வருடம் இருமுறை
நடந்தாலும், இரண்டாவதேஇறுதியாகும்.
அதுவே சம்பள உயர்வை
உறுதியாக்கும்,
சில புண்ணியாத்மாக்களுக்கு மட்டும்.
இது மேனேஜர் மாதுவுக்கும்,
அவன் டீமில் அங்கம் வகிக்கும்
அல்லக் கைகளுக்கும் நடக்கும் உரையாடல்.
மாதுவோ இந்த அல்லக் கைகளின்
ஆசையை அடியோடு அறுத்தேடுப்பதே
அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை.
சரியாக செய்தால் இவன் ஆசைகள்
மாதுவின் மேனேஜர் ஆள் பூர்த்தி
செய்யப்படலாம்.
மாது சிரித்த முகத்தோடு அறையில் இருக்க,
அல்லக்கை அசோக் அனைத்து தெய்வத்தையும்
வேண்டிக்கொண்டே உள்ளே வந்தான்.
மாது: வாங்க அசோக், எப்படி இருக்கீங்க?
இன்னும் ஆவடியில் இருந்துதான் வர்றீங்களா?
அல்லக்கை 1 : நல்லா இருக்கேன் மாது. ஆவடியில் இருந்து தான்
இன்னும் வர்றேன்.
மாது: டிராபிக் ரெம்ப மோசமா இருக்குமே. சரி ப்பா, சொல்லு.
அல்லக்கை 1 :என்ன சொல்லுறது?
மாது: இந்த ஆறு மாசம் என்ன பண்ணின?
அல்லக்கை 1 : நெறைய நல்லா வேலைகள் பண்ணியிருக்கேன்!
மாது: பத்தாது ப்பா, இன்னமும் நெறியா எதிர்பாற்குறேன். நல்ல Improve பண்ணு. All the very Best .
அல்லக்கை 1 : இரண்டு வருடமே experiance கொண்ட அல்லகையுக்கு எதிர் கேள்வி கேட்ட்க துணிவின்றி 2 /5 வாங்கி வெளியே சென்றான்.
===============================
அல்லக்கை அழகிரி அறைக்குள் வந்தான்.
மாது: என்னப்பா நீ வெள்ளி கிழமை ரௌண்டு நெக் t -shirt போட்டிட்டு வர?
அல்லக்கை 2 :அதுக்கு என்ன இப்போ?
மாது: கம்பெனி பாலிசி தடுக்குது ப்பா.
அல்லக்கை 2 :அதானால?
மாது: உனக்கு 3 தான்.
அல்லக்கை 2 : அப்போ நான் பாத வேலை?
மாது: மொதல்ல ஒழுக்கம், அப்புறம் தான் எல்லாமே என்றான்.
அல்லக்கை 2 : எதற்கும் அலட்டாதவன் காரி துப்ப மனமின்றி, விடை பெற்றான்.
====================
அடுத்த அல்லக்கை விறைப்பாக உள்ளே வந்து, மாது! என்னக்கு இவ்வளவு கிளைன்ட்டு appreciations வந்திருக்குன்னு பிரிண்ட் outai நீட்டினான்.
மாது: அது சரி ராஜா, கொடுக்குற சம்பளத்துக்கு நீ இந்த மாதிரி வேலை செஞ்சுதான் ஆகணும். அதுக்கு மேல நீ என்ன செஞ்ச?
அல்லக்கை 3 : என்ன செய்யணும்?
மாது: New Initiatives !!!!!!!!!!!
அல்லக்கை 3 : அப்படீன்னா?
மாது: வரும் வருட goal sheet discussionla சொல்லுறேன்!
அல்லக்கை 3 : ஒன்னும் புரியாமல். இந்த வருட வேலைக்கு அடுத்த வருட goal sheet எ பாரு சொல்லுறான்? சோ எனக்கும் 3 தானா?
மாது: ஆமா ராஜா. நீ 100 % வேலை தான் செஞ்சிருக்க.
======================
அடுத்த அல்லக்கையோ நல்லா வேலை செய்யும் கில்லி அல்லக்கை. சிரிதுக்க் கொண்டே உள்ளே வந்தான்.
மாது: கடு கடு முகத்தோடு இருந்தான்.
அல்லக்கை 4 : இந்த முறை என்னக்கு எவ்வளவு என்றான்.
மாது: நல்லா வேலை செய்யுற, ஆனா leadership quality இல்லியேப்பா?
அல்லக்கை 4 : எனக்கு தான் டீமே இல்லையே?
மாது: நீ தாம்பா எங்கிட்ட வந்து கேட்டிருகண்ணும்.
அல்லக்கை 4 :சோ?
மாது: மூணு தான்!!!!!!!
======================
மாது: நீயும் ரொம்ப நல்லா வேலையாள் தான்.
அல்லக்கை 5 : தேங்க்ஸ்.
மாது: ஆனா, புது business எதுவும் கொண்டு வருளியே?
அல்லக்கை 5 : அதுக்கு தான் sales team இருக்கே?
மாது: கம்பெனி உன்னையும் நம்பி தான் இருக்கு.
அல்லக்கை 5 : சரி.
மாது: ஆனா நீ பொறுப்போடு இல்லையே?
அல்லக்கை 5 : அதுக்காக?
மாது: முத்தான மூணு தான்.
============================
மாது: உனக்கு மதிப்பீடு செய்யறதுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அல்லக்கை 6 :ஏன்?
மாது: உனக்கு நல்ல Talent இருக்கு ஆனா?
அல்லக்கை 6 : என்ன ஆனா?
மாது: Inter personal skills தான் மிஸ்ஸிங்.
அல்லக்கை 6 :மாது நான் வொர்க் பண்ணுற ப்ரொஜெக்ட்ல வேற யாருமே இல்லையே, நான் சிங்கள் மெம்பெர் டீம் தானே?
மாது: அது உன் problem . சோ உன் முயற்சிக்கு ஒரு மூணு.
==============
வெற்றி களிப்பில் மாது அவன் மேனேஜர் ரவி இடம் சென்றான்.
சென்று, ரவி நீங்க சொன்ன மாதிரேயே
அனைத்து அல்லக் கைகளுக்கும்
மதிப்பீடு போட்டுவிட்டேன் என்றான், சிரித்துக்க் கொண்டே.
ரவியோ, very good மாது.
குடுத்த வேலையெல்லாம் ரொம்ப நல்ல
செய்யுற, ஆனா.
எல்ல வேலையும் நான் சொல்லி சொல்லி
செய்யற.
நீயா எதுவும் சுயமா செய்ய தவரிற.
Self Initiative மட்டும் மிஸ்ஸிங்.
அதனால,
நீ முன்னேற மூணு என்று
நீல வாழை பழத்தை
மாது வாயில் மெல்ல மெல்ல சொருகினார்....
