Monday, 15 November 2010

கண்மணி

சில மாதங்கள் படுத்த படுக்கையாய்.
உணவே மருந்தாய்,
மருந்தே உணவாய் உண்டு
வாழும் எனக்கு தேதி குறித்தாகிவிட்டது.

இன்னும் சில தினங்களோ,
பல மணித்துளிகளோ பாடை ஏற.

என்றோ எடுத்த முடிவை இன்று
உன்னிடம் சொல்கிறேன்.

என் கண்ணான கண்மணியே,
நீ என்னை மறந்து,
ப்ரியரஞ்சனோடு சென்று விடு.
என் பெற்றோர்களுக்கு முழு சம்மதம்.

ரஞ்சன் நல்லவன், திறமையானவன்,
நீ இல்லை என்பது மட்டுமே குறை.
ஒட்டிக் கொள்வாய், சில சிகரம்
தொட வெளிச்சம் தருவாய்.

உன்னோடு சேர்ந்த கண்ட
நல்லவைகளை நினைவில் கொள்வாய்.
அந்தரங்க அசிங்கங்களை அழித்துவிடுவாய்.

உன் அருமை தெரியாமல்,
பல நேரம் புண்படுத்தி இருக்கிறேன்,
சில நேரம் சிவக்க வைத்து இருக்கிறேன்.

வெயிலிலும், மழையிலும்,
என்னோடே காய்ந்திருகிறாய்.

நான் தூங்கும் போது தூங்கி,
எழும் போது நீயும் எழுந்து,
எனக்கு  வழித்துணையாய் வாழ்ந்தாய்.

உனக்கு வலிக்கும் போது மட்டுமே
வாஞ்சையோடு வருடி இருக்கிறேன்.
மற்ற வேளையில் மதித்தே இல்லை.

என் தோல்விக்காக கண்ணீர் சிந்தி,
வெற்றிகளில் தலை குனிந்து,
தெரிந்ததை பேசாமல் புரிய வைத்து,
தெரியாததை தெரிவிக்காமல் உணர வைத்த
உண்ணதமான உயிரோவியம் நீ.

உன்னை தாரை வார்பதாள்,
விண்ணுலக விண்மீனாய் ஜொலிப்பேன்.
நீ ரஞ்சனோடு மண்ணுலகில்,
ஒலி வீசி மகிழ்வாய்.

என்னை தேடாதே,
மறந்தும் விடாதே.

தூங்கும் போது என்னை பார்ப்பாய்,
விழித்திருக்கும் போது
ரஞ்சனை வழிநடத்துவாய்,
என்று சொல்லிக் கொண்டே
மூடியிருந்த விழிகள் திறந்து கொண்டன.
பின்பு கல்லாயின.

இமைகள் மூட மறுத்தன.
மருத்துவர் கைகள் வைத்து,
இமைகளை ஒட்ட வைத்து,
அழத் தொடங்கும் உறவினர்களை
அன்பால் அகற்றி.
ஆபரேஷன் தேயடேர்க்குள் எடுத்து
சென்று, என் கண்மணிகளை அறுவை
சிகிச்சை செய்து,
கண்ணிலாத பிர்யரஞ்சனுக்கு பொறுத்த
துடங்கினார்....

விண்ணுலகில் விண்மீனாய் ஜொலிக்க,
கண் தானம் செய்வீர் கனவான்களே......

1 comment:

  1. From beginning till end of the poem I had the two soul character (Kanmani and Priyarajan) in my mind and was wondering how you would finish the story... I thought it would be a controversial love story.... but at the end I realised KANMANI was a soul part of our body... More than getting relived from the climax I was very touched by the moral of the story.... DONATE YOUE EYES....

    ReplyDelete