Tuesday, 20 December 2011

காதல் கடிதம்














அன்புள்ள ஆருயிருக்கு.
நான் எழுதும் முதல் காதல் கடிதம்.

இத்தனை வருடங்களும்
தோன்றியது தோய்வதற்குள்,
தோழி உன் காதில் ஓதி விடுவேன்.
இன்றோ எதுவும் தூண்டுவதுமில்லை,
தோன்றுவதுவுமில்லை.

இந்த சிறு இடைவெளி,
நம் இருவருக்கும் புதிது.
நீ ஒரு இடத்தில்,
நான் ஒரு நாட்டில்,
நாட்டம் இன்றி நாட்களை கழிக்கின்றோம்.

உனக்கு முன் எழுவதால்
நான் பாக்கியசாலி.
ஆம் நீ தூங்கும் அழகை
ஆராதிக்க அது ஒரு சந்தர்போம்.

இன்றோ படுக்கையை
பார்க்கவே பார்வை குருடாகிறது.

உடல் களைத்து அமர்ந்தால்,
உன் காவிக் கருவிழிகள்
காந்த சக்தி கொண்டு
களைப்பை கரையேற்றும்.

சுருண்ட கூந்தல்,
சில சமயம் என் சிந்தனையை
புரட்டி போடும்.

நீ ஆசையாய் என் பெயரை
உச்சரித்து விட்டாள்.
என் உடல் புல்லரித்து போகும்.

நீ தொட்டு பேசும் போது,
என் கல்லூரி காலம் கண் முன்
தோன்றுவது நிதர்சனம்.

காலால் உதைத்து விளையாடும் போது,
என் நினைவில் இருந்த பாலிய
பருவம் நிஜத்தில் வருவது நிஜம்.

அன்னை மடி தேடும் போது,
பிடி என் மடியை என்று தருவாய்.
பிடித்தும் போனது.

தங்க குணம் கொண்டவளே.
உன் கோபத்தின் மேல்
கொள்ளை பிரியம் உண்டெனக்கு.

சுத்தமான தங்கத்தை கொண்டு
ஆபரணம் செய்யலாகாது.
கொஞ்சம் செம்பும் தேவை.
உன் கோபமும் அந்த
செம்பும் ஒன்று தான்.

நீ கொஞ்சுவதும் அழகுதான்,
மிஞ்சிக் கெஞ்சுவதும் அழகுதான்.

உன் சிரிப்பு, என்னை பல
நேரம் கவலையற்ற சிலையாக்கும்.

உன் காதணிகள், என்னை
சில சமயம் காவியம் எழுத
தூண்டி விடும்.

ஆடை அனுவதில் கூட
ஒழிந்திருக்கும் ஆயிரம்
ஆச்சிரியங்கள்.

நீ அணியும் காலனிக்கே,
என் எஞ்சி உள்ள காலத்தை
காணிக்கை ஆக்கலாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ....

நீ அருகில் இல்லாதது,
என் ஆழ மனதை கொஞ்சம் உலுக்குகிறது.
உலுக்கி உலுக்கி
என் இதயம் உடைவதற்குள்,
உடனே வந்து சேர்ந்துவிடு.

இப்படிக்கு
உன் மறுவுயிர்.

1 comment:

  1. ஆஹா அற்புதம்!!

    அழகும் அன்பும் பொங்கும்

    கவின் மிகு கடிதம்!

    ReplyDelete