Sunday, 31 October 2010

தடம் புரண்ட புகைவண்டி

என் வயது 33, திருமணமாகி
குழந்தைக்காக தவமிருக்கும் தம்பதி.
வேலை நிமித்தம் வெளியூரில் குடிகொண்டுள்ளோம்.

அன்று மதியம் வேலையேதுமின்றி
வீட்டில் அமர்ந்து ஒன்றுக்கும்
பேராத தொலைக்காட்சி சீரியலை
சீரிசாக பார்த்து கொண்டிருந்தேன்.

தீடிரென்று எழமுயன்று, முடியாமல்போனது.
கைகள் வைத்து எழமுன்றேன், அதே கதிதான்.
கைகளை பார்க்க மட்டுமே முடிகிறது.
அசைக்க முடியவில்லை.

ஐய்யோ என்று அலற,
மனைவி பதரி வந்து வினவினாள்.
ஒன்றுமே புரியாமல், ஆஸ்பித்திரியில் தஞ்சமடைந்தோம்.

புகைப்பழக்கத்தால் விழுந்துவிட்டது கைகளும்,
கால்களுமென்றார் மருத்துவன்.
இடியொன்று இடித்து சென்றது எங்களை.
உடனே குணப்படுத்த முடியாதென்று,
உறுதியாக உரைத்தார்.

ஒரு மாதம் தங்கி பார்த்து, மாத்திரையோடும்,
பண ரசீதோடும் வீடு வந்தடைந்தோம்.

மாமனார் ஒரு சக்கிர வண்டியொன்று வாங்கி தந்தார்.
ஓரிரு தினங்கள் கழித்து, எங்கள் வீட்டில்
நாங்கள் இருவர் மட்டுமே.
அதில் நான் மட்டும் பேசும் பொம்மையாய்.

பலநாள் பற்பசை பார்க்காத பற்களை துலக்க
ஆசை பட்டதால், மனைவி வந்து விழக்க,
அருகில் துப்ப ஒரு பாத்திரம்,
தண்ணீர் வாயில் இட மறுபாத்திரம்,
பார்க்கவே ஆத்திரமாய் வந்தது.

காலை உணவும், காலை கடனும்,
மனைவியின் மனசால் சாத்தியபடுகிறது.
மதிய உணவு, ஸ்ட்ரா இட்ட ஜூஸ்.
இரவு உணவும் இனியவளின் தயவால்.

எப்படி எல்லாம் பொறுப்பின்றி
வாழ்ந்திருக்கிறேன், விருப்பமின்றி
யோசித்தேன்.

நேரமரியாத தூக்கம், பசியாற்றாத உணவு.
எத்தனை சிகரட்டுகள் ஒரு நாளைக்கு?

காலை எழுந்தவுடன் ஒன்று,
காபியருந்தும்போது ஒன்று,
அலுவலகம் அடையும்போதொன்று,
அருகில் அமர்பவனின் அன்புக்காக ஒன்று,
அலுவலக அல்லல் தீர பல,
மற்றவர் புராணம் பாட சில,
மதிய உணவு செல்லும்போதொன்று,
செரிப்பதர்க்காக ஒன்று,
மாலை காபிக்கும் ஒன்று.

இதே போல் இரவுக்கும்,
படுக்கும் போது கலையாத
தூக்கம் வர ஒன்று,
களைந்து விட்டாலோ துரத்தி
பிடிக்க மற்றொன்று.

இவையனைத்தையும் கணக்கிட்டால்
இருபதை தாண்டும்.
இதில் என்றாவது ஒரு நாள் மது
அருந்தினால், சில பாக்கெட்டுகள்
செலவாகும்.

சில நேரம், நேரம் போகவில்லை
என்று அடித்திருக்கிறேன்.
பல நேரம், நேரம் போவதே
தெரியவில்லை என்று இழுத்திருக்கிறேன்.

உணவுக்கு பதில் சுவைத்திருக்கிறேன்,
உறக்கத்திற்கு பதில் பிடித்திருக்கிறேன்.

இன்றோ ஒன்னுக்கு கூட
ஒழுங்காக போக முடியவில்லை.

இந்த நொடி காலை உணவு,
சாப்பிட்டது செரிக்க, எழுந்து ஓட,
மனது துடியாய் துடிக்கிறது,
ஆனால் உடல் தசைகள் செத்துகிடகிறது.
முயன்று முயன்று உடலை அசைக்க
பார்த்து ஒன்னுகே வந்துவிட்டது.

விளைவு, சக்கிர வண்டி சகதியாகிவிட்டது.
மனைவி துணையோடு, மாற்று
இருக்கைக்கு மாறினேன்.

பின்பு மனனவியோ காய்கறி வாங்க
சென்றுவிட்டாள். நான் தனியே வீட்டில்.

தனிமையாக இருந்ததால்,
துக்கம் தொண்டையடைத்தது,
தாரை தாரையாக, கண்ணீர் பெருகி,
முகம் நனைந்து, சட்டையும் ஈரமாயிற்று.

உப்பு படர்ந்த முகத்தை தேடி,
மூன்று ஈக்கள் வந்தது.
ஈக்கள் சத்தமே, என் சித்தத்தை கலக்கியது.

மூன்றும் மூன்று இடம் பார்த்து
முகத்தில் அமர்ந்தது,
முகத்தை இடப்பக்கமும், வலப்பக்கமும்,
மாறி, மாறி ஆட்டினேன், ஈக்கள் எழுந்தபாடில்லை.

வேகமாக ஆட்டுகிறேன், எழுந்து பின்பு,
அதே இடத்தில் அமர்ந்தது, அந்த அகோர ஈக்கள்.
முன்னும் பின்னுமாக அசைத்தேன், அசரவே இல்லை.

இப்போது அறிப்பெடுகிறது, முகமுழுதும் அரிப்போ
அரிப்பு, ஆ! ஆஅ! என்று கத்துகிறேன்,
அரிப்பு இன்னும் கூடுகிறது.

சொரிய நினைத்து, சரிந்து விழுகிறேன்,
ஈக்கள் விட்ட பாடில்லை.
ஐய்யோ! ஐயோ!
காப்பாத்துங்க!!!! காப்பாத்துங்க!!!!!!!
என்று கூச்சளிடுகிறேன்.
என்னங்க? என்னாச்சுங்க?
என்று படுக்கையில் இருந்த
என் மனைவி கேட்டாள்.
ஆனந்த கண்ணீரில்,
கேடு கெட்ட பழக்கத்தை கழுவி,
விட்ட தூக்கத்தை தொடர்ந்தேன்................................

Sunday, 17 October 2010

தெய்வீகக் காதல்

அழகானவளே,
உன்னை பல வருடங்களுக்கு
முன்பு, ஒரு முறை பார்த்து சிலையானேன்.

அன்று முதல் இன்று வரை,
தினம் ஒரு முறை பார்க்காவிடில்,
பஞ்சனை பாறையாகிவிடும்.

சந்தோஷத்தில் உன்னோடு இருக்கையில்,
சிரிக்கிறாய்.
துக்கத்தில் துவண்டு கிடக்கையில்
என்னை சிரிக்க வைகிறாய்.

உன் போட்டோ இல்லாத
இடம் இல்லை என் வீட்டில்,
ஆனாலும் உன்னை பார்த்துக்கொண்டே
இருக்க தூண்டுகிறது என் மனம்.

அனுமதித்தால் இரவு கூட,
நேரில் பார்த்து சேவிப்பேன்,
அனுமதிக்கவைப்பாய்.

சில நேரம் உன் கண்ணின் ஒலி கண்டு,
சிலிரித்து போனதுண்டு.
பல நேரம் உன் லட்சணத்தில்,
லயதுப்போனதுண்டு.

உன்னை பார்க்கும் வரை இருக்கும்
பதட்டம், பார்க்கும் போது அதிகமாகி
பின்பு சாந்தி நிலை அடையும்
ஆனந்தத்தை என்ன வென்று நான் சொல்லுவேன்.

எத்தனை பேர் தவம் கிடக்கின்றனர்
உன்னை ரட்சிக்க,  என்னை மட்டும் எப்படி
ஆட்கொண்டாய்.

என் கடுமையான காதலை,
கரும்பாக்கி, தேனூற்றி,
என்மீதே தெளிக்கிறாய்.
அதை நான் பருக முடியாமல்,
நனைத்துக் கொள்கிறேன் உடல்முழுதும்.

அன்போடு வளர்த்த அன்னையும்,
அதட்டாத தந்தையும் எனக்கு
ரெண்டாம் பட்சம் தான், நீ இருக்கையில்.

என்ன செய்தாய்,
இப்படி பித்தனானேன்.

உடை பிரியனான நான், உனக்காக
உனக்கு பிடித்த சிகப்பு நிறத்தையே
தினந்தோறும் அணிந்தேன்.
சிரித்தார்கள் என் சக நண்பர்கள்,
உன் மகிமை புரியாத மதி கெட்டவர்கள்.

எத்தனை ஆச்சிரயங்கள் என் வாழ்கையில்
புரிந்திருக்கிறாய். பட்டியலிட்டால் பேணா
முனையே மழுங்கி போகும்.

பர்சு தொலைத்தேன், பதறவேண்டாம்
கிடைத்துவிடும் என்றாய், கிடைத்தது.
நோயோடு வாழ்கையில், நொடிந்து போக
மாட்டாய் என்றாய், நிமிர்ந்து அமர்தேன்,
அலுவலக சிக்கலென்றேன், சிரித்துக்கொண்டே
என் சிந்தனையை சீர் செய்தாய்.

இன்னும் எவ்வளவோ, யாருக்கு கிடைக்கும்
இப்படியொரு சக்தி படைத்த சாவித்திரி.

காதல் உச்சம் தொட்ட போது,
பசிக்கும் புசிக்க முடியாது,
புசித்தால் செரிக்காது,
குளிக்க மாட்டேன் அனால் நறுமணம் கமழும்,
கண்ணாடி அழுக்காகும்,
சீப்பு செத்துபோகும்,
தலை மயிர் கூடு கட்டும்,
சுத்தியுல்வர் மாயமாவர்,
அண்டம் முழுதும் என் அட்டகாசம் மட்டுமே,
ஆகாயம் தொடும் தூரத்தில் இருக்கும்,
அலை கடலையும் அளக்க முடியும்,
நட்சத்திர ஒளியை கட்டுப்டுத்த முடியும்,
சுட்டெரிக்கும் சூரியன் நடுங்க வைக்கும்,
குளிர் காற்று கனல் மூற்றும்,
செருப்பு கடிக்கும்,
பாதம் தரையோடு நடக்க பரிதவிக்கும்,
தாடி தாடை தாண்டும்,
முக சவரம் மறந்துபோகும்.

உன்னையே துதி பாட துடிக்கிறேன்,
துணையிருப்பாய்.

வாய்விட்டே பேசமாட்டாய்,
விளங்கவைபாய்.
தொட்டு பலகமாடாய்,
பாசத்தோடு பார்துகொல்வாய்,

எழுபது வயதில்,
ஏங்கி கிடக்கிறேன்,
உன்னை நேரில் காண,
பூலோகம் வர மறுத்தால்,
என்னை கூட்டி கொள்வாய்
தேவலோகத்துக்கு,
கருணை தேவியே,
காமாட்சி அம்மனே.

Monday, 4 October 2010

பள்ளி செல்லும் அல்லி ராணி....

அதிகாலை, அல்லோலப்பட்டுக் கொண்டிருகிறது
அமைதியான வீடு.
அல்லி ராணியை அள்ளி எடுத்தார்
அப்பா, படுக்கையிலிருந்து.
பிஞ்சு மொட்டு கண் மலர மறுக்கிறது.

கசக்கி, கசக்கி முத்தம் கொடுக்கிறார்,
கண்ணத்தில். குட்டியோ பட்டு கைகளால்
கழுத்தை தட்டி விடுகிறது.
பிறகு வாய் திறந்து அம்மா ராகம்
பாடியது.

கண்ணுகுட்டியை கையில் வாங்கி,
மடியிலிட்டு, தலை கோதி கொஞ்சுகிறாள், அம்மா.

அப்பா தனிமரமாய், நாளிதழ் நாடி,
நாற்காலி அடைகிறார்.

சர்க்கரை இட்ட, சுவையான பசும்பாலை,
பாட்டில் கொண்டு, வாயிலிடுகிறாள்.
வாஞ்சையோடு வாங்கிகொள்கிறாள்,
இந்த குட்டி வானம்பாடி.

குளியலறை கூட்டிச்சென்று, சுடு  நீரில்
உடல் நனைத்து, சோப்பிட்டு, குளிக்க
வைத்தாள் குண்டு குங்கும சிமிழை.

துண்டு கிடைக்க நேரமானதால்,
துள்ளி குதித்தால் புள்ளி மான்போல.
கிடைத்த துணியால், உடல் போர்த்தியவுடன்,
தோகை மயில் போல் சிலிரித்து சிணுங்கினாள்.

நடக்க வைத்து படுக்கையறை அடைந்து,
மடியிலிட்டு, அப்பா கையில் வைத்துள்ள
பிட்டு துணியால், காது, மூக்கு சுத்தம் செய்தாள்.
இதை ஏற்க மனமின்றி இளந்தளிர் தும்மிவிட்டாள்.

உடல் முழுவதும் பவுடர் இட்டு, புருவத்திலும்,
விழி ஓரத்திலும் மையிட்டு, நெற்றியில் பொட்டிட்டால்.
மின்விசிறியை பார்த்துக்கொண்டே சகித்துகொண்டாள்
1550 ஆம் முறை.

பிறகு காலர் நுணியில் சந்தன பொட்டிட்ட
சட்டையும், அதன் மேல் கச்சா வைத்த
கௌன்னும் அனுவிக்கப்பட்டது.
கழுத்தில் டை ஒன்றும், இடுப்பில்
எலாஸ்டிக் பெல்ட் ஒன்றும் மாட்டியதை,
புரியாமல் வெறித்து பார்த்தது வெள்ளந்தி.

டைன்னிங் டேபிள் மேல் அமர்த்தி,
சுட்டு வைத்த இட்லியை, வாயில்
நுழைத்து பார்த்தால், உடனே தரையை
பார்த்து துப்பினாள்.

பல்லை கடித்துக்கொண்டே, பாலை கொடுத்தாள்.
ஓரிரு துளிகள் தவிர உள்வாங்க மறுத்தால்.

முறைத்துக்கொண்டே வெட்டி வைத்த ஆப்பிள்
துண்டை துணித்தால், துப்ப முடியாமல், விழுங்க
நினைத்து விக்கி, விக்கி விம்மினாள்.
துடித்து போய், தலை தடவினார் தாத்தா,
பாதம் பிடித்தால் பாட்டி,
துப்பவைத்தால் அம்மா,
இதை தள்ளி நின்றே பார்த்தார் அப்பா.

சரியான பின்பு, மகளை அருகில்
கொண்டு ஆசுவாசப்படுத்தி,
வெறி கொண்ட வேங்கை போல்
கடித்து கொதரினார் மனைவியை.

அலடிக்கொள்லாமல் அடுத்த வேலையை
தொடர்ந்தாள் மனைவி, எப்போதும்போல்.

கணுக்காலை சூவில் சொருகி, சுருக்கு
கயிறு கொண்டு இருக்க வைத்தாள்,
மழலையோ மதிகெட்டு சிரித்தது.

காரில் மூவரும் ஏறினர், தாத்தா, பாட்டி
முத்தங்க்கொடுத்து வழியனுப்பினர்.

கார் நகரும் போது, புரிந்துவிட்டது
குழந்தைக்கு பள்ளி செல்கிறாள் என்று,
முதல் முறை, புது அனுபவம்.

அம்மா சொல்லியிருக்கிறாள்,
ஆறு மணிநேரம், ஒரே இருகையில்
இருக்க வேண்டுமாம்!
எப்படி முடியும்?
இதுவரை இரண்டு நிமிடங்கள் கூட
இருந்ததில்லையே.

சத்தமிட கூடாதாம், மீறினால்
அடிபார்களாம், அடங்கவில்லை
என்றாள், போலீசுடம் தருவிப்பார்கலாம்.

நேற்று வரை நினைத்த நேரத்தில்
அப்பாவை பார்க்க முடியாது.
ஆனால் இன்று முதல் அம்மாவையும்
பார்க்க முடியாதாம்.

பசித்தால் அழக்கூடாதாம்,
மணியடிக்கும் வரை பொறுத்துக்கொள்ள
வேண்டுமாம்.
இதை என் குட்டி வயிரிடம்
எப்படி சொல்வேன்?

ஒன்னுக்கு வந்தால் கூட ஒடக்கூடாதாம்,
டீச்சரிடம்  சொல்லவேண்டுமாம்.
அனுமதித்தால் தப்பித்தேன்,
இல்லையேல் அசிங்க படுவேனே
அனைவரின் முன்னிலையிலும்.

ஒழுங்காய் இருக்க வேண்டுமாம்.
ஒழுங்கை பற்றி ஒரு நாள்,
அப்பா சொன்னார் லேப்டாப்பை
தட்டிக்கொண்டே, ஒன்றும் புரியவில்லை.

இதில் ஏதேனும் தவறினாள்,
அடிப்பார்களாம், முட்டியிட சொல்ல்வார்கலாம்,
அதோடு திட்டுவார்களாம், இன்னும் என்னென்னவோ.

பள்ளி வந்துவிட்டது இறங்கு என்றாள்,
என் அம்மா.

மனமின்றி நடக்க மறுத்தேன்,
தூக்கி கொண்டார் என் அப்பா.

அம்மாவோ என் தலையை தடவிக்கொண்டே
பின் தொடர்ந்தாள்.

அடிக்கொரு முறை முத்தம் தந்து
கொண்டே நடந்தார் அப்பா.

இப்போது அம்மாவோ கண்ணத்தை
கிள்ளி, கிள்ளி சிரிக்கிறாள். எனக்கோ
வெறுப்பு தான் வந்தது.

வகுப்பறை வந்து இறக்கி விட்டு,
அமர வைத்து, டாட்டா சொல்லி,
வெளியே சென்றனர்.

எனக்கு பயம் தொற்றி,
நடுக்கம் கண்டது.
ஜன்னல் பக்கத்தில்
சிரித்துக்கொண்டே அம்மா,
மனதுக்குள் அழுதுகொண்டே அப்பா.

டீச்சர் உள்ளே வந்தாள்,
நான் 'வேய்' என்று,
உதடு பிதுக்கி,
வாய் பிழந்து
அழ ஆரம்பித்தேன்.................