Tuesday, 24 August 2010

கிருஷ்ணவேணி

சுமார் ஏழு வருடங்கள்
லண்டனில் கழித்து
சென்னை வந்தடைந்தேன்.

திருமணம் இன்னும் ஆகவில்லை,
ஏங்கிக் கிடக்கிறேன் ஏதோவொரு
ஏவாளை மணமுடிக்க.

அன்று அதிகாலை எழுந்து,
முகசவரம் செய்து, தலைகுளித்து,
வாசனை சென்ட் அடித்து, தலைமுடி
படியவாரி, நல்ல துணி அணிந்து,
பல நாள் கணவை நிறைவேற்ற
கிளம்பிவிட்டேன்.

யாரிடமும் சொல்லவில்லை.
தெரிந்தவர்களிடம் இடம் கேட்டு
பைக்கில் கிளம்பிவிட்டேன்.

அந்த இடம் வந்து, எந்த சந்தென்று
ஒரு குழப்பம், கேட்பதற்கும் ஒரு
கூச்சம்.

ஒருவழியாக சரியான சந்து
கண்டு நுழைந்தேன்.
தேர்கூட்டம், பையிலோ
ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே.

ஒருவன் அருகில் வந்தான்,
வந்து மூவாயிரமென்றான்.

பேரம் பேசினேன், போலீஸ்
தொல்லை அதிகம், அதே ரேட்
என்றான். தட்டிகளிக்கவில்லை
கொடுத்துவிட்டேன் கேட்ட பணத்தை.

காதில் ஒருவன் வண்டியை வெளியே
நிறுத்தென்றான். நிறுத்திவிட்டு வழி தேடி
தொடர்ந்தேன்.

ஏதோஒரு படபடப்பு, வெயிலால் வேர்த
உடம்போடு உள்ளே சென்றேன்.

செய்வது சரியா?, தவறா?, அவசியமா?
எதுவுமே யோசிக்க முடியவில்லை.

நேரமாக, நேரமாக உடல் உஷ்ணம்
உலுக்கி எடுத்தது.

மேலும், கீழுமாக பார்த்த ஒருவன்
உள்ளே  செல் என்றான்.
கழுத்து சங்கிலியை காலரில்
சொருகி உள்ளே நடந்தேன்.

கும்மிருட்டு, ஒன்றுமே தெரியவில்லை,
கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.
எப்படியிருக்கும் இந்த அனுபவம்?
சிந்திக்க முடியவில்லை.

ஏசி காற்று சில்லென்று அடித்தும்,
வியர்வை நின்றபாடில்லை.

சிறிது நேரம் கழித்து, யாரோ
அமர்ந்தார் அருகில், உற்றுபார்த்தேன்,
ஒரு பெண்.
வயது கணிக்கமுடியவில்லை.
ஆனால் மல்லிகை மணம்
மூக்கை ஊடுருவியது.

சிலநொடிகளில் இன்னொரு பெண்
இடப்பக்கம்.

இருட்டு இன்னும் அதிகரித்தது.
ஜனநடமாடும் சத்தம் ஓயவில்லை.
பின்பு மயான அமைதி.

என் ரத்த ஓட்டம்
ராக்கெட் போல் உச்சம்
தொட்டது.
கால்களோ நிற்காமல் நடனமாடியது,
பரவசத்தில்.

சுகதாரமின்மை உடலை பதம்
பார்க்குமோ என்று அச்சம் வேறு.
அனுபவித்தே ஆகவேண்டுமென்று
ஆர்வம் வேறு. எப்போதும்போல்
ஆர்வமே ஜெயித்தது.

இபோது என் எதிரில் விளக்கணிந்த
சுருங்கிய சிகப்பு துணியை பார்க்க முடிகிறது.
அருகில் இருந்தவள் கை லேசாக பட்டது
எத்தேசையாக.

திரை மெல்ல மெல்ல விலகுகிறது.
நடுக்கமோ நாடு கடத்தியது.

மனதுக்குள் மணி அடித்தது.
பிறகு வெண் திரை கண்டேன்,
அதில் பூட்ஸ் கால் பார்த்து பூரித்தேன்.

பலாயிரம் பட்டாம்பூச்சிகள் மேல்நோக்கி
பறக்கக் கண்டேன்.

காதை கிழிக்கும் கரகோஷமோ?
கணிக்கவில்லை.

ஸ்லொவ் மோசனில் முழங்கால்
தரிசித்து, இடுப்பு பார்த்து,
கழுத்து கண்டு, தலைதூக்கி
முகதரிசனம் செய்ய
நினைக்கும்போது....

ஹலோ பாஸ்! கொஞ்சம் தணிஞ்சு
உட்காருங்கோன்னு  ஒரு
கோரிக்கை.
கோபத்தை அடக்கிக்கொண்டு,
விரல் வைத்து, நாக்கு மடித்து,
விசில் அடித்து பார்த்தேன்
இயந்திரனை,
முதல் நாள், முதல் காட்சி,
ஏழு வருடம் கழித்து,
கிருஷ்ணவேணி தியேட்டரில்................

தொலைந்து போன கம்மல்

நடு இரவில் ஐயோ என்று ஒரு அலறல்!
திடுக்கிட்டு எழுந்து , என்னாச்சு என்றேன் ,
அணித்திருந்த கம்மல் ஒன்று காணவில்லை
என்றாள் என் அன்பானவள் .

சில மணித்துளிகள் முன்பு ,
காதோடு கம்மலை கவ்வியிருந்தாளாம்
என் கண்மணி .

விழுந்தது இடி என் பிடறியில்!!!!!!!
அந்தநேரம் பார்த்து,
 தும்மலோடு துவண்டு எழுந்தால் என்
ஒரு வயது உயிர் நாதம்.

விழிங்கிவிட்டாலோ கம்மலை ?
உதித்தது என் மனத்தில் !

உடனே படர்ந்தது உடலெங்கும் வியர்வை .
ஆச்சிரியக்குரியோடு (!) இருந்த என்
மகளை , ஆங்கில 'i' யாக மாற்றிப்பார்த்தேன் .

குடித்த பால் அனைத்தும் படுக்கையில்
படர்ந்தன , ஆனால் கம்மல் மட்டும்
அகப்படவில்லை .

யோசித்துப்பார்த்தோம் :
இவளின் நகைச்சுவை உணர்வை அதிககப்படுத்த ,
நகையை சுவைத்திருப்பாளோ ? அல்லது

நகைப்பற்று அற்றுப்போக ,
உண்டிருப்பாளோ ? அல்லது

காதணி விழாவில் கண்ணீர் சிந்திய
வஞ்சத்தை தீர்த்துக்கொண்டாளோ ?

தெரியவில்லை எங்களுக்கு , மருத்துவட்சியை
அணுகினோம் தெரிந்துகொள்ளாம்ென்று .
ஆராய்ந்து பார்த்து அகப்படவில்லை ,
பயப்டவேண்டாம் என்றாள் .
ஆனதமடைந்தோம் . ஆனால்
பிஞ்சு பதுமை பயத்தோடு பார்த்தது .
பயத்தின் அருமை புரிந்தது எனக்கு
ஆனால் மழலையின் மனதை
மாற்றத் தெரியவில்லை .

இதேபோல் கம்மல் , ஊசி , பாசி , காசு ,
மோதிரம் தொலைத்த பெற்றோருக்கு
இதை சமர்பிக்கிறேன் .

Monday, 23 August 2010

உயிர்

பல நாட்கள் நோயுற்று,
படுத்த படுக்கையாய்,
மருத்துவர் தேதிகுறித்தபின்
நடக்கும் சம்பவங்களின் பதிவு இது...

இருட்டறை,
மருந்துக்கு கூட காற்றோட்டமில்லை.

அனலாய் கொதிக்கும் உடம்புமேல்
கணமாய் கணக்கும் கம்பளி.

ஈரம் இல்லாத கருவிழிகள்,
சுருண்டே இருக்கும் இமைகள்.

வாய்திறக்க வலுவில்லை.
மூச்சு மட்டும் விடாமல் வேலை செய்கிறது,
இதனால் மூக்கு மட்டும் அசைகிறது.

பஞ்சடைத்த காதினுள்
காற்றுசத்தம் மட்டுமே கச்சிதம்.

குச்சியான கைகள்,
பார்க்க முடிகிற பச்சை நரம்பு.

விரல் நுணியில் எப்படியோ
நகம் விழாமல் ஒட்டியிருகிறது.
இது எட்டாவது அதிசயம்.

குறுகிய குரல்வளைகள்,
மிகமெலிந்த நெஞ்சுக்கூடு,
ஒட்டிய வயிறு, ஒல்லியான இடுப்பு.

சதையட்ட்ற தொடை, சத்தற்ற
முழங்கால், பாலமாய் வெடித்த
பாதங்களோடு, பல்லக்கில்
பலகாலமாய் பள்ளிகொண்டிருகிறேன்.

என் பெயர் தமிழ்வாணன் தாத்தா, வயது 88 .

இந்த கணம் தொண்டைக்கட்டி,
மூசுக்கட்ட்ரை வாய்வழி வர தயாரானது.
வந்தது ஒலி கீ கீ என்று,
நிறுத்த தெம்பற்று அலறுகிறேன்.

அடக்க முடியாமல் படுக்கையை
நணைக்கிறேன். இரு துவாரங்களிலிருந்தும்.

விலா எலும்பு மேலும் கீழுமாக
உரியடிகிறது.

கழுத்தோ கணக்கில்லாமல்
கரைகிறது.

சத்தம் கேட்டு சபை கூடுகிறது.
யார் இவர்கள், உற்று பார்கிறேன்,
உருவம் தென்படவில்லை.

இருட்டு மட்டும் அதிகரித்தது.
ஏனோ தெரியவில்லை
கால்கள் இரண்டும் உதற
ஆரம்பித்தது.
சுற்றியுள்ளவர் சற்றே விலகினர்,
பயத்தில்.

எங்கிருந்து வந்தது இந்த வலிமை
கால் பந்து வீரன்போல்,
விசிறி விசிறி உதைக்கிறேன்,
வாயோ கீச்சு கீச்சு சத்தம் செய்ய
தவறவில்லை.

இருவர் காலைபற்றினர்,
ஒருவர் நெற்றி தடவினார்.
எதுவும் நின்றபாடில்லை.

சத்தமிட்டு அழுகின்றனற்போல்,
எதுவுமே காதுவந்தடையவில்லை.

உருவங்கள் அசைவதும்
அரைகுறையாய் தரிசித்தன.

அறைமுழுவதும் நிசப்தம்.
அப்போது, எரிச்சலோடு
மூக்கில் சிகப்பு திரவம் வழிந்தன.

சுத்தியுள்ளவர் வாய்மூடவில்லை.
யாரோ ஒருவன் தண்ணீர்
ஊற்றுகிறான்,
வாங்கிக்கொள்ள வாய்தயாராகில்லை,
இருந்தாலும் ஊற்றுகிறான்.

விழுங்கமருத்து, வழிந்தன.

இடப்பக்கம், வலபக்கமிருந்தவர்கள்
பாய்ந்து விழுந்தனர் என் மேல்,
உடம்பு ரணமாய் வலித்தது,
மூச்சு தடுமாறியது.
பாரம் தாங்காமல் வாய் திறந்தது.

ஆறுபேர் என்னை தரையிறக்கினர்.
என் ஆடைகலைந்து, வெந்துணி
போர்த்தினர்.

வர மறுத்த என் கட்டை விரல்களை
கயிறு கொண்டு சேர்த்து கட்டினர்.

நாடி பார்த்த ஒருவன்,
காற்று வாக்கில் கைகளை விட்டான்.
தறிகெட்டு  தரை விழுந்தது.

எதையோ சொல்ல நினைத்த என்
நாக்கு இழுத்தது ஒருமுறை,
இழுத்தது மறுமுறை,
இழுத்தது...........

Monday, 16 August 2010

போராளி

பல நாட்களாக விடாது கொட்டுகிறது
பேய் மழை.

கூரை வேய்ந்த என் வீடு,
நீச்சல் குளமாக மாறிவருகிறது.

மின்சாரமில்லை, இரவில் என்னோடு
இருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை.

சத்தம் கொடுகச்சொன்னேன் என்
சக குடும்பத்தினரிடம்.

எனக்கோ ஒரு மனைவி தான், இரு
மகள்கள் உண்டு.

ஒரு மகளுக்கோ ஓடத் தெரியும்,
மற்றவளுக்கோ விழாமல் நடக்க
மட்டுமே தெரியும்.

இருள்  கவ்வ கவ்வ, நீர் மட்டம் அதிகரிக்கிறது.
கடவுளே காப்பாத்து என்று கைகள் உயர்த்தி
கூவிப்பர்தேன், என் குரல் என்னக்கே கேட்கவில்லை,
ஊரெல்லாம் இதே அபளைகுரல் தான்.

தலையில் கைவைத்தால் தொப்பி காணவில்லை.
பயம்வந்து மகளையும், மனைவியையும்
அருக அருகே வரவைத்தேன்.
முகம் தெரியவில்லை, மூச்சுக்காற்று பரிமாறப்பட்டது.

யோசித்தேன் என் பலங்காலம்பற்றி....
எத்தனை உதைகள், கடுப்பான வார்த்தைகள்
உதிர்திருபேன் என் மனைவிமேல்.
அழுதுகொண்டே இருப்பாள் தவிர,
அதிரிந்து பேச மாட்டாள் என் அருமை
அலீமா பேகம்.

என் காசையும், ஆசையும் கொள்கைக்கு மட்டுமே
கூறுபோட்டேன்.
என் குடும்ப விளக்குக்கு குண்டு மணிகூட
கொடுததில்லையே!

இன்னும் எத்தனை மணித்துளிகளோ இறைவன்
என்னை இழுத்துக்கொள்ள?

மகள் சபீனா முதலில் அப்பா சொன்னபோதுகூட
அருகில் இல்லையே!
ஆசையாய் ஜலீலாவுக்கு முத்தம்கூட தந்ததில்லையே!

என் நேரமெல்லாம் மத சொற்பொழிவிலும்,
மதவாதிகலோடுமே  கழிந்துவிட்டதே!
எத்தனை பேரை கொன்றிருப்பேன்,
கடவுளின் பெயரில் காவு கொடுத்திருப்பேன்
என் தாய்நாட்டிற்காக.

இத்தனை செய்தேன் கடவுளே,
என் குடும்பத்திரிக்கு உயிர் பிச்சை
தர மாட்டீரோ?

ஒலிப்பெருக்கி  ஓலமிட ஆரம்பித்தது..
என்ன செய்தியென்று தெரிவதற்குள்,
காட்டாற்று வெள்ளமொன்று என்
ஜலீலாவை அடித்துசென்றது,

நடக்க மட்டுமே தெரிந்தவள் இப்போது
நீந்திச்செல்கிறாள்  அழுதுகொண்டே!

ஐய்யோ இறைவா, என் மகள் முகம்கூட
மனதில் பதியவில்லையே, மனமிரங்கமாடாயா?
என்று முடிபதற்குள் முக்காடிட்ட என் அலீமா அல்லாவை
ஆராதிக்க மூழ்கி விட்டாள்.

அழக்கூட அருதியற்று நின்றேன்.
கழுத்தில் அமர்ந்திருந்த சபீனா சாய்ந்து விழுந்தால்
சகதி நீரில்!

சாதிக்காக, மதத்திற்காக, போர்கொடியேந்தி,
குடம்பத்தோடு பொழைக்க மறந்தேனே!

கடவுளுக்காக கத்தியேந்தி, கத்தி கதறிய
குழந்தைகளோடு காலம் கழிக்க மறந்தேனே!

மனிதம் கொன்று குவித்து, மாசில்லா மாணிக்க
முகம் கொண்ட மனைவியை மகிழ்விக்க மறந்தேனே!

இயற்கை தான் இறைவனோ,
இதுதான் தண்ண்டனையோ,
தண்ணீருக்குள் புதைந்துபோனேன்,
பல போராளிகளைப் போல்............

Thursday, 12 August 2010

சுதந்திரம்

வெள்ளையனிடம்  அடிபட்டு, மிதிபட்டு,
நினைவிழந்து  , மங்கையர் பொட்டிழந்து,
பூவிழந்து, குழந்தைகள் படிபிழந்து,
வாழ்விழந்து வாங்கினோம் சுதந்திரம்.
எப்படியிருகிறது நம் சுதந்திர பூமி,
ஆய்வுசெய்வோம்.

காசுள்ளவன் காண்வென்டிலும்,
காசற்றவன் காற்றோடத்திலும்
கல்வி கற்கிறான்.
சுதந்திர பூமியில் ஏன் இந்த வேறுபாடு?

ஓடும்  நதியில் ஓராயிரம் விஷ சாயங்கள்,
சுந்தந்திர நதியில் ஏனிந்த சுகாதாரகேடு?

ஆண்மீகதேடலென்று அப்பாவி அபலைகளை
ஆசைகாட்டி மோசம் செய்கிறான் ஆண்மீகவாதி.
சுதந்திரம் பெற்றது இந்த சூனியகாரரின் சுயலாபத்துககவா? 

விவசாய பூமி வில்லாவாக  மாறியிருக்கிறது,
இன்னும் சில வருடங்களில் உணவுக்கு பதில்
மாத்திரை வில்லைகளை உட்கொள்வோம்
இது உறுதி !
விவசாய நாட்டுகல்லவா  விடுதலை கிடைத்தது?

மருத்துவத்தில்கூட மனிதநேயமில்லை,
ஏழைக்கு ஒரு வியாதி என்றாள் உன் சாபக்கேடு என்கிறான்?
பணகாரநென்ன்றால்     பல்லை காட்டுகிறான்.
உயிர் காட்கும் தொழிலில் ஏனிந்த ஓர வஞ்சனம்?

முன்னேரியிரிகிறோம்.. கல்வியிலே, கலாச்சாரத்திலே,
கணிபொரியிலே, மருத்துவத்திலே, தொழிற்பேட்டையிலே,
வர்த்தகத்திலே, உற்பத்தியிலே, பெண்ணுரிமையிலே,
பேராண்மையிலே,
ஆனால் இவையனைத்தும் ஒரு சார்மக்களே
பயணடைகின்ற்றனர் , மறுசாரரோ  இதை
வேடிக்கை மட்டுமே பார்க்க அனுமதிகின்றனர் .

வேண்டும் சுதந்திரம் எங்கள் கீழ்தட்டு மக்களுக்கும்!
வந்தே மாதரம்.

Wednesday, 11 August 2010

பணக்கார அனாதைகள்

காலை சுமார் 5.40 ,
இமைகள் ஒட்ட மறுத்து
தூக்கம் தொலைந்தது.

எழ முயன்றேன்
கைகள் ஒத்துழைக்க மறுத்தது.

கைகளை இடப்புறம், வலப்புறம்,
மேலும், கீழுமாக சுற்றி பார்த்தேன்.
கைகள் சொன்னபடி கேட்டதை ரசித்தேன்.

மறுமுறை முயன்று எழுந்தேன்
படுக்கையிலிருந்து .

இடுப்பு தண்டுவடம் இந்த நாள் தண்டனையை
ஆரம்பித்தது.

கால்கள் இரண்டும் தரைப்பட
தயங்கின.
உற்றுபார்தால் ஒரு கால்
மல்யுத்த வீரனின் கால்போல் தோன்றிற்று.

தைலம் தொட்டு நிதானம்வர
நீவி விட்டேன்.
லேசான எரிச்சல் தவிர
வேறொரு பலனில்லை.

எழுந்து நிற்க ஆயத்தமானேன்,
எதிர் சுவரை சொந்தமாகி
நொந்தகால்களில் நின்றேன்.

அடிமேல் அடிவைத்து பத்துமாதக்
குழந்தைபோல் தள்ளாடி கதவடைத்தேன்.

திறந்து, குனிந்து, பால் பாக்கெட்,
தினத்தந்தி அள்ளி அடிப்ரதக்ஷனத்தை
ஆரம்பித்தேன்.

வரண்டா சேரில் இளைப்பாறினேன் ,
ஏதோ இமாலய சாகசம் புரிந்த வீரனைப்போல்.

இளைபாரும்போது முழங்கால் மூட்டில்
முப்பது ஊசி கொண்டு குத்துவதுபோல்
உணர்தேன்.
அதே தைலம், அதே சிகிச்சை
இப்பொது ஊசி ஒன்று குறைந்ததாய்
தோணியது, மகிழ்ச்சி.

மணி 8 .௦௦, பல் துலக்க பிரயானப்படேன் ,
அதில் வெற்றியும் கண்டேன்.
சர்க்கரை ஊசியை சதையில் சொருகினேன்,
குத்திய உணர்ச்சிகூட இல்லை.

காலை உணவை கடமைக்கு உண்டேன்.
மறுபடியும் வராண்டா சேரில்.

படாத பாடுபட்டு தினத்தந்தியை முடித்தேன்.
கண்ணின் எரிச்சல் மூளையை பதம் பார்த்தது.
துண்டுதுனைகொண்டு  ஒத்தி கொடுத்தேன்.

மணி 1.௦௦, மதிய உணவு வேலை
மதியா  விருந்தாளி போல் உண்டேன்.
உண்டகளைப்பு கலையுமுன் 
கணக்கில்லா மாத்திரைகளை 
நொடிபொழுதில் இறையாக்கினேன்.

மறுபடியும் வராண்டா ஷேர் வந்தடைந்தேன்,
வரண்டுபோன தொலைகாட்சி நாடகங்களை
பார்துகொண்டபடி கண்ணயர்ந்தேன்.

மாலை மணி 4.30 , சர்கரையில்லா  
காபியருந்தி எழுந்து நடக்க முற்பட்டேன்.

நரம்புகள் பூட்டிய குதிரைகள்போல்
கால்கள் திமிறி நின்றன, வலியோ
உயிரை உலுக்கின, திரும்பவும்
தைல சிகிச்சை.

வீட்டின் முற்றம் தாண்டி,
வெளியே வந்து காற்றுவாங்க அமர்ந்தேன்.

தெருவில் பிஞ்சு குழந்தைகள்
துரத்தி விளையாடின.

என் நினைவு பேரன், பேத்திமேல்
பாய்ந்தது, அவர்களோ பலாயிரக்கனகான
மயில்கள் அப்பால் யூடுபில் நற்செரி ரைமஸ்
பார்த்துக்கொண்டிருந்தனர்.

மனைவியிடம் போன் எப்பவரும் என்று
தினம்கேட்கும் கேள்வியை கேட்டுவைத்தேன்.
அதே மணிக்குதான்னு பதில் வந்தது.

கடிகாரம் கண்ணில் படும் தூரமிரிந்தும்
முள்ளின் முழுதரிசனம் அகப்படவில்லை.
மணி எத்தனை என்றேன்? 7.30 என்று
பதில் வந்தது.

இன்னும் அரைமணி நேரத்தில் ஆருயிர்களிடமிருந்து
அழைப்புமணி வரலாம் என்று தெரியாத
கடிகாரத்தை கண்கொட்டாமல் பார்த்து
கொண்டே இருந்தேன்.

வந்தது அழைப்புமணி, குழந்தைபோல்
துள்ளி எழுந்தேன், தவறி விழுந்தேன்,
யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற
அச்சத்தில் கடைநிலை போர்வீரன் போல்
சமாளித்து எழுந்தேன்.

வந்த அழைப்பு வீட்டுகடன் எடுக்கசொல்லி ,
சோர்ந்த முகத்தோடு அதே வராண்டா
சேரில் வலுவிழந்து அமர்ந்தேன்.

சுமார் 10 மணி, சர்கரை ஊசியேற்றி
சப்பையான சத்துணவை முடித்தேன்.

அடித்தது அழைப்புமணி 11 மணிக்கு.
ஹலோ என்றேன்,
பேரன் : "எத்தடி இடுக்க தாதா" என்றான்
எனக்கோ கண்ணீர் கொப்பளித்தது
என் இரு கண்களிலும், பேச்சு வர தொண்டை
தடுமாறியது.
இவ்வளவு நேரம் பட்ட வழிக்கு கண்கள்
கலங்கவில்லை, இந்த மழலை கரைத்துவிட்டது
போல் உணர்ந்தேன்.
"நல்ல இருக்கேண்டா" ன்னு பதில் சொன்னேன்.
பேரன் : "சாபிதிய" என்றான்.
நான்: " நீ சாப்பிட்டாய?  என்றேன். அதற்கு
பேரன்: "சபதி ஏழு தின்னு" ன்னுனான்.
சிரிப்போடு மனதுக்கு பூரிப்பு வந்தது.
பிறகு மகனோடு மனபாடம் செய்த
அதே கேள்வி, அதே பதில், உரையாடல் முடிந்தது.
என் உயிர் மீண்டும்  ஜீவனற்றுபோனது.

மணி 12 மறுபடியும் அழைப்புமணி,
வெளிநாட்டுபேத்தியின் குரல்,
ஒரு வயது நிரம்பாதவளிடமிருந்து
அத்தனை முத்துமுத்தான வார்த்தைகள்.
மறுபடியும் கண்ணீர் வந்தது, துடைத்துகொன்டே
தூக்கத்தை துரத்த ஆரம்பித்தேன்.

மணி 1.00 தூக்கம் வரவில்லை,
நினைவெல்லாம் குழந்தைகள்மேல்,
யாரிடம் முறையிட்டு இங்கு வரவைக்க..
தெரியவில்லை, தெம்புமில்லை.

தலையணையை மாற்றிபார்தேன் பலனில்லை,
தைலமிட்டுபார்தேன் தணிந்தபாடில்லை,
புரண்டு படுத்தேன்  புண்ணியமில்லை,
கைகளை வைத்து கண்களை மறைத்துப்பார்த்தேன்,
விழிகள் வெளிநாடு சென்றது வேலன்திகளை பார்க்க.

தூக்க மாத்திரை நாடி தூங்கிவிட்டேன்போல்,
ஆனால் கண்களிலிருந்து நீரூற்று நின்றபாடில்லை,
தலையணை ஈரமாகி என்னை எழுப்பிவிட்டது.

காலை சுமார் 5.40 ,  
இமைகள் ஓட்ட மறுத்து
தூக்கம் தொலைந்தது .........

  





















.

Tuesday, 10 August 2010

நான் மட்டுமா பிச்சைக்காரன்?

கடவுளுக்கு அடுத்தபடி
மானிடர்களுக்கு புண்ணியம் சேர
பிச்சை பெற்ருக்கொள்கிறேன்.
நீயோ என்னிடம் புண்ணியபிச்சை
அல்லவா கேட்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

பிறரின் மிச்சத்தை மட்டுமே
உண்டுகொள்கிறேன்,
சர்க்கரை நோய் அண்டவே அண்டாது.
நீயோ மருத்துவரிடம் நிவாரணபிட்சை கேட்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

லட்சத்துக்காக[பொருள் பிச்சை
பலரிடம் லட்சியதையும்,
சிலரிடம் லட்சணத்தையும்,
அடகுவைகிறாய்.
எனக்கோ லட்சியமும் கிடையாது
லட்சணமும் கிடையாது.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

ராத்திரியில் தூக்கம் துரத்துவர் [நிம்மதி பிச்சை
சில திவாண்கள், எனக்கோ
தூக்கம் வந்தாலோ, துண்டு
விரித்துவிடுவேன் நின்றயிடத்திலேயே.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

அழகு ஆபத்து தான், அதை அறிந்த
என்னுடைய அரைமுகம் தாடிக்குள்லே
தவம் செய்கிறது.
நீயோ அழகு பிச்சை கேட்கிறாய்
அழகுநிலயத்தில்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

மழை வந்தால் மட்டுமே குளியல்.
ஆம் தண்ணீர் பஞ்சத்தை தடுக்க என் பங்கு இது.
நீயோ தார்மீக பொருப்பின்றி தட்டிக்கலிகிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?

இயற்கையோடே இல்லறம்,
இதன்மூலம் சில இனப்படுகொலைகளை
இல்லாமல் செய்கிறேன்,
அதோடுகூட இனபெருகதத்தை தடுக்கிறேன்.
நீயோ இதை[இச்சை பிச்சை] மட்டும்தான் செய்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?


காசுக்காக ஆசையற்று, அன்னை பிரிந்து,
மனைவி மறந்து, தாய்நாடு துறந்து கணினியோடும்,
கணவான்களோடும் கட்டிபுரலவில்லை நான்.
நீயோ பணப்பிச்சை எடுக்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?


லாபத்துக்காக[வர்கபிச்சை] பிறரின் சாபத்தை
சம்பாரிக்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
பிறருக்காக என் வாழ்க்கையில்லை,
என் வாழ்க்கையை எவரும் சீண்டோறுமில்லை.
எனக்கு போட்டியுமில்லை,
என்னை பார்த்து பொறாமை படுவோருமில்லை.
நாளை பற்றி நினைப்பில்லை,
எந்த நாயை பற்றியும் கவலையில்லை.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
யோசித்துபாருங்கள்...

இன்பதிர்ச்சி

இரண்டொரு தினம் முன்பு
அடிமேல் அடி வைத்தாள்,
அன்னை துணையின்றி.
 எனக்கோ இந்த அண்டமே,
அரை நொடி அற்றுப்போனதாய் உணர்ந்தேன்!
பூப்பந்து பாதங்கள் திடத்தரையில் பதிந்தபோது,
தரை கூட நெளியக் கண்டேன்!
தத்திதத்தி வந்தபோது,
யானையின் துதிக்கையில் என்னை
தூக்கியதாய் உரைந்தேன்!
கண்களை சுருக்கி,
உதடுகளை விலக்கி சற்று நின்ற போதுதான்,
நான் இன்னும் இந்த பிரபஞ்சத்தின்
பிரஜைதான் என்று புரிந்தேன்!
ஆம் எந்த மழலையின் முதல்
நடையும் பெற்றோரை,
மதிகலங்க வைப்பது இன்பதிர்ச்சி தான்!!!

முதல் காதல்

முட்டி மோதி எப்படியோ மங்கையின்
மனதில் இடம் பிடித்து விட்டேன்!
இடிபாடுகளோடு இருவரும்
இன்பக்கவி பாடிவந்தோம்,
வகுப்பாசிரியை என் இருக்கையை மாற்றும் வரை.
ஆம் எங்கள் பள்ளியின்
இரண்டாம் வகுப்பின்
நியதிபடி, பாடவேளையில்
சக மாணவனோடு பேசினால்
தண்டனையாக ஏதோ ஒரு
மாணவியோடு பத்து நாட்கள்
ஆமரவேண்டும்!