பல நாட்கள் நோயுற்று,
படுத்த படுக்கையாய்,
மருத்துவர் தேதிகுறித்தபின்
நடக்கும் சம்பவங்களின் பதிவு இது...
இருட்டறை,
மருந்துக்கு கூட காற்றோட்டமில்லை.
அனலாய் கொதிக்கும் உடம்புமேல்
கணமாய் கணக்கும் கம்பளி.
ஈரம் இல்லாத கருவிழிகள்,
சுருண்டே இருக்கும் இமைகள்.
வாய்திறக்க வலுவில்லை.
மூச்சு மட்டும் விடாமல் வேலை செய்கிறது,
இதனால் மூக்கு மட்டும் அசைகிறது.
பஞ்சடைத்த காதினுள்
காற்றுசத்தம் மட்டுமே கச்சிதம்.
குச்சியான கைகள்,
பார்க்க முடிகிற பச்சை நரம்பு.
விரல் நுணியில் எப்படியோ
நகம் விழாமல் ஒட்டியிருகிறது.
இது எட்டாவது அதிசயம்.
குறுகிய குரல்வளைகள்,
மிகமெலிந்த நெஞ்சுக்கூடு,
ஒட்டிய வயிறு, ஒல்லியான இடுப்பு.
சதையட்ட்ற தொடை, சத்தற்ற
முழங்கால், பாலமாய் வெடித்த
பாதங்களோடு, பல்லக்கில்
பலகாலமாய் பள்ளிகொண்டிருகிறேன்.
என் பெயர் தமிழ்வாணன் தாத்தா, வயது 88 .
இந்த கணம் தொண்டைக்கட்டி,
மூசுக்கட்ட்ரை வாய்வழி வர தயாரானது.
வந்தது ஒலி கீ கீ என்று,
நிறுத்த தெம்பற்று அலறுகிறேன்.
அடக்க முடியாமல் படுக்கையை
நணைக்கிறேன். இரு துவாரங்களிலிருந்தும்.
விலா எலும்பு மேலும் கீழுமாக
உரியடிகிறது.
கழுத்தோ கணக்கில்லாமல்
கரைகிறது.
சத்தம் கேட்டு சபை கூடுகிறது.
யார் இவர்கள், உற்று பார்கிறேன்,
உருவம் தென்படவில்லை.
இருட்டு மட்டும் அதிகரித்தது.
ஏனோ தெரியவில்லை
கால்கள் இரண்டும் உதற
ஆரம்பித்தது.
சுற்றியுள்ளவர் சற்றே விலகினர்,
பயத்தில்.
எங்கிருந்து வந்தது இந்த வலிமை
கால் பந்து வீரன்போல்,
விசிறி விசிறி உதைக்கிறேன்,
வாயோ கீச்சு கீச்சு சத்தம் செய்ய
தவறவில்லை.
இருவர் காலைபற்றினர்,
ஒருவர் நெற்றி தடவினார்.
எதுவும் நின்றபாடில்லை.
சத்தமிட்டு அழுகின்றனற்போல்,
எதுவுமே காதுவந்தடையவில்லை.
உருவங்கள் அசைவதும்
அரைகுறையாய் தரிசித்தன.
அறைமுழுவதும் நிசப்தம்.
அப்போது, எரிச்சலோடு
மூக்கில் சிகப்பு திரவம் வழிந்தன.
சுத்தியுள்ளவர் வாய்மூடவில்லை.
யாரோ ஒருவன் தண்ணீர்
ஊற்றுகிறான்,
வாங்கிக்கொள்ள வாய்தயாராகில்லை,
இருந்தாலும் ஊற்றுகிறான்.
விழுங்கமருத்து, வழிந்தன.
இடப்பக்கம், வலபக்கமிருந்தவர்கள்
பாய்ந்து விழுந்தனர் என் மேல்,
உடம்பு ரணமாய் வலித்தது,
மூச்சு தடுமாறியது.
பாரம் தாங்காமல் வாய் திறந்தது.
ஆறுபேர் என்னை தரையிறக்கினர்.
என் ஆடைகலைந்து, வெந்துணி
போர்த்தினர்.
வர மறுத்த என் கட்டை விரல்களை
கயிறு கொண்டு சேர்த்து கட்டினர்.
நாடி பார்த்த ஒருவன்,
காற்று வாக்கில் கைகளை விட்டான்.
தறிகெட்டு தரை விழுந்தது.
எதையோ சொல்ல நினைத்த என்
நாக்கு இழுத்தது ஒருமுறை,
இழுத்தது மறுமுறை,
இழுத்தது...........
Subscribe to:
Post Comments (Atom)

this is very good sir!!! so profound.... and very elaborate... very well penned!
ReplyDeleteI can't imagine how u can write like this. You take reader to that point.. I can feel a person at that position. Very well scripted.. This has to be applauded with standing ovation.
ReplyDeleteGood going man
Thank you.
ReplyDelete