உண்மையான உறவுக்குள்
பொய் பூத்து விட்டால்,
அந்த உறவே காய்ந்த சருகாகிவிடும்.
காத்தாடி காற்று கூட
சருகுக்கு இறகு பூட்டி
கண்காணாத கல்லறையில் அடைத்துவிடும்.
சருகு உறவாக உருமாற
சில பல பருவமாற்றம் தேவை.
பொறுத்திருந்த உறவுகள்
சிறகடித்து விண்ணில் ஜொலிப்பர்,
மற்றோர் விதிப்பயன் என்று
வீதியில் திரிவர்.
பொய்யை புறந்தள்ளி
கல்லறையில் இருந்து
உயிர்தெழ, ஒன்று இயேசு
பிரானாய் இருக்க வேண்டும்.
இல்லையேல் மறு உறவு
சத்தியவான் சாவித்ரிபோல் சாதிக்கவேண்டும்.
நல்லுறவு அமைய அளவற்ற,
ஆரோகியமான அன்பு தேவை.
அமைந்த உறவை
அடைகாப்பது அவசியம்.
ஆசைகொண்ட அன்பு உறவை
சிக்கல்கள் சூழ்ந்தால் சீக்கு பிடித்துவிடும்.
சிந்தித்து செயல்படுவீர்.
உண்மையான உறவுகளே
உறவின் உண்ணதம் புரிந்து
உறவாடுவீர்.
வாழ்கையில் பல சிகரங்கள்
உறவாடி தொடுவீர்.
வாழ்த்துகள்.
பொய் பூத்து விட்டால்,
அந்த உறவே காய்ந்த சருகாகிவிடும்.
காத்தாடி காற்று கூட
சருகுக்கு இறகு பூட்டி
கண்காணாத கல்லறையில் அடைத்துவிடும்.
சருகு உறவாக உருமாற
சில பல பருவமாற்றம் தேவை.
பொறுத்திருந்த உறவுகள்
சிறகடித்து விண்ணில் ஜொலிப்பர்,
மற்றோர் விதிப்பயன் என்று
வீதியில் திரிவர்.
பொய்யை புறந்தள்ளி
கல்லறையில் இருந்து
உயிர்தெழ, ஒன்று இயேசு
பிரானாய் இருக்க வேண்டும்.
இல்லையேல் மறு உறவு
சத்தியவான் சாவித்ரிபோல் சாதிக்கவேண்டும்.
நல்லுறவு அமைய அளவற்ற,
ஆரோகியமான அன்பு தேவை.
அமைந்த உறவை
அடைகாப்பது அவசியம்.
ஆசைகொண்ட அன்பு உறவை
சிக்கல்கள் சூழ்ந்தால் சீக்கு பிடித்துவிடும்.
சிந்தித்து செயல்படுவீர்.
உண்மையான உறவுகளே
உறவின் உண்ணதம் புரிந்து
உறவாடுவீர்.
வாழ்கையில் பல சிகரங்கள்
உறவாடி தொடுவீர்.
வாழ்த்துகள்.
