Monday, 24 January 2011

வெட்கக்கேடு(குறுங்கதை)

காலை 6 மணிக்கு 
எண்பது வயது ஆகப்போகும்
மகாதேவன் பிள்ளை,
தொலைபேசி துணை கொண்டு
தன் தனயனை அழைத்தார்.

மலேசியாவில் வாழும் மகன் மகேஷ்
போனை எடுத்து சொல்லுப்பா என்றான்.


ஒண்ணுமில்ல கண்ணு
ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,
அதுக்கு நேரம் அவசியம், இப்போ
சொல்லட்டுமா? என்றார் அப்பா.


இன்னிக்கு வருசையா நாலு மீட்டிங் இருக்கு,
அதுக்கு இன்னும் பத்து நிமிசம் இருக்கு.

என்றான் செல்ல மகன்.

சரிகண்ணு சொல்லற விஷியத்தை
சுருக்கி சொல்றேன்.

அதுவந்து.... இனிமேல் இந்த மூளைகெட்ட
சனியனோட சம்சாரிக்க முடியாது,
பல வருஷமா பல்ல கடிச்சிட்டு
பகலையும், இரவையும் கழிசிட்டு வரேன்.
வாழ்க்கைல ஒரு நிம்மதியுமில்ல, வெகுமதியுமில்ல.

குறுக்கிட்ட மகன் இப்போ என்ன
சொல்ல வரீங்கன்னு சொல்லி முடிங்க என்றான்.

அதுவா, நான் உங்க அம்மாவை விவாகரத்து 
பண்ண முடிவு பண்ணீட்டேன்.

அந்த சிரிக்கியும் சந்தோசம்ம்னு சொல்லிட்டா.
பையன்கிட்ட சொல்லாம செய்தா
அது சரியல்ல, அதுதான் சொல்லறான்.
வச்சிடவா ... என்றார்.

விவாகரத்து பண்ணி புது வாழ்கை தொடங்க
உங்க விவைச்தை தடுக்கலையோ?? சொல்லுங்க...?
அம்மாக்கும் உனக்கும் என்னப்பா பிரச்னை.. ? என்றான்.

அப்பா மெதுவாக, நீயும் நம்ம ஊருக்கு 
வந்து ஆறு வருஷம் ஆகுது.


ஆறு வருஷ கதையை
உன் பத்து நிமுஷ கேப்-ல சொல்ல முடியாது ....
நான் வைக்குறேன், நீ உன் மீடிங்க்கு போ, 

நானும் வக்கீல பார்க்குறேன்.
வச்சிட்டார்....

மகேஷ் செய்வது அறியாமல் தவித்தான்.
உடனே தன் சின்ன தங்கைக்கு
போன்  செய்தான்.


சிங்கப்பூர் சின்ன தங்கை , விஷயம் கேட்டு
விறைத்து போனாள்.
வாயிக்கு வந்தெல்லாம் திட்டி தீர்த்தாள் 

தன் அண்ணனிடம்.

அதோடு மட்டும் நிற்காமல், 

துபாயில் வாழும் தன் அக்காவுக்கும்
போன்  செய்து , அழுது புலம்பினாள்.

எதுக்குமே அரண்டு போகாத அக்கா கொஞ்சம்
ஆடிப்போனாள்.

அக்காவும் தங்கையும் அப்பாவுக்கு போன்
அடிச்சு ஆதங்கத்தை கொட்டினாங்க.


அப்பனோ சொன்ன செய்தியில்
சிலையாய் நின்றார்....

பேச்சு நீண்டு நீண்டு, மகள்களுக்கு புரிந்தது
அப்பாவின் மனதை மாற்ற முடியாது என்று.


கான்பிரன்ஸ் கால்போட்டு முன்று 

பிள்ளைகளும் பேசினார். 


அண்ணன் ஆறு வருடம் முன்பு ஊரில் கண்டதை, 
கேட்டதை சொன்னான்.
மூத்தவள் ஐந்து வருடம் முன்பு அறிந்ததை சொன்னாள்.
இளையவளின் முதல் பையனின் ஊரில் 
முடியெடுத்த விவரத்தை விவரித்தாள்


கலந்து பேசிய பின் முடிவுக்கும் வந்தனர்.

முடிவு செய்ததை சின்னவள் போனில்
மூவரும் நாளை காலை சென்னை
வருகிறோம் என்று அப்பாவிடம் சொன்னாள். 



ஐவரும் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்போம் என்றும்,
அதுவரை பொறுத்து இருங்கள் என்றாள் .

போனை துண்டித்த அப்பா, 

விழியோரத்தில் கண்ணீரும், 
உதட்டில் சிரிப்போடும்
மனைவிடம் சொன்னார், 
நம்  சதாபிஷேகத்துக்கு நம்
பிள்ளைகள் நாளை வருகிறார்களென்று........

சாலைப் பூக்கள்

 பஸ் நிறுத்தத்தில் இன்று
என் இருதயம் நின்று போனது.

இரும்பில் செய்த இதயம் கொஞ்சம்
இலகியும் போனது.

மூளையும் என்னை சாலையோரம்
நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தது.

வானத்து விண்மீனொன்று சல்வார்
சூடி சாலையில் பூத்திருந்தது.
பூக்களை பறிக்காதீர்கள் என்ற அறிக்கை
கண்ணில் படாததால் அருகில் சென்றேன்.
பறிக்க அல்ல, ரசிக்க.

கொடியின் உயிரம் என்னை பதம் பார்த்தது.
பூவின் வாசமோ என் சுவாசத்தை
சுத்திகரிப்பு செய்தது.

அகண்ட விழிகள் என்னை விழுங்க
மறுத்து தரையை அழந்து கொண்டிருந்தது.
அறைகுறையாய் தெரிந்த அவள் கரு விழிகளின்
நிறம் நீளம்.

படர்ந்து இருந்த புருவமும் புரட்டி போட்டது.
பெரிய நெற்றி என் தலையை சுற்ற வைத்தது.

கோதுமையில்  கொஞ்சம் மஞ்சள் சேர்ந்த நிறம்
அவள் மேனி நிறம்.
விடைத்த மூக்கும், மாதுளை பற்களும்
விரசம் தூண்டும் இதழ்களும் என்னை இழுத்துப் போட்டது.

கரை புரண்டோடும் சுருண்ட கூந்தல் இடுப்பை
தட்டிக் கொண்டே இருந்தது.

என் ரசனை மேலோங்கி விசாரிக்கலானேன்.
பூவின் பெயர் மல்லிகா, அதையும் சிரித்துக்
கொண்டே, மணக்க மணக்கச் சொன்னாள்.

என்ன வேலை செய்கிறாய் என்றதற்கு,
வாடிக்கையாளர் சேவை என்றாள்.

வெட்கப்பட்டுக் கொண்டே அழகாய்
இருகிறாய் என்றேன்.
அக்கம் பக்கம் பார்த்து பின்,
செருப்பு பிஞ்சிடும் என்றாள்.

வார்த்தை சுருக்கென்று பட்டதால்.
கொஞ்சம் ஸ்ருதி குறைத்து,
என் ஆசையும், ரசனையும் பக்குவமாய்
காதில் ஓதினேன்.

பளார் என்று அறைந்த அவள், தரையை
பார்த்து எச்சியை துப்பினாள்.

ஆத்திரம் வந்து, காதலிப்பதும், திருமணம்
செய்து கொள்ள நினைப்பதும் என்ன
கொலை குற்றமா என்றேன்?
அதற்கு அவள் உன் மாமவிடமே  கேள்
என்று டயல் செய்து கொடுத்தாள்.

ஹலோ சொன்னவரிடம்,
என் காதல் விருப்பத்தைச் சொன்னேன்.
அதற்கு அவரோ,
அரைதினம் காதலிக்க
பத்தாயிரம் என்றார்!!!!!!!!!!!!!!!!!