Monday, 16 August 2010

போராளி

பல நாட்களாக விடாது கொட்டுகிறது
பேய் மழை.

கூரை வேய்ந்த என் வீடு,
நீச்சல் குளமாக மாறிவருகிறது.

மின்சாரமில்லை, இரவில் என்னோடு
இருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை.

சத்தம் கொடுகச்சொன்னேன் என்
சக குடும்பத்தினரிடம்.

எனக்கோ ஒரு மனைவி தான், இரு
மகள்கள் உண்டு.

ஒரு மகளுக்கோ ஓடத் தெரியும்,
மற்றவளுக்கோ விழாமல் நடக்க
மட்டுமே தெரியும்.

இருள்  கவ்வ கவ்வ, நீர் மட்டம் அதிகரிக்கிறது.
கடவுளே காப்பாத்து என்று கைகள் உயர்த்தி
கூவிப்பர்தேன், என் குரல் என்னக்கே கேட்கவில்லை,
ஊரெல்லாம் இதே அபளைகுரல் தான்.

தலையில் கைவைத்தால் தொப்பி காணவில்லை.
பயம்வந்து மகளையும், மனைவியையும்
அருக அருகே வரவைத்தேன்.
முகம் தெரியவில்லை, மூச்சுக்காற்று பரிமாறப்பட்டது.

யோசித்தேன் என் பலங்காலம்பற்றி....
எத்தனை உதைகள், கடுப்பான வார்த்தைகள்
உதிர்திருபேன் என் மனைவிமேல்.
அழுதுகொண்டே இருப்பாள் தவிர,
அதிரிந்து பேச மாட்டாள் என் அருமை
அலீமா பேகம்.

என் காசையும், ஆசையும் கொள்கைக்கு மட்டுமே
கூறுபோட்டேன்.
என் குடும்ப விளக்குக்கு குண்டு மணிகூட
கொடுததில்லையே!

இன்னும் எத்தனை மணித்துளிகளோ இறைவன்
என்னை இழுத்துக்கொள்ள?

மகள் சபீனா முதலில் அப்பா சொன்னபோதுகூட
அருகில் இல்லையே!
ஆசையாய் ஜலீலாவுக்கு முத்தம்கூட தந்ததில்லையே!

என் நேரமெல்லாம் மத சொற்பொழிவிலும்,
மதவாதிகலோடுமே  கழிந்துவிட்டதே!
எத்தனை பேரை கொன்றிருப்பேன்,
கடவுளின் பெயரில் காவு கொடுத்திருப்பேன்
என் தாய்நாட்டிற்காக.

இத்தனை செய்தேன் கடவுளே,
என் குடும்பத்திரிக்கு உயிர் பிச்சை
தர மாட்டீரோ?

ஒலிப்பெருக்கி  ஓலமிட ஆரம்பித்தது..
என்ன செய்தியென்று தெரிவதற்குள்,
காட்டாற்று வெள்ளமொன்று என்
ஜலீலாவை அடித்துசென்றது,

நடக்க மட்டுமே தெரிந்தவள் இப்போது
நீந்திச்செல்கிறாள்  அழுதுகொண்டே!

ஐய்யோ இறைவா, என் மகள் முகம்கூட
மனதில் பதியவில்லையே, மனமிரங்கமாடாயா?
என்று முடிபதற்குள் முக்காடிட்ட என் அலீமா அல்லாவை
ஆராதிக்க மூழ்கி விட்டாள்.

அழக்கூட அருதியற்று நின்றேன்.
கழுத்தில் அமர்ந்திருந்த சபீனா சாய்ந்து விழுந்தால்
சகதி நீரில்!

சாதிக்காக, மதத்திற்காக, போர்கொடியேந்தி,
குடம்பத்தோடு பொழைக்க மறந்தேனே!

கடவுளுக்காக கத்தியேந்தி, கத்தி கதறிய
குழந்தைகளோடு காலம் கழிக்க மறந்தேனே!

மனிதம் கொன்று குவித்து, மாசில்லா மாணிக்க
முகம் கொண்ட மனைவியை மகிழ்விக்க மறந்தேனே!

இயற்கை தான் இறைவனோ,
இதுதான் தண்ண்டனையோ,
தண்ணீருக்குள் புதைந்துபோனேன்,
பல போராளிகளைப் போல்............

2 comments:

  1. This is a Wonderful expression about a person involved in Pakistan Disaster. I dont think anyone would have even thought about the sufferings our brothers are undergoing there...!! Nice one

    ReplyDelete