை பறக்கவிட்டேன்.
நான் பன்மடங்கு உறுதிபெற்றதாய்
நம்பலானேன்.
பெண் குழந்தை பேறு
பெற தயாரானேன்.
தேகமெங்கும் புது ரத்த வெள்ளம்
பாய்வது கண்டு பரவசப்பட்டேன்.
முதல் வருடம், எல்லோரும் போல,
நாம் காதலில் உருகவுமில்லை,
சொக்கிப்போய் உரையவுமில்லை.
காதல் படகில் சாந்தமாய்
சவாரி செய்தோம்.
நம் பயணத்தில் எந்த ஒரு
நாளும் சலிப்பை சந்தித்தே இல்லை.
உலக அதிசியம் தான்.
இரண்டாம் வருடத்தில்
புது வீடு வாங்கச் சொல்லி,
செல்லமாக கட்டளையிட்டாய்.
நானும் வாங்கினேன். எப்படி
முடிந்தது என்பது அந்த
காதல் கடவுளுக்கே வெளிச்சம்.
நம் காதலும், பாசமும்
பன் மடங்கு பெறுகிற்று.
ஆனாலும் திகட்டவில்லை.
மூன்றாம் வருடத்தில் என்
வெளிநாட்டுப் பயணம்.
தனிமை என்னை கொல்லுகிறது
என்றேன், விளையாட்டாக.
கவலையை விடு,
இதோ வருகிறேன் என்று,
உயர்மட்ட வேலையே உதறியெறிந்து
ஓடி வந்தாய், என்னோடு இருக்க.
அப்படியே உறைந்துபோனேன்,
உன் அக்கறை கண்டு.
இவளுக்காக என்ன செய்யப்போகிறோம்
என்ற கேள்விக்கு, இன்று வரை
கண்ணீர் தவிர வேறு பதிலில்லை.
நான்காம் வருடம், நீ கற்பமானாய்.
சகுனங்கள் அனைத்தும்
ஆண் குழந்தைக்குரியதாய்,
புலம்பித்தள்ளினர் பெரியவர்கள்.
யாழினியே வந்து பிறப்பாள்
என்று, உறுதியாய் சொன்னோம்.
நம் இருவரின் ஒருசார்ந்த
சிந்தனை, சிலரை பொறாமையில்
பொங்க வைத்தது.
அப்போதும் நம் காதல்
படகு கரை ஒதுங்கவில்லை.
ஐந்தாம் வருடம்,
நான் வெளிநாட்டில்,
கற்பவதியான நீ, உன் வீட்டில்.
மூன்றே மூன்று மாதங்கள்
தனித் தனியே வாசம் செய்தோம்.
நீயோ தூக்கம் மறந்து,
உணவே மருந்தாய்,
மருந்தே உணவாய் உண்டு வந்தாய்.
நான் உடைந்து போனேன்.
ஆசையாய் கொஞ்சும்
அன்னை இருந்தும்,
அன்போடு அரவணைக்கும்
அப்பன் இருந்தும்,
ஆரவாரப் படுத்த
தம்பி இருந்தும்,
ஏனோ உன் கண்கள்
என்னையே தேடிற்று.
தடைகள் பல கடந்து
யாழினியை பெற்றெடுத்தாய்.
உன் காதல் இனி யாழினிமேல்
பாயுமென்று பார்த்து,
சற்று ஏமாந்துபோனேன்.
ஆறாம் வருடத்தில் ஆரோகியமான
காதல் இன்னும் ஆழமாய் சென்றது.
இந்த ஏழாம் வருடத்தில்
எத்தனையோ சிக்கல்கள்.
சற்றும் சிந்தை கலங்காமல்,
நீயே சமாளித்தாய்.
சதா என்னையே
சுத்தி சுத்தி வந்தாய்.
சிக்கலுக்கு காரணம் நான்
என்று தெரிந்தும்,
சிகரத்தில் வைத்து கொஞ்சினாய்.
இப்படியும் காதலிக்கலாம்
என்று காதல் பித்தனுக்கே
கற்றுக் கொடுத்தாய்.
நம் காதல் இன்னும்
கொஞ்சம் மெருகேறியது.
இப்படியே இன்னும்
எழுபது வருடங்கள் சேர்ந்தே
இருக்கவேண்டும்,
பல காதல் பாடங்கள்
கற்றுத் தேறி,
எதிர்வரும் தடைகளை
உடைத் தெரியவேண்டும்.
சம்மதமா?

No comments:
Post a Comment