skip to main |
skip to sidebar
இன்பமாய் இருக்க காரணம் தேவையா?
மனிதனின் வாழ்கையில்
இன்பமும், துன்பமும்
மாறி மாறி ஆட்கொள்வது
அனைவரும் அறிந்ததே.
வாழ்கையில் இன்புற்று இருக்கவும்,
துன்பத்தில் துவண்டு கிடப்தர்க்கும்,
ஏதோ ஒரு காரணம் இருக்கும்.
அது என் நம்பிக்கை.
கடைசியாக நான் இன்புற்று
இருந்ததற்க்கான காரணங்கள்.....
பல நாட்கள் இழுவையில்
இருந்த சொத்து வழக்கு
எனக்கு சாதகமாய் அமைந்தது.
அலுவலகத்தில் என் விண்ணப்பத்தின்
பேரில் பதவி உயர்வு கிடைத்தது.
வெகுநாட்களுக்கு பிறகு என்
சொல்ல்படி கேட்டு நடந்தாள்
மனைவி.
என் இரு மகள்களும்
யார் மனமும் கோணாமல்
நடந்தனர்.
அலுவலகம் செல்லும்
சாலையின் பிரதான
மேம்பாலம் திறக்கப்பட்டது.
சற்று சிந்தித்துப் பார்த்தால்,
என் சந்தோசத்தை வேறு யாரோ
முடிவு செய்வது போல் ஒரு
மாயை தோன்றுகிறது.
ஆம் சொத்து வழக்கு, பதவி உயர்வு,
மனைவியின் நடவடிக்கை, பிள்ளைகளின்
நடத்தை, மேம்பாலம் என்று
வேறு ஏதோ அல்லது யாரோ
என் சந்தோசத்தை தீர்மாணிகின்றனர்.
இதே கதை தான் துன்பத்திற்கும்.
ஒரே ஒரு வித்தியாசம்,
எனக்கு மட்டும் ஏன் இந்த
துன்பம், சோதனை என்று ஆராய்வோம்.
ஆனால் ஏனோ இதை இன்பம்
சூழ்ந்திருக்கும் போது செய்வதில்லை.
என் விருப்பம் போல்
இந்த உலகம் சுழலவேண்டும்.
என் நினைப்பின் பிரதிபலிப்பாய்
மனைவி இருக்க வேண்டும்.
என் அறிவிற்கு அடங்க வேண்டும்
என் அலுவலகம்.
என் அவசரம் புரிந்த படி
அமைய வேண்டும் வாகன நெரிசல்.
இது அரங்கேறினால்
மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி.
எவ்வளவு அபத்தமான
பேராசை இது.
நேற்று மதியம் என் நான்கு
வயது மகள், பொம்மைக்காக
அழுதாள்.
விலையுயர்ந்த பொம்மை என்பதால்
தர மறுத்தோம்.
சில நொடிகளிலே வேறொரு
சாதாரண பொம்மை மேல்
காதல் கொண்டு, அதை அடைந்து
ஆனந்தப் பட்டாள்.
எனக்கு ஆச்சிரியம்.
எப்படி இவளாள் மனதை சில
நொடிகளுக்குள் மாற்ற முடிந்தது என்று.
மகளின் எண்ணம் முழுவதும்
எது நடந்தாலும் ஆனந்ததையே
ஆட்கொள்ளவேண்டும் என்பது.
இது எப்படி சாத்தியம்?
மகிழ்ச்சியாய் இருக்க
காரணம் வேண்டாமா?
அந்த இரண்டாம் பொம்மை தான்
காரணம் என்று எண்ணி.
அவளிடம் இருந்து பறித்தேன்.
அழ ஆரம்பித்தாள்.
தன் தாய் மிட்டாய் தந்தவுடன்,
திரும்பவும் ஈட்டிக் கொண்டாள்
மகிழ்ச்சியை.
ஆக மகிழ்ச்சிக்கு காரணம்
தேவையன்று.
வெறும் எண்ணம் மட்டுமே
போதுமானது போல்.
இன்று காலை
வெகு மும்மரமாக நாளிதழ்
வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஏழு வயது மகள்
தன்னுடன் நானும்
விளையாட வேண்டி மன்றாடினாள்.
அவளை திசை திருப்ப,
நாளிதளின் கடைசிப் பக்கத்திலுள்ள
உலக வரைபடத்தை
சிறு துண்டுகளாக நறுக்கி,
கலைத்துப் போட்டு,
அதை ஒன்றாக சேர்த்து என்றேன்.
மூன்றே நிமிடத்தில் சேர்த்துவிட்டாள்.
எனக்கோ அதிர்ச்சி.
அவளுக்கு அமெரிக்காவும் தெரியாது,
ஆப்ரிக்காவும் தெரியாது.
எப்படி சரி செய்தாய் என்றேன்.
அவளோ, உலகத்திற்கு பின்னால்
ஒரு மனிதனின் முகம் இருந்தது.
மனிதனை சரி செய்தேன்,
உலகம் சரியானது என்றாள்.
ஆக, உலகம் நாம் விரும்பியபடி
இருக்க வேண்டும் என்று
எண்ணுவதற்கு பதிலாக,
உலகம் இருக்கும் நிலையை
விரும்பி ஏற்றுக் கொண்டால்!
நம் சந்தோசத்திருக்கு குறைவிருக்காது.
தினமும் காலையில் எழுந்தவுடன்,
இன்று முழுவதும்
எது நடந்தாலும் நான்
சந்தோசமாகவே இருப்பேன்
என்று உறுதி எடுத்து ,
அந்த நாளை அணுகினால்!!
அந்த நாள் மட்டுமின்றி,
எந்த நாளும் சந்தோசத்
திருநாள் தான்.
No comments:
Post a Comment