Monday, 26 December 2011

அந்த 7 நிமிடங்கள்!












எதற்கும்  உதவாத
உதவாக்கரை.
என் அப்பா எனக்கு
வைத்த செல்லப்பெயர்.

என் அம்மா சொல்வாள்,
நானொரு அதிர்ஷ்ட கட்டை என்று.

அடி மேல் அடி,
தோல்வி மேல் தோல்வி,
எழுந்து நிற்க கால் இருந்தாலும்,
மனம் மறுதலிக்கிறது.

நம்பிக்கையை தொலைத்துவிட்டேன்
இந்த நரகத்தில்.
சொர்க்கம் சென்று
வாழ தயாராகிவிட்டேன்.

வயது 18 தான்.
படிப்பு ஏறவில்லை,
எதிலும் பிடிப்பும் இல்லை,
வேலைக்குச் செல்ல விருப்பமில்லை,
வேண்டியதைச் செய்ய துணிவுமில்லை.
விளைவு, தாய் தந்த உயிரை
தாரை வார்க்க வலைதளம் நாடினேன்.
வலி குறைந்த தற்கொலை முறையை
தெரிவு செய்ய.

தூக்க மாத்திரை நாடினால்,
இருபது நிமிடங்களாவது மூச்சுத்
திணறல் இருக்குமாம்.
அது வேண்டவே வேண்டாம்.

ரயிலில் தலைவைக்கக்
கொஞ்சம் தெம்பு வேண்டும்,
கூடவே ரயிலோடு குட்டி
சிநேகமும் வேண்டுமாம்.
அது எனக்கு கிடையாது.

மாடியில் இருந்து குதிக்கலாம்,
தலை சிதறாமல் போனால்,
சாகும் வரை சர்கர நாற்காலியில்
வலம் வரவேண்டும்.
அது சரி வராது.

தூக்கு போட்டுத் தொங்க
முடிவு செய்தேன்.
இதை சரியாக செய்தால்,
இறப்பை  இருபது நொடியில்
ஈட்டலாம்.

உடல் பருமனனுக்கு ஏற்ற,
தொங்கும் உயரத்தையும்
தெரிவு செய்வது அவசியம்.

தொங்கும் உயரம் கொஞ்சம்
அதிகரித்தாலும், தலை துண்டிக்கப்படும்.

தொங்கும் உயரம் குறைந்தாலோ,
உயிர் அற்று போகும் நேரும்
அதிகரிக்கும்.

தொங்கிய மறுநொடியே,
தூக்குகுக் கயிறின் முடிச்சு,
கழுத்தெலும்பை முறிக்கும்.
முறித்த மறுநொடி
முதுகெலும்பின் தொடர்பும் அறுந்து போகும்.
அடுத்த சில வினாடிகளில்,
இருதயத் துடிப்பும் நிறுத்தப்படும்.

இவை அனைத்தும் படித்து,
தெரிந்த பின், தயாரானேன்
இன்று தூக்கு போட்டுக் கொள்ள.

இன்று முழுவதும்
விரும்பியதை உண்டு,
வேண்டியதை கண்டு,
ஒவ்வொரு நொடியையும்
நொறுக்கினேன்.

இரவு இரண்டு மணி.
ஊர் அடங்கிய நேரம்,
புது கயிறு கொண்டு,
காத்தாடியில் கட்டி,
முடி இட்டேன்.
அதை ஆறடுக்கு
முடிச்சாக மாற்றினேன்.

சரியான உயரம் வர
கயிறின் நீளத்தை சரி செய்தேன்.

முதுகில்லாத வட்ட பிளாஸ்டிக்
நாற்காலி போட்டு ஏறி நின்றேன்.

முகமுலுவதும் வியர்வை துளிகள்.
துடைக்க நினைத்த கைகளும் நடுங்குகிறது.
இரு கால்களும் மடிவதுபோல் ஒரு பிரமை.
இறங்கிவிட்டேன்.

முககக்கண்ணாடி பார்த்து
முகம் துடைத்து.
படிந்து இருந்த தலையை
திரும்பவும் படிய வாரி.
சிரித்துப் பார்த்துக் கொண்டேன்.

சிறுநீர் கழித்தால் சீற்றம்
குறையும் என்று எண்ணி,
சென்றேன், வரவே இல்லை,
திரும்பி வந்து விட்டேன்.

தூக்குக் கையிற்றை உற்றுப் பார்த்த
பிறகு, மீண்டும் உயரம் சரி செய்து,
நாற்காலிமேல்  சற்று அமர்ந்தேன்.
கொஞ்சம் அமைதி கிடைக்க.

இப்பொது இருதய துடிப்பு
இம்சை தந்தது.
ரத்த ஓட்டமும் ரகளை செய்தது.
தலை சுற்றல் ஆரம்பித்து,
அதிகரிபதர்க்குள்.
எழுந்தேன்,
நின்றேன் நாற்காலிமேல்,
கழுத்தில் மாட்டினேன்,
முடிச்சை இருக்கினேன்,
இரு கைகளையும் பின்னுக்கு
தள்ளி, இறுக்கி பிடித்து கொண்டேன்,
பற்களை இறுகக் கடித்து,
கண்களை சுருக்கி,
நெற்றியை குறுக்கி,
தலையை நமிர்த்தி,
உடம்பை சற்று மேல் தூக்கி,
ஒரு காலை நன்றாக ஊன்றி,
மறு காலை குதிக்க விட்டு,
நாற்காலியை எட்டி உதைத்தேன்.

தடுமாறி விழுந்தது நாற்காலி.
என் உடம்பும் தொங்கி விழுந்தது.
தலையும் கழுத்தும் வளைத்துக் கொண்டது.
அடுக்கு முடிச்சு கழுத்தெலும்பை
உடைப்பதற்குள், என் இரு கைகள்
கொண்டு கயிறை பிடித்தேன்.
விளைவு எலும்பு சரியாக உடையவில்லை.

முதல் நிமிடம் முழுக்க,
உடைந்தும் உடையாமலும் இருந்த
கழுத்தெலும்பு விடாமல் இடறிகொன்டே இருந்தது.
வலியோ உயிரை உலுக்கியது.

இரண்டாம் நிமிடமோ,
ரத்த ஓட்டம், தடை பட்டு,
தடை பட்டே ஓடியது.

மூன்றாம் நிமிடத்தில்,
நரம்புகள் அனைத்தும் இறுக்கி
பிடித்தது.

நான்காம் நிமிடம் -
தடை பட்டு இருந்த ரத்த
ஓட்டம் நிறுத்தப்பட்டது.

ஐந்தாம் நிமிடத்தில்,
மூச்சுத் திணறல்.
உடலுக்கு தேவையான மூச்சு
கிடைக்காததால், திமிறி
திமிறி போட்டது.

ஆறாம் நிமிடத்தில்,
மென்மையான கருவிழிகள்,
இமை கூடை விட்டு, மெல்ல
மெல்ல வெளியேறிற்று.
நாக்கும் வாய் தாண்டிற்று.

ஏழாம் நிமிடத்தில்,
இருதய துடிப்பு
இறுதியாய் ஒரு முறை துடித்து,
அடங்கியது.
உடலும் விறைத்து போனது...
நான் பிணமானேன்.

தற்கொலை செய்ய நினைக்கும் வீரர்களே!
தற்கொலைக்கு தயாராகி,
முடிபோட முடிவெடுக்கும் நேரத்தில்,
உங்கள் பிரச்சனையின் முடிச்சை
அவிழ்க நினைத்தால் என்ன?

செத்தவனை கேட்டுப் பாருங்கள்,
புரிந்துவிடும் சாவின் கொடூரம்.
கேட்ப்பது சாத்தியம் அன்று.

ஆகையால் வாழ்பவனை கேளுங்கள்,
வாழ்வின் உன்னதம் பற்றி.
ஒரே ஒரு முறை
வாழ்ந்து பாருங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

10 comments:

  1. Really good.... Effectively expressed the views in a very simple language beautifully .. Thats wat dumb readers like me look out for :) .. ... The extensive research u did is reflected in ur work... But pls dont reveal the suspense ( u mentioned research in mail) before .... as the reader will have more enriching experience when he reads it without any particular mindset

    ReplyDelete
  2. Venkatesan Durairaj29 December 2011 at 12:27

    சாவின் கொடுமையைச் சொல்லி, வாழ்வின் அருமையை குருதி உறையும் அளவிற்கு திகிலாகப் பொழியும் ஒரு கவிதை மழை ...

    ReplyDelete
  3. Fantastic... enaku kavithai la ezhudha theriyaadhu Ganesh...Sooper..

    ReplyDelete
  4. மிகவும் வித்தியாசமான கவிதை முதலிலிருந்து

    ஏழாம் நிமிடம்வரை சாவை நோக்கிய

    ஒவ்வொரு நிமிடமும் அறிவியல்

    ரீதியானது என்றே நினைக்கிறேன்

    வாழ்வைப் பற்றிய நம்பிக்கையோடு

    கவிதையை முடித்திருப்பது பாராட்டத்

    தக்கது வாத்துக்கள் கணேஷ்குமர்பாலு

    சிறந்த கவிதை *****

    --அன்புடன் கவின் சாரலன்

    ReplyDelete
  5. தற்கொலை போராட்டத்தை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  6. sirkazhi sabapathy29 December 2011 at 12:29

    புதுமையான முயற்சி... நல்ல கருத்து...

    ReplyDelete
  7. அருமையான படைப்பு நண்பரே ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது..

    அந்த ஏழு நிமிடமும் ஒரு நிமிடத்தில் உணர்ந்தேன்..!!!

    ReplyDelete
  8. Karthikeyan Dakshinamurthy30 December 2011 at 03:04

    romba romba sooooooopeeeerr.. thalai vanangugiren ganesh:-) etho oru dhigil book padicha mari irunthuchi.. vazhthukkal..:-)

    ReplyDelete
  9. முன்பு என்றோ ஒரு நாள் இத்தளம் பார்த்ததாய் ஞாபகம்.இன்று மீண்டும் ரேவாவின் உதவி இங்கு என்னை கைபிடித்து வந்தது.அப்படியே என் பதிவும் உங்கள் கவியும் கைகோர்த்ர்க்கொள்கிறது.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!

    ReplyDelete
  10. 1மாத்திற்கு முள்பு நான் பதிவுலகில் அறிமுகமான போது இத்தளம் பார்த்ததாய் ஞாபகம்.பின் மீளவும் செல்ல முடியவில்லை.மிக்க நன்றி மீண்டும் அழைத்துப்போனமைக்கு.இக்கவிதையை அன்றே படித்ததாயும் ஞாபகம்.அடிக்கடி அம்மாவிட் சொல்வதுண்டு தூக்கு போடுவதிலும் சில தொழில்நுட்பம் இருப்பதாய் எங்கோ பார்த்தேன் என்று...அது இங்கு தான்!!!1

    ReplyDelete