எங்கோ பிறந்தாய்,
எங்கோ வளரந்தாய்,
என் கண்ணில் பட்டாய்,
காதலியானாய்.
என் கரம் பற்றி,
மனைவியுமானாய்.
கல்யாணம் ஆகியும்,
கண்ணில் நீ காதலியாகவே
தெரிந்தாய்.
காலம் செல்ல செல்ல,
நீ கேள்வியாளர் ஆனாய்,
நான் பதில் சொல்லும்
மாணவனானேன்.
எதுவானாலும் ஒரு
ஏன்? எதற்கு? எப்படி?
என் காதில் கேட்கும்.
அன்று தான் என் காதலியிடம்,
என் மனைவியின் முகம் எட்டிப்பார்த்தது.
இவ்வண்ணம் வாழ்க்கை
ஓடிக்கொண்டிருக்க.
ஒரு சில மாதங்கள்
நானும் இவளும் தனித் தனியே
வாசம் செய்ய நேர்ந்தது.
எனக்கு சந்தோசமோ, சந்தோசம்.
இனி குறைவின்றி கூத்தடிக்கலாம்,
நேரம் காலம் இல்லாமல் வெளியே
சுத்தலாம்.
கேள்வி கேட்ட்க யாருமே
இல்லை என்று அந்த நாளை
ஆரம்பித்தேன்.
நிம்மதியாக ஊர் சுத்திவிட்டு,
உணவருந்தி, கண்ணயர்ந்தேன்.
அதிகாலை பசிதாங்க முடியாமல்
புரண்டேளுந்தேன்.
இரவில் அளவு தெரியாமல்
உணவருந்தியுள்ளேன் போல.
வயிறு உணவு தேடினாலும்,
மனசு ஏனோ உன்னை தேடியது.
அன்று புரிய ஆரம்பித்தது,
மனைவியின் மகிமை.
இன்னும் ஒரு படி மேலே சென்று,
என் தேவையறிந்து, உருமாற தயாரானாய்.
தயக்கம் ஏதுமின்றி,
தன்னிச்சையாய் உருமாறினாய்.
அதை பார்த்த நான் சிலையானேன்.
ஒரு சமயம், எனக்கு
தாயின் மடி தேடியது.
பிடி என் மடியென்று,
பிடரி தொட்டு, தலை கோதினாய்.
பலாயிரம் மயில் தொலைவில்
வசிக்கும் என் அன்னையை,
அன்று ஸ்கைப் துணையின்றி
அருகில் பார்த்தேன், பூரித்துப் போனேன்.
இதேபோல் தந்தையின் வழிகாட்டலுக்கு
தவித்ததை உணர்ந்த நீ,
சிறிதும் தயவு தாட்சண்யம்
பாராமல், தடி எடுத்து,
என் தந்தை போல் வழிகாட்டினாய்.
நான் வாயடைத்துப் போனேன்.
நாடுகடந்து வந்த எனக்கு,
அன்று நண்பர் இல்லையா..
நீ நண்பர் வேடமிட்டு,
நடுஇரவு என்றும் பாராமல்,
காலை வாரிக்கொண்டே இருப்பாய்.
சிரித்து சிரித்து வாய் வலி எடுக்கும்.
காரம் ஆகாதென்றேன்.
இனிமேல் நீ காரம் கேட்கக்
கூடாது என்று உன் நாக்கிடம்
கட்டளையிட்டாய்.
நான் வேலை முடித்து
வீட்டுக்கு வரும் போது
நீ வேண்டுமென்றேன்.
கவலையை விடு என்று,
தன் கனவு வேலையை
காகத்திருக்கு போட்டுவிட்டு
கட்டியணைதாய்.
பெண் பிள்ளைதான் வேண்டுமென்றேன்.
ஆமாம், ஆமாம், சரி தான்,
ஆண் பிள்ளைகளே இம்சை தான்
என்றாய்.
ஏதோ ஆறேழு குழந்தைகள்
பெற்றேடுத்தார் போல்.
இப்படி எனக்காக உருமாறி,
உருமாறி, உன் அடையாளத்தையே
தொலைத்துவிட்டாய்.
அனைத்தையும் தொலைத்துவிட்டு,
என் அன்புக்காகவே ஏங்கி
நிற்கும் உனக்கு,
இன்று பிறந்தநாள்.
எதைப் பரிசாக கொடுப்பதென்று தெரியாமல்,
நானும் உன்னைப்போல் உருமாறுகிறேன்.
இன்று முதல், என் இறுதி மூச்சுள்ளவரை,
நானே உந்தன் இதயத் துடிப்பாய் இருப்பேன்.
உன்னை சீரும் சிறப்போடும் வாழ வைக்க,
ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டே
இருப்பேன்.....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

No comments:
Post a Comment