அழகானவளே,
உன்னை பல வருடங்களுக்கு
முன்பு, ஒரு முறை பார்த்து சிலையானேன்.
அன்று முதல் இன்று வரை,
தினம் ஒரு முறை பார்க்காவிடில்,
பஞ்சனை பாறையாகிவிடும்.
சந்தோஷத்தில் உன்னோடு இருக்கையில்,
சிரிக்கிறாய்.
துக்கத்தில் துவண்டு கிடக்கையில்
என்னை சிரிக்க வைகிறாய்.
உன் போட்டோ இல்லாத
இடம் இல்லை என் வீட்டில்,
ஆனாலும் உன்னை பார்த்துக்கொண்டே
இருக்க தூண்டுகிறது என் மனம்.
அனுமதித்தால் இரவு கூட,
நேரில் பார்த்து சேவிப்பேன்,
அனுமதிக்கவைப்பாய்.
சில நேரம் உன் கண்ணின் ஒலி கண்டு,
சிலிரித்து போனதுண்டு.
பல நேரம் உன் லட்சணத்தில்,
லயதுப்போனதுண்டு.
உன்னை பார்க்கும் வரை இருக்கும்
பதட்டம், பார்க்கும் போது அதிகமாகி
பின்பு சாந்தி நிலை அடையும்
ஆனந்தத்தை என்ன வென்று நான் சொல்லுவேன்.
எத்தனை பேர் தவம் கிடக்கின்றனர்
உன்னை ரட்சிக்க, என்னை மட்டும் எப்படி
ஆட்கொண்டாய்.
என் கடுமையான காதலை,
கரும்பாக்கி, தேனூற்றி,
என்மீதே தெளிக்கிறாய்.
அதை நான் பருக முடியாமல்,
நனைத்துக் கொள்கிறேன் உடல்முழுதும்.
அன்போடு வளர்த்த அன்னையும்,
அதட்டாத தந்தையும் எனக்கு
ரெண்டாம் பட்சம் தான், நீ இருக்கையில்.
என்ன செய்தாய்,
இப்படி பித்தனானேன்.
உடை பிரியனான நான், உனக்காக
உனக்கு பிடித்த சிகப்பு நிறத்தையே
தினந்தோறும் அணிந்தேன்.
சிரித்தார்கள் என் சக நண்பர்கள்,
உன் மகிமை புரியாத மதி கெட்டவர்கள்.
எத்தனை ஆச்சிரயங்கள் என் வாழ்கையில்
புரிந்திருக்கிறாய். பட்டியலிட்டால் பேணா
முனையே மழுங்கி போகும்.
பர்சு தொலைத்தேன், பதறவேண்டாம்
கிடைத்துவிடும் என்றாய், கிடைத்தது.
நோயோடு வாழ்கையில், நொடிந்து போக
மாட்டாய் என்றாய், நிமிர்ந்து அமர்தேன்,
அலுவலக சிக்கலென்றேன், சிரித்துக்கொண்டே
என் சிந்தனையை சீர் செய்தாய்.
இன்னும் எவ்வளவோ, யாருக்கு கிடைக்கும்
இப்படியொரு சக்தி படைத்த சாவித்திரி.
காதல் உச்சம் தொட்ட போது,
பசிக்கும் புசிக்க முடியாது,
புசித்தால் செரிக்காது,
குளிக்க மாட்டேன் அனால் நறுமணம் கமழும்,
கண்ணாடி அழுக்காகும்,
சீப்பு செத்துபோகும்,
தலை மயிர் கூடு கட்டும்,
சுத்தியுல்வர் மாயமாவர்,
அண்டம் முழுதும் என் அட்டகாசம் மட்டுமே,
ஆகாயம் தொடும் தூரத்தில் இருக்கும்,
அலை கடலையும் அளக்க முடியும்,
நட்சத்திர ஒளியை கட்டுப்டுத்த முடியும்,
சுட்டெரிக்கும் சூரியன் நடுங்க வைக்கும்,
குளிர் காற்று கனல் மூற்றும்,
செருப்பு கடிக்கும்,
பாதம் தரையோடு நடக்க பரிதவிக்கும்,
தாடி தாடை தாண்டும்,
முக சவரம் மறந்துபோகும்.
உன்னையே துதி பாட துடிக்கிறேன்,
துணையிருப்பாய்.
வாய்விட்டே பேசமாட்டாய்,
விளங்கவைபாய்.
தொட்டு பலகமாடாய்,
பாசத்தோடு பார்துகொல்வாய்,
எழுபது வயதில்,
ஏங்கி கிடக்கிறேன்,
உன்னை நேரில் காண,
பூலோகம் வர மறுத்தால்,
என்னை கூட்டி கொள்வாய்
தேவலோகத்துக்கு,
கருணை தேவியே,
காமாட்சி அம்மனே.
Subscribe to:
Post Comments (Atom)

Wow wonderful, I was just abt to type that, is it a poem written for ur beloved just before reading the last para, but stunned with the twist and shud have thought abt the crux just atleast by reading the topic or atleast when u narrated with red saree. Good twist.......
ReplyDelete