காலை சுமார் 5.40 ,
இமைகள் ஒட்ட மறுத்து
தூக்கம் தொலைந்தது.
எழ முயன்றேன்
கைகள் ஒத்துழைக்க மறுத்தது.
கைகளை இடப்புறம், வலப்புறம்,
மேலும், கீழுமாக சுற்றி பார்த்தேன்.
கைகள் சொன்னபடி கேட்டதை ரசித்தேன்.
மறுமுறை முயன்று எழுந்தேன்
படுக்கையிலிருந்து .
இடுப்பு தண்டுவடம் இந்த நாள் தண்டனையை
ஆரம்பித்தது.
கால்கள் இரண்டும் தரைப்பட
தயங்கின.
உற்றுபார்தால் ஒரு கால்
மல்யுத்த வீரனின் கால்போல் தோன்றிற்று.
தைலம் தொட்டு நிதானம்வர
நீவி விட்டேன்.
லேசான எரிச்சல் தவிர
வேறொரு பலனில்லை.
எழுந்து நிற்க ஆயத்தமானேன்,
எதிர் சுவரை சொந்தமாகி
நொந்தகால்களில் நின்றேன்.
அடிமேல் அடிவைத்து பத்துமாதக்
குழந்தைபோல் தள்ளாடி கதவடைத்தேன்.
திறந்து, குனிந்து, பால் பாக்கெட்,
தினத்தந்தி அள்ளி அடிப்ரதக்ஷனத்தை
ஆரம்பித்தேன்.
வரண்டா சேரில் இளைப்பாறினேன் ,
ஏதோ இமாலய சாகசம் புரிந்த வீரனைப்போல்.
இளைபாரும்போது முழங்கால் மூட்டில்
முப்பது ஊசி கொண்டு குத்துவதுபோல்
உணர்தேன்.
அதே தைலம், அதே சிகிச்சை
இப்பொது ஊசி ஒன்று குறைந்ததாய்
தோணியது, மகிழ்ச்சி.
மணி 8 .௦௦, பல் துலக்க பிரயானப்படேன் ,
அதில் வெற்றியும் கண்டேன்.
சர்க்கரை ஊசியை சதையில் சொருகினேன்,
குத்திய உணர்ச்சிகூட இல்லை.
காலை உணவை கடமைக்கு உண்டேன்.
மறுபடியும் வராண்டா சேரில்.
படாத பாடுபட்டு தினத்தந்தியை முடித்தேன்.
கண்ணின் எரிச்சல் மூளையை பதம் பார்த்தது.
துண்டுதுனைகொண்டு ஒத்தி கொடுத்தேன்.
மணி 1.௦௦, மதிய உணவு வேலை
மதியா விருந்தாளி போல் உண்டேன்.
உண்டகளைப்பு கலையுமுன்
கணக்கில்லா மாத்திரைகளை
நொடிபொழுதில் இறையாக்கினேன்.
மறுபடியும் வராண்டா ஷேர் வந்தடைந்தேன்,
வரண்டுபோன தொலைகாட்சி நாடகங்களை
பார்துகொண்டபடி கண்ணயர்ந்தேன்.
மாலை மணி 4.30 , சர்கரையில்லா
காபியருந்தி எழுந்து நடக்க முற்பட்டேன்.
நரம்புகள் பூட்டிய குதிரைகள்போல்
கால்கள் திமிறி நின்றன, வலியோ
உயிரை உலுக்கின, திரும்பவும்
தைல சிகிச்சை.
வீட்டின் முற்றம் தாண்டி,
வெளியே வந்து காற்றுவாங்க அமர்ந்தேன்.
தெருவில் பிஞ்சு குழந்தைகள்
துரத்தி விளையாடின.
என் நினைவு பேரன், பேத்திமேல்
பாய்ந்தது, அவர்களோ பலாயிரக்கனகான
மயில்கள் அப்பால் யூடுபில் நற்செரி ரைமஸ்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
மனைவியிடம் போன் எப்பவரும் என்று
தினம்கேட்கும் கேள்வியை கேட்டுவைத்தேன்.
அதே மணிக்குதான்னு பதில் வந்தது.
கடிகாரம் கண்ணில் படும் தூரமிரிந்தும்
முள்ளின் முழுதரிசனம் அகப்படவில்லை.
மணி எத்தனை என்றேன்? 7.30 என்று
பதில் வந்தது.
இன்னும் அரைமணி நேரத்தில் ஆருயிர்களிடமிருந்து
அழைப்புமணி வரலாம் என்று தெரியாத
கடிகாரத்தை கண்கொட்டாமல் பார்த்து
கொண்டே இருந்தேன்.
வந்தது அழைப்புமணி, குழந்தைபோல்
துள்ளி எழுந்தேன், தவறி விழுந்தேன்,
யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற
அச்சத்தில் கடைநிலை போர்வீரன் போல்
சமாளித்து எழுந்தேன்.
வந்த அழைப்பு வீட்டுகடன் எடுக்கசொல்லி ,
சோர்ந்த முகத்தோடு அதே வராண்டா
சேரில் வலுவிழந்து அமர்ந்தேன்.
சுமார் 10 மணி, சர்கரை ஊசியேற்றி
சப்பையான சத்துணவை முடித்தேன்.
அடித்தது அழைப்புமணி 11 மணிக்கு.
ஹலோ என்றேன்,
பேரன் : "எத்தடி இடுக்க தாதா" என்றான்
எனக்கோ கண்ணீர் கொப்பளித்தது
என் இரு கண்களிலும், பேச்சு வர தொண்டை
தடுமாறியது.
இவ்வளவு நேரம் பட்ட வழிக்கு கண்கள்
கலங்கவில்லை, இந்த மழலை கரைத்துவிட்டது
போல் உணர்ந்தேன்.
"நல்ல இருக்கேண்டா" ன்னு பதில் சொன்னேன்.
பேரன் : "சாபிதிய" என்றான்.
நான்: " நீ சாப்பிட்டாய? என்றேன். அதற்கு
பேரன்: "சபதி ஏழு தின்னு" ன்னுனான்.
சிரிப்போடு மனதுக்கு பூரிப்பு வந்தது.
பிறகு மகனோடு மனபாடம் செய்த
அதே கேள்வி, அதே பதில், உரையாடல் முடிந்தது.
என் உயிர் மீண்டும் ஜீவனற்றுபோனது.
மணி 12 மறுபடியும் அழைப்புமணி,
வெளிநாட்டுபேத்தியின் குரல்,
ஒரு வயது நிரம்பாதவளிடமிருந்து
அத்தனை முத்துமுத்தான வார்த்தைகள்.
மறுபடியும் கண்ணீர் வந்தது, துடைத்துகொன்டே
தூக்கத்தை துரத்த ஆரம்பித்தேன்.
மணி 1.00 தூக்கம் வரவில்லை,
நினைவெல்லாம் குழந்தைகள்மேல்,
யாரிடம் முறையிட்டு இங்கு வரவைக்க..
தெரியவில்லை, தெம்புமில்லை.
தலையணையை மாற்றிபார்தேன் பலனில்லை,
தைலமிட்டுபார்தேன் தணிந்தபாடில்லை,
புரண்டு படுத்தேன் புண்ணியமில்லை,
கைகளை வைத்து கண்களை மறைத்துப்பார்த்தேன்,
விழிகள் வெளிநாடு சென்றது வேலன்திகளை பார்க்க.
தூக்க மாத்திரை நாடி தூங்கிவிட்டேன்போல்,
ஆனால் கண்களிலிருந்து நீரூற்று நின்றபாடில்லை,
தலையணை ஈரமாகி என்னை எழுப்பிவிட்டது.
காலை சுமார் 5.40 ,
இமைகள் ஓட்ட மறுத்து
தூக்கம் தொலைந்தது .........
.
Subscribe to:
Post Comments (Atom)

இந்த கவிதையை படிக்கும்போதே இதயத்தில் யாரோ ஊசி கொண்டு குத்துவது போல உணர்தேன்...மேலே படிக்கவேண்டுமென்று
ReplyDeleteதூண்டினாலும் அடுத்த வரிகளை படிக்க முடியாமல் தவித்தேன்....
ரத்தம் சுண்ட சுண்ட, அன்புக்கு ஏங்கும் பல நெஞ்சங்களை உன் கவிதையில் கண்ண்டேன்....
என் தந்தையையும் பார்த்தேன்...கவிதையின் முடிவில் பேச வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் துளிகள் மட்டுமே வந்தன....
அருமையாக ஒரு முதியவரின் ஏக்கத்தை சொல்லி இருகிறாய்....இதை சொல்லும் அளவுக்கு உன் வயது முதிர்ந்து விடவில்லை என்றாலும்...உன் சிந்தனையின் முதிர்ச்சியை பார்க்கிறேன்....
எல்லோரும் கவனிக்க வேண்டிய கவிதை..
people who are away from parents due to biz calls, do cheer them up by making phone calls every now and then...
Too good to comment.. My father cried on reading this, what more words do u need to appreciate a creation like this. I was overwhelmed by your words and I think I shud get matured enough to praise you as you this poem can make the thickest of blood go thin. Kudos! One more feather in you hat.
ReplyDelete