விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு,
பலமாகவும், வளமாகவும் இருந்த அந்த எலும்பு,
சற்று வலைய ஆரம்பித்தது,
வலுவிழந்து வலுவிழந்து மிகவும் வாடிக்கிடக்கிறது.
எத்தனையோ காரணங்கள் தெரிந்தும்,
சரி செய்ய மருத்துவன் அகப்படவில்லை.
இதை பலப்படுத்த ஒரு
அதி நவீன அறுவை சிகிச்சை உடனே தேவை.
ஏதோ எனக்கு தெரிந்த
சில அறுவை சிகிச்சை முறைகளை
முறையே பட்டியலிட்டிருக்கிறேன்,
பெரியவர்கள் பார்வைக்காக.
முதலாவதாக கூட்டு நிறுவன
விவசாய முறையை அறிமுகப்படுத்தலாம்.
பல பல தனியார் நிறுவனங்கள்,
தங்கள் பணத்தையும்,
தொழில் நுட்பத்தையும், விவசாயத்தில்
முதலீடு செய்தால்,
வறண்டு கிடக்கும் விவசாயம்
கொஞ்சம் துளிர் விடும்.
வரும் லாபத்தை நேரடியாக
விவசாயிகலோடே பங்கிட்டுக் கொள்ளலாம்.
இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபமும்,
அரசியல் செல்வாக்கும், அடியாட்கள் ஆதரவும்
கொண்டுள்ள இடைத்தரக அரகர்களை,
இல்லாமல் செய்யலாம்.
இது ஒட்டிய வயிறோடு
வாழும் உழவனின் வாழ்வை
நிச்சயம் மேம்படுத்தும்.
இரண்டாவதாக பதனிடும் முறையும்,
பகிர்மான முறையும் செவ்வனே
செப்பனிட வேண்டும்.
அறுவடை செய்த தானியங்களையும்,
காய் கனிகளையும்,
சேகரித்து வைக்கும் கிடங்குகளை,
உயர்தர அம்சங்கள் நிறைந்ததாய்
அமைக்க வேண்டும்.
கிடங்குகளில் இருந்து,
சில்லறை வியாபாரியிடம் கொண்டு
சேர்க்கும் வாகனங்கள்,
அதிநவீன குளிர் சாதன வசதியோடு
இருபது மிக மிக அவசியம்.
இதனால் யாருக்கும் பலனின்றி
அழுகிப்போகும் சதவீதத்தை,
வெகுவாகக் குறைக்கலாம்.
வெள்ளாமை செய்த
அனைத்தும் கெட்டுப்போகாமல்
விருப்பமானர் வசம் சென்று சேரும்.
சில்லறை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களுக்கு
குறைந்த விலைக்கு விற்க உதவும்.
இதன்மூலம் பயன் பெறுபவர்கள்,
விவசாயிகள், வாடிகையளர்கள்
மற்றும் முதலீடு செய்த கூட்டு
நிறுவனங்கள்.
மூன்றாவதாக பயிர்களுக்கு
காப்பீட்டுத் திட்டம்
அறிமுகப் படுத்தலாம்.
நிலம் வைத்துள்ள விவசாயிகள்,
70 சதவிகதமும்,
அரசாங்கம்மோ அல்லது கூட்டு நிறுவனமோ
30 சதவிகதமும் காப்பீட்டுத் தொகை கட்டலாம்.
இதனால் அதிக மழையால்
பயிர்கள் மூழ்கிப் போவதையும்,
அல்லது மழையின்றி
பயிர்கள் வாடி நாசமவதையும்
ஈடு செய்யலாம்.
மேலும் தினம் தினம்
தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயிகளையும் காப்பாற்றலாம்.
நான்காவதாக விவசாயிகளுக்கு,
கற்றுத் தேறிய விஞ்ஞானிகள்,
போதிய அறிவுரை வழங்கும் திட்டம் வேண்டும்.
விவசாயத் தொழில் மிக மிக
அபாயகரமானது.
அசந்தால் அடித்துவிடும்.
கொத்துக் கொத்தாக
குடும்பங்கள் தற்கொலை செய்து
கொள்ளும் அலங்கோலம் இந்த
தொழில் சார்ந்தவர்க்கு வெகுவாக சாத்தியம்.
ஆகையால் நிலங்களின் தன்மை,
மண்ணின் வீரியம்,
விதைகளின் விவரங்கள்,
உரங்களின் உன்னதம்,
பூச்சிகொல்லிகளின் விஷத் தன்மை
பற்றி விவசாயி நன்கு அறிந்து
விவசாயம் செய்தால்,
விவசாயப்பணி பிணி நீங்கி
நீடூழி வாழும்.
ஐந்தாவதாக நேர்த்தியான
நீர்பாசன முறையை அமுல்படுத்தலாம்.
அரசாங்கங்கள் போதிய
அணைக்கட்டுகள் கட்ட வேண்டும்.
இதனால் நீரையே நம்பி
செய்யும் தொழில்,
நெடு நாட்கள், சீக்கு பிடிக்காமல்,
சீரோடும், சிறப்போடும்,
சிறகடித்து பறக்கும்.
இந்த ஐந்து திட்டங்களும்
அமுல் படுத்தினால்,
விவசாயத் தொழில்
விருட்சம் பெரும் என்று
நான் நம்புகிறேன்.
