Monday, 26 December 2011

அந்த 7 நிமிடங்கள்!












எதற்கும்  உதவாத
உதவாக்கரை.
என் அப்பா எனக்கு
வைத்த செல்லப்பெயர்.

என் அம்மா சொல்வாள்,
நானொரு அதிர்ஷ்ட கட்டை என்று.

அடி மேல் அடி,
தோல்வி மேல் தோல்வி,
எழுந்து நிற்க கால் இருந்தாலும்,
மனம் மறுதலிக்கிறது.

நம்பிக்கையை தொலைத்துவிட்டேன்
இந்த நரகத்தில்.
சொர்க்கம் சென்று
வாழ தயாராகிவிட்டேன்.

வயது 18 தான்.
படிப்பு ஏறவில்லை,
எதிலும் பிடிப்பும் இல்லை,
வேலைக்குச் செல்ல விருப்பமில்லை,
வேண்டியதைச் செய்ய துணிவுமில்லை.
விளைவு, தாய் தந்த உயிரை
தாரை வார்க்க வலைதளம் நாடினேன்.
வலி குறைந்த தற்கொலை முறையை
தெரிவு செய்ய.

தூக்க மாத்திரை நாடினால்,
இருபது நிமிடங்களாவது மூச்சுத்
திணறல் இருக்குமாம்.
அது வேண்டவே வேண்டாம்.

ரயிலில் தலைவைக்கக்
கொஞ்சம் தெம்பு வேண்டும்,
கூடவே ரயிலோடு குட்டி
சிநேகமும் வேண்டுமாம்.
அது எனக்கு கிடையாது.

மாடியில் இருந்து குதிக்கலாம்,
தலை சிதறாமல் போனால்,
சாகும் வரை சர்கர நாற்காலியில்
வலம் வரவேண்டும்.
அது சரி வராது.

தூக்கு போட்டுத் தொங்க
முடிவு செய்தேன்.
இதை சரியாக செய்தால்,
இறப்பை  இருபது நொடியில்
ஈட்டலாம்.

உடல் பருமனனுக்கு ஏற்ற,
தொங்கும் உயரத்தையும்
தெரிவு செய்வது அவசியம்.

தொங்கும் உயரம் கொஞ்சம்
அதிகரித்தாலும், தலை துண்டிக்கப்படும்.

தொங்கும் உயரம் குறைந்தாலோ,
உயிர் அற்று போகும் நேரும்
அதிகரிக்கும்.

தொங்கிய மறுநொடியே,
தூக்குகுக் கயிறின் முடிச்சு,
கழுத்தெலும்பை முறிக்கும்.
முறித்த மறுநொடி
முதுகெலும்பின் தொடர்பும் அறுந்து போகும்.
அடுத்த சில வினாடிகளில்,
இருதயத் துடிப்பும் நிறுத்தப்படும்.

இவை அனைத்தும் படித்து,
தெரிந்த பின், தயாரானேன்
இன்று தூக்கு போட்டுக் கொள்ள.

இன்று முழுவதும்
விரும்பியதை உண்டு,
வேண்டியதை கண்டு,
ஒவ்வொரு நொடியையும்
நொறுக்கினேன்.

இரவு இரண்டு மணி.
ஊர் அடங்கிய நேரம்,
புது கயிறு கொண்டு,
காத்தாடியில் கட்டி,
முடி இட்டேன்.
அதை ஆறடுக்கு
முடிச்சாக மாற்றினேன்.

சரியான உயரம் வர
கயிறின் நீளத்தை சரி செய்தேன்.

முதுகில்லாத வட்ட பிளாஸ்டிக்
நாற்காலி போட்டு ஏறி நின்றேன்.

முகமுலுவதும் வியர்வை துளிகள்.
துடைக்க நினைத்த கைகளும் நடுங்குகிறது.
இரு கால்களும் மடிவதுபோல் ஒரு பிரமை.
இறங்கிவிட்டேன்.

முககக்கண்ணாடி பார்த்து
முகம் துடைத்து.
படிந்து இருந்த தலையை
திரும்பவும் படிய வாரி.
சிரித்துப் பார்த்துக் கொண்டேன்.

சிறுநீர் கழித்தால் சீற்றம்
குறையும் என்று எண்ணி,
சென்றேன், வரவே இல்லை,
திரும்பி வந்து விட்டேன்.

தூக்குக் கையிற்றை உற்றுப் பார்த்த
பிறகு, மீண்டும் உயரம் சரி செய்து,
நாற்காலிமேல்  சற்று அமர்ந்தேன்.
கொஞ்சம் அமைதி கிடைக்க.

இப்பொது இருதய துடிப்பு
இம்சை தந்தது.
ரத்த ஓட்டமும் ரகளை செய்தது.
தலை சுற்றல் ஆரம்பித்து,
அதிகரிபதர்க்குள்.
எழுந்தேன்,
நின்றேன் நாற்காலிமேல்,
கழுத்தில் மாட்டினேன்,
முடிச்சை இருக்கினேன்,
இரு கைகளையும் பின்னுக்கு
தள்ளி, இறுக்கி பிடித்து கொண்டேன்,
பற்களை இறுகக் கடித்து,
கண்களை சுருக்கி,
நெற்றியை குறுக்கி,
தலையை நமிர்த்தி,
உடம்பை சற்று மேல் தூக்கி,
ஒரு காலை நன்றாக ஊன்றி,
மறு காலை குதிக்க விட்டு,
நாற்காலியை எட்டி உதைத்தேன்.

தடுமாறி விழுந்தது நாற்காலி.
என் உடம்பும் தொங்கி விழுந்தது.
தலையும் கழுத்தும் வளைத்துக் கொண்டது.
அடுக்கு முடிச்சு கழுத்தெலும்பை
உடைப்பதற்குள், என் இரு கைகள்
கொண்டு கயிறை பிடித்தேன்.
விளைவு எலும்பு சரியாக உடையவில்லை.

முதல் நிமிடம் முழுக்க,
உடைந்தும் உடையாமலும் இருந்த
கழுத்தெலும்பு விடாமல் இடறிகொன்டே இருந்தது.
வலியோ உயிரை உலுக்கியது.

இரண்டாம் நிமிடமோ,
ரத்த ஓட்டம், தடை பட்டு,
தடை பட்டே ஓடியது.

மூன்றாம் நிமிடத்தில்,
நரம்புகள் அனைத்தும் இறுக்கி
பிடித்தது.

நான்காம் நிமிடம் -
தடை பட்டு இருந்த ரத்த
ஓட்டம் நிறுத்தப்பட்டது.

ஐந்தாம் நிமிடத்தில்,
மூச்சுத் திணறல்.
உடலுக்கு தேவையான மூச்சு
கிடைக்காததால், திமிறி
திமிறி போட்டது.

ஆறாம் நிமிடத்தில்,
மென்மையான கருவிழிகள்,
இமை கூடை விட்டு, மெல்ல
மெல்ல வெளியேறிற்று.
நாக்கும் வாய் தாண்டிற்று.

ஏழாம் நிமிடத்தில்,
இருதய துடிப்பு
இறுதியாய் ஒரு முறை துடித்து,
அடங்கியது.
உடலும் விறைத்து போனது...
நான் பிணமானேன்.

தற்கொலை செய்ய நினைக்கும் வீரர்களே!
தற்கொலைக்கு தயாராகி,
முடிபோட முடிவெடுக்கும் நேரத்தில்,
உங்கள் பிரச்சனையின் முடிச்சை
அவிழ்க நினைத்தால் என்ன?

செத்தவனை கேட்டுப் பாருங்கள்,
புரிந்துவிடும் சாவின் கொடூரம்.
கேட்ப்பது சாத்தியம் அன்று.

ஆகையால் வாழ்பவனை கேளுங்கள்,
வாழ்வின் உன்னதம் பற்றி.
ஒரே ஒரு முறை
வாழ்ந்து பாருங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

Tuesday, 20 December 2011

காதல் கடிதம்














அன்புள்ள ஆருயிருக்கு.
நான் எழுதும் முதல் காதல் கடிதம்.

இத்தனை வருடங்களும்
தோன்றியது தோய்வதற்குள்,
தோழி உன் காதில் ஓதி விடுவேன்.
இன்றோ எதுவும் தூண்டுவதுமில்லை,
தோன்றுவதுவுமில்லை.

இந்த சிறு இடைவெளி,
நம் இருவருக்கும் புதிது.
நீ ஒரு இடத்தில்,
நான் ஒரு நாட்டில்,
நாட்டம் இன்றி நாட்களை கழிக்கின்றோம்.

உனக்கு முன் எழுவதால்
நான் பாக்கியசாலி.
ஆம் நீ தூங்கும் அழகை
ஆராதிக்க அது ஒரு சந்தர்போம்.

இன்றோ படுக்கையை
பார்க்கவே பார்வை குருடாகிறது.

உடல் களைத்து அமர்ந்தால்,
உன் காவிக் கருவிழிகள்
காந்த சக்தி கொண்டு
களைப்பை கரையேற்றும்.

சுருண்ட கூந்தல்,
சில சமயம் என் சிந்தனையை
புரட்டி போடும்.

நீ ஆசையாய் என் பெயரை
உச்சரித்து விட்டாள்.
என் உடல் புல்லரித்து போகும்.

நீ தொட்டு பேசும் போது,
என் கல்லூரி காலம் கண் முன்
தோன்றுவது நிதர்சனம்.

காலால் உதைத்து விளையாடும் போது,
என் நினைவில் இருந்த பாலிய
பருவம் நிஜத்தில் வருவது நிஜம்.

அன்னை மடி தேடும் போது,
பிடி என் மடியை என்று தருவாய்.
பிடித்தும் போனது.

தங்க குணம் கொண்டவளே.
உன் கோபத்தின் மேல்
கொள்ளை பிரியம் உண்டெனக்கு.

சுத்தமான தங்கத்தை கொண்டு
ஆபரணம் செய்யலாகாது.
கொஞ்சம் செம்பும் தேவை.
உன் கோபமும் அந்த
செம்பும் ஒன்று தான்.

நீ கொஞ்சுவதும் அழகுதான்,
மிஞ்சிக் கெஞ்சுவதும் அழகுதான்.

உன் சிரிப்பு, என்னை பல
நேரம் கவலையற்ற சிலையாக்கும்.

உன் காதணிகள், என்னை
சில சமயம் காவியம் எழுத
தூண்டி விடும்.

ஆடை அனுவதில் கூட
ஒழிந்திருக்கும் ஆயிரம்
ஆச்சிரியங்கள்.

நீ அணியும் காலனிக்கே,
என் எஞ்சி உள்ள காலத்தை
காணிக்கை ஆக்கலாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ....

நீ அருகில் இல்லாதது,
என் ஆழ மனதை கொஞ்சம் உலுக்குகிறது.
உலுக்கி உலுக்கி
என் இதயம் உடைவதற்குள்,
உடனே வந்து சேர்ந்துவிடு.

இப்படிக்கு
உன் மறுவுயிர்.

Monday, 12 December 2011

நீயும் நானும்........

வேறிரு உடல்கள்,
சிந்தனையிலும் வேறுபாடு.
 
சிரிப்பதிலும் வகை வேறு,
சினம்கொல்வதிலும் விதம் வேறு.
 
உனக்கு பிடித்ததை
எனக்கும் பிடித்து போக
ரசனையை தளர்த்தி பார்க்கிறேன்,
முடியவில்லை.
 
எனக்கு பிடித்ததை
உனக்கும் பிடிக்க வைக்க
புரண்டு பார்க்கிறேன்,
புண்ணியமில்லை.
 
உன் வழியில்
நானும் நடக்க
பாதம் வைக்கிறேன்,
நடந்தும் செல்கிறேன்.
மனது மட்டும் ஏனோ
முறுக்கிக் கொள்கிறது.
 
என் விருப்பம்
உனக்கு அருவருப்பு.
உன் விருப்பம்
எனக்கு அனாவசியம்.
 
எதிலும் முரண்பாடு
கருத்திலும் வேறுபாடு.
இருந்தாலும் உன்னை பிடிக்கிறது.
உன்னை மட்டுமே பிடிக்கிறது.
 
முதன் முதலில் பார்த்தபோதே,
என் மூச்சை நிறுத்தி
பேச வைத்தவளே!
 
சில கேள்விகளை யோசித்தபோது
உதித்த பதில்கள்,
 
உன்னைப்போல் உன் ரசனையும் பிடித்துவிட்டால்,
என் ரசனையின் விலாசம் அத்துபோகுமே?
அது முடியாது.
 
உன்னைப்போல் உன் சிந்தனையும் பிடித்துவிட்டால்,
என் சிந்தனை செத்துபோகுமே?
அது வேண்டாம்.
 
நீ சிரிபதற்கும், நான் சிரித்துவிட்டால்,
என் நகைசுவை உணர்வே நாடு கடந்துவிடும்.
அது நடக்காது.
 
உன் கோபத்தின்மேல் நானும் கோபப்பட்டால்,
நானும் விலங்கிற்குச் சமமாவேன்.
அது சரிவராது.
 
நீயும், நானும் போலித் தனத்தோடு
சேர்ந்து வாழ, இது சினிமா அன்று,
வாழ்கை.
 
இருவரும் வாழவேண்டும்,
சேர்ந்தே, அவர் அவர் வாழ்கையை,
இருவேறு துருவங்களாய்.
காதலாகிய காந்த சக்தி
துருவங்களை தரை இறங்காமல்
தாங்கி பிடிக்கும்.
 
உன்னை பிடிக்கும்,
உன்னை மட்டும் தான் பிடிக்கும்.
உனக்கும் என்னை பிடித்தால்?
பிடி என் கரத்தை.
நீயும், நானும்
தொடங்குவோம் ஒரு புது அத்தியாயத்தை.
 
வாழ்கையை அணுகுவோம்,
வேறு வேறு பரிமாணத்தோடு,
வேறு வேறு சிந்தனைகளோடு,
வேறு வேறு சித்தாந்தத்தோடு,
ஆனால் காதல் மட்டும்
அடிநாதமாய்.
 
வாழ்வோமா?

Friday, 9 December 2011

முதுமை

வயதாகி விட்டது, 
பார்வை பட்டுவிட்டது.

அமர்ந்தால் எழ இயலவில்லை,
எழுந்தால் நடக்க நாட்டம் இல்லை.

நடந்தால் போகும் வழி மனதில் இல்லை,

மனதில் வைத்தால் ஞாபகத்தில் இல்லை,

ஒரு வழியாக

ஞாபகம் வந்து,
தேடுகிறேன், தேடுகிறேன்,
பார்வை தெளிவோடே தேடுகிறேன்,
மூக்கு கண்ணாடியை.
அணிந்து கொண்டே!!!!

Monday, 5 December 2011

தண்ணீர் தண்ணீர்

பாராத்தக்கா இந்த கெடுவு தண்ணி உட்டானா?
எழவெடுத்த பைப்புகாரன் இன்னும் மனசு வைகல ..

போன கெடுவு தண்ணி வந்து இருவது நாளாச்சு,
நாசாம போற பய நாலாயாவது  நல்லது செய்வானோ?

தேகுசாவுல இருந்த தண்ணி நேசம் கெட்டு போச்சுதடி,
மொடாவுல மோந்தெடுக்க முதுகு தண்டு நோவுதடி.

பெரியவனா எழுப்பி விட்டு பெரியாறு காலனி
டாக்டர் வீடு போகவிட்டு,
காசுக்கு தண்ணி வாங்கி,
நெரைக்க வேணு ரெண்டு தவலைய...

பெரியவனுக்கு ஏழு வயசு,
மணியோ அஞ்சு அடிச்சு அரை நாழி கடக்க நிக்கிது.

பாராத்தா எழுப்பிவிட, பேய்தூக்கத்துல இருந்த பய
பிசாசு மாறி பொரண்டு எழுந்தான்..
அழுதுகிட்டே கொடம் தேடி,
சாக்கு தேடி, தண்ணி டயர் கண்டு,
தாரோடு வந்து நின்னான்.

எட்டுபோல உள்ள டயர கொடகளுதுல,
வலயம் வச்சு சுருக்கு போட்டு, கொடத்த
இருக்க வச்சான்.
தண்ணிக்கு  அஞ்சு ரூவா காசு வாங்கி
கிளம்பினான்.
சைகில வேக வேகமா, ஓடிகிட்டே
தள்ளிப் போயி, குதிச்சு ஏறினான்
சைக்கிள் சீட்டுல..

பெரியார் காலனி இங்கிருந்து ஆறு கிலோ மீட்டரு,
கழுத்துல துண்ட சுத்தி, ஏறி ஏறி பாரு போட்டான்,
பெடல பின்ன விட்டான்...

ஏரகம் வரும்போது கொரங்கு பெடலு போட்டான்..
மேடு வரும்போது, குதிச்சு குதிச்சு பெடலடிச்சான்..

எதிர் குளுறால, கொல நடுக்கம் கண்டு,
மூத்திர பை முட்டிக் கொள்ள,
சைகுல ஓரம் கட்டி, மரத்துக்கு
உப்பு தண்ணி பாச்சினான்...
உடம்பு சிலிப்பு தட்டி, பிரயாணத்த தொடங்கிபோட்டான்.

எப்படியோ கௌண்டர் வீடு வந்து,
வருசையில கொடத்த போட்டான்.
வரச நீளம் அர மயில் கல்லு தூரம்,
ஆனாலும் வேறு வழியில்ல, இந்த ஊரு
சனம் தங்கத்த கூடு கடன் தருவாக,
தண்ணி கேட்ட தடுமாருவாக.

வருச வர ரெண்டு மணி நேரம்
உருதீனு தெரிஞ்ச பய,
துண்ட தலக்கி வச்சு,
உட்ட தூக்கத்த
தெருவுல தொடர்ந்தான்.

பக்கத்து வருச பாட்டி,
இந்த பய கொடதையும்
வருசையில தள்ளி வந்த,
அர மணி நேரம் ஒருக்கா
எடம்  மாறி படுத்து வந்தான்...

ஒரு வழியா தண்ணி புடிச்சு,
சைகில கட்டி, விரட்டி எடுத்தான்.

போகும் போது ஏரகம் பாத...
சந்தோசமா பவனி போனான்.

போற வழியில பள்ளி தோழன்
பாஸ்கர். ஓஒ ஆஅஹ் ன்னு குதுச்சு
ஆடிகிட்டே, பள்ளி ஸ்ட்றைக்கு ன்னு
சங்கு ஊதினான்.

கேட்ட நம்ம பயலுக்கு, ஏக குஷி...
சந்தோஷ வெள்ளதுள்ள பெடலு போட்டான்..
பள்ளம் மேடுன்னு பாக்காம, சும்மா
பஞ்சா பறக்குது சைக்கிள்.

செத்த நேரத்துல சைக்கிள் தெரியாம
ஒரு சின்ன கல்லுல ஏறி,
தண்ணி டயரு வலயம் ஒன்னு லூசு
கண்டது...

இது தெரியாம, வீடு போயி
வேகமா ஸ்டாண்டு போட்டா,
எடப்பக்க கொடம் ஏடறி விழுது,
வலுத்து கொடமோ வாய பொளந்தது...

புடிச்ச தண்ணி எல்லாம், பூமி மாதாவ
குளுர வக்கிது, இந்த பாத்த, பாராத்தா
பாஞ்சு வர்றா..

பயந்து போன பச்ச மண்ணு, பதுங்கி
நிக்கிது. பாரபட்சம் பாக்காத நம்ம அம்மா,
சைக்கிள் டயரு கொண்டு, கணுக்கால
காச்சி எடுத்தா...

வலியில நம்ம பய துடிச்சான்..ஐயோ அம்மா
வலிக்கிது, ஆத்தா சாமி வலிக்கிதுன்னு கூச்சல் போட்டான்..
பாராத்தா சினம் தண்ணிய பல நிமிஷம் ஆச்சு.

அப்படியே கால புடிச்சு வாசல்ல படுத்துகிட்டான்.
தார தாரையா தடிச்சு கெடுக்கு.
ரெண்டு மூணு ரத்தம் வேர சொட்டி கெடக்கு.

கொஞ்ச நேரம் கழிச்சு...
டேய் பெரியவனே,
என்ன பெத்த மவரசானே,
உள்ள வா சாமி,
உனக்கு கருபட்டியும், ஒடச்ச கல்லையும் தாரேன்னா..
கேட்ட பிஞ்சு உள்ள போச்சு..

வலிகுதா மேலு, வாய் தெறந்து சொல்லு சாமீன்னு,
கால பாத்தா...கன்னி கெடந்த கால பாத்து, கொஞ்சம்
வெசனப் பட்டா.

வாடுன மொகத்தோடு, டாக்டர் வீடு போயி வா
சாமீன்னு, பத்து ரூவா பிறுச்சு கொடுத்தா..

பிஞ்சு மொகம் மலந்து,
காச பயில போட்டு,
சைக்கிள்ல தொட்டான்...

பக்கத்துல இருந்த பாராத்தா,
தம்பி தலையில தட்டி,
அட தருத்தனம் புடிச்ச
தாண்டவராய, தண்ணி எடுக்க போகச் சொன்னா,
நீ எங்க பராக்கு பாக்க போறேன்னு
திட்டி தீர்த்தா.....
நம்ம பய மறு சவாரிக்கு
மயிறு கோதினான்...........