Monday, 5 December 2011

தண்ணீர் தண்ணீர்

பாராத்தக்கா இந்த கெடுவு தண்ணி உட்டானா?
எழவெடுத்த பைப்புகாரன் இன்னும் மனசு வைகல ..

போன கெடுவு தண்ணி வந்து இருவது நாளாச்சு,
நாசாம போற பய நாலாயாவது  நல்லது செய்வானோ?

தேகுசாவுல இருந்த தண்ணி நேசம் கெட்டு போச்சுதடி,
மொடாவுல மோந்தெடுக்க முதுகு தண்டு நோவுதடி.

பெரியவனா எழுப்பி விட்டு பெரியாறு காலனி
டாக்டர் வீடு போகவிட்டு,
காசுக்கு தண்ணி வாங்கி,
நெரைக்க வேணு ரெண்டு தவலைய...

பெரியவனுக்கு ஏழு வயசு,
மணியோ அஞ்சு அடிச்சு அரை நாழி கடக்க நிக்கிது.

பாராத்தா எழுப்பிவிட, பேய்தூக்கத்துல இருந்த பய
பிசாசு மாறி பொரண்டு எழுந்தான்..
அழுதுகிட்டே கொடம் தேடி,
சாக்கு தேடி, தண்ணி டயர் கண்டு,
தாரோடு வந்து நின்னான்.

எட்டுபோல உள்ள டயர கொடகளுதுல,
வலயம் வச்சு சுருக்கு போட்டு, கொடத்த
இருக்க வச்சான்.
தண்ணிக்கு  அஞ்சு ரூவா காசு வாங்கி
கிளம்பினான்.
சைகில வேக வேகமா, ஓடிகிட்டே
தள்ளிப் போயி, குதிச்சு ஏறினான்
சைக்கிள் சீட்டுல..

பெரியார் காலனி இங்கிருந்து ஆறு கிலோ மீட்டரு,
கழுத்துல துண்ட சுத்தி, ஏறி ஏறி பாரு போட்டான்,
பெடல பின்ன விட்டான்...

ஏரகம் வரும்போது கொரங்கு பெடலு போட்டான்..
மேடு வரும்போது, குதிச்சு குதிச்சு பெடலடிச்சான்..

எதிர் குளுறால, கொல நடுக்கம் கண்டு,
மூத்திர பை முட்டிக் கொள்ள,
சைகுல ஓரம் கட்டி, மரத்துக்கு
உப்பு தண்ணி பாச்சினான்...
உடம்பு சிலிப்பு தட்டி, பிரயாணத்த தொடங்கிபோட்டான்.

எப்படியோ கௌண்டர் வீடு வந்து,
வருசையில கொடத்த போட்டான்.
வரச நீளம் அர மயில் கல்லு தூரம்,
ஆனாலும் வேறு வழியில்ல, இந்த ஊரு
சனம் தங்கத்த கூடு கடன் தருவாக,
தண்ணி கேட்ட தடுமாருவாக.

வருச வர ரெண்டு மணி நேரம்
உருதீனு தெரிஞ்ச பய,
துண்ட தலக்கி வச்சு,
உட்ட தூக்கத்த
தெருவுல தொடர்ந்தான்.

பக்கத்து வருச பாட்டி,
இந்த பய கொடதையும்
வருசையில தள்ளி வந்த,
அர மணி நேரம் ஒருக்கா
எடம்  மாறி படுத்து வந்தான்...

ஒரு வழியா தண்ணி புடிச்சு,
சைகில கட்டி, விரட்டி எடுத்தான்.

போகும் போது ஏரகம் பாத...
சந்தோசமா பவனி போனான்.

போற வழியில பள்ளி தோழன்
பாஸ்கர். ஓஒ ஆஅஹ் ன்னு குதுச்சு
ஆடிகிட்டே, பள்ளி ஸ்ட்றைக்கு ன்னு
சங்கு ஊதினான்.

கேட்ட நம்ம பயலுக்கு, ஏக குஷி...
சந்தோஷ வெள்ளதுள்ள பெடலு போட்டான்..
பள்ளம் மேடுன்னு பாக்காம, சும்மா
பஞ்சா பறக்குது சைக்கிள்.

செத்த நேரத்துல சைக்கிள் தெரியாம
ஒரு சின்ன கல்லுல ஏறி,
தண்ணி டயரு வலயம் ஒன்னு லூசு
கண்டது...

இது தெரியாம, வீடு போயி
வேகமா ஸ்டாண்டு போட்டா,
எடப்பக்க கொடம் ஏடறி விழுது,
வலுத்து கொடமோ வாய பொளந்தது...

புடிச்ச தண்ணி எல்லாம், பூமி மாதாவ
குளுர வக்கிது, இந்த பாத்த, பாராத்தா
பாஞ்சு வர்றா..

பயந்து போன பச்ச மண்ணு, பதுங்கி
நிக்கிது. பாரபட்சம் பாக்காத நம்ம அம்மா,
சைக்கிள் டயரு கொண்டு, கணுக்கால
காச்சி எடுத்தா...

வலியில நம்ம பய துடிச்சான்..ஐயோ அம்மா
வலிக்கிது, ஆத்தா சாமி வலிக்கிதுன்னு கூச்சல் போட்டான்..
பாராத்தா சினம் தண்ணிய பல நிமிஷம் ஆச்சு.

அப்படியே கால புடிச்சு வாசல்ல படுத்துகிட்டான்.
தார தாரையா தடிச்சு கெடுக்கு.
ரெண்டு மூணு ரத்தம் வேர சொட்டி கெடக்கு.

கொஞ்ச நேரம் கழிச்சு...
டேய் பெரியவனே,
என்ன பெத்த மவரசானே,
உள்ள வா சாமி,
உனக்கு கருபட்டியும், ஒடச்ச கல்லையும் தாரேன்னா..
கேட்ட பிஞ்சு உள்ள போச்சு..

வலிகுதா மேலு, வாய் தெறந்து சொல்லு சாமீன்னு,
கால பாத்தா...கன்னி கெடந்த கால பாத்து, கொஞ்சம்
வெசனப் பட்டா.

வாடுன மொகத்தோடு, டாக்டர் வீடு போயி வா
சாமீன்னு, பத்து ரூவா பிறுச்சு கொடுத்தா..

பிஞ்சு மொகம் மலந்து,
காச பயில போட்டு,
சைக்கிள்ல தொட்டான்...

பக்கத்துல இருந்த பாராத்தா,
தம்பி தலையில தட்டி,
அட தருத்தனம் புடிச்ச
தாண்டவராய, தண்ணி எடுக்க போகச் சொன்னா,
நீ எங்க பராக்கு பாக்க போறேன்னு
திட்டி தீர்த்தா.....
நம்ம பய மறு சவாரிக்கு
மயிறு கோதினான்...........








1 comment:

  1. Nice one..enjoyed reading but very harsh....

    ReplyDelete