Sunday, 2 October 2016

Me and My Day

          It’s 4 o’clock in the morning. I am still struggling to keep my eyelids closed. Oh my God! I am defeated once again, yes my eyes starts oozing out from the lids, cannot stop! Pillow is now absorbing the salt water trickling out from the left eye. Wet pillow disturbs me a lot.

Decided to wake up, but how? Thinking of the best possible plan to execute this operation. There comes an idea, bring all five puffy fingers closer, making it firm, tight to gain thrust, lifted my head a bit couldn’t stay long and ended as a failure attempt. Now, trying again with left shoulder, instituted elbow to support and yes can stay still for some time but not longer enough.

With open mouth, eyelids tight, widening chin, slowly sliding legs towards the edge of the cot. The heavy swollen legs, starts to fall down inch by inch making the upper body to lift up like a sea-Shaw. Thanks to my heavy built-up legs.  

Sitting in the edge of cot like a king, Sun is still pretending to come. The room is dark, ceiling fan making cranky noise, the steel walker is sober and pleading me not to call for the duty. Yes, I can understand that the whole world is running like mad horse all through the day and sleeping to the fullest extent possible to make their body & mind feel or stay healthy. Not like me, the old retired government officer.

Waited for long time and yet to hear voice of the people, rhythm of the milk man cycle bell, newspaper flying sound…. Though nothing is visible patiently looking around the room, are there anyone, anything talks to me? Smiles at me? No, says the cranky ceiling fan…Hmm understood it’s the usual power cut at 5 30 AM. I am an old man and a medically proven patient, can wait patiently for some more time….

It’s 7 o’clock, can’t wait anymore, as my urinary bladder is bulging. Hey walker, can we start the journey for today? With full preparedness, the walker shown his two arms in front of me to climb. Tried very hard and at my 8th attempt succeeded. Though standing, literally appears to be bow like image. Pathetic!! Knee joints are killing my faith; 100 sharp needles keep on pricking all around the knee cap, however slowly stretched my back discharges a thunder like sound. Oh God not again!     

Several minutes passed by, me in comfortable atmosphere. Decided to walk, one step at a time, walked like a toddler. Reached washroom slowly and steadily. Emptied urinary bladder and that gives me a relaxed feeling. Without much effort, found toothbrush and paste, few strokes left and right, that’s it, I am done.

Found a chair at the dining room, took a syringe to maintain diabetic level. Two idlies for breakfast and a glass of sugarless, tasteless tea.
Started a new journey with walker from dining room to living room. Took decent amount of time to reach at the sofa’s. Had a glance at the headlines of the newspaper, took a deep dive on the state level matters, continued reading the weekly magazine from where it was left yesterday.

Clock ticks 1230 PM, hmmm…time for lunch. Walker is ready. Sitting in a cushion sofa is so easy but to get up is a tougher task. Tackled somehow, with an unstable body and a hungry stomach, resumed my return journey to dining room.

Yellow colour watery sambar with no salt in it, less spice and very less dhal. Small cup of white rice, never filled my little tummy. It’s the doctor’s advice to have it that way. At times I forget to put injection before lunch, even today it is the case. On such days, my sugar level shoots high and make me dizzy the rest of the day.

Stayed there in dining chair until 3 PM, like me walker is also feels better to move, hence started my journey to small bed room. Started same old discussion with my wife about the way we earned, saved money for kid’s future, house construction, daughter, son wedding etc., and it didn’t go for so long. Again fall asleep in sitting posture.

Clock strikes at 530 PM, tea time. Same hot, flavoured tea but with one sugar pill in it, tastes like heaven.
Took the walker, journey to the living room, switched on the TV to kill few more hours until that greatest moment of the day arrives.

Dring! Dring!! The land line rings, after few ring bells my wife answered the call. It was from the plumber to get our kitchen sink fixed. I am bit unhappy.

After some time, Kee! Kee!! Kee!!! Kee!!! My Mobile rings, it was from credit card company asking me to avail one, I said no in louder tone. Felt very sad.

At 8PM again land line starts ringing. I am sure, this time, it’s from them. With greatest excitement, I stood up without walker and collapsed. Walker gave me a strange look at me. Luckily my wife with her good sharp instinct, holds me before crashing onto the floor. That’s saved me from unwanted injuries to prevail. That call was actually from the telecom provider sharing about some offers which is not of our interest at all. I felt so disappointed.

Finally, at 9 PM, got a call at my mobile. Yes, this time it is from my daughter’s granddaughter from London. Oh! What a sweet voice she has? So soothing, the kind of care she is showering on me is unbelievable, I am so thankful to the almighty to have such a precious grandchild. The day is cherished with loads of happiness after the call.

Around 10 PM, after the injection and dinner, call from son’s daughter. She is an angel and too small, though yet to start to talk words her mesmerising sound takes me to the top of the world.

Felt like the day is now complete. Walker is looking at me, yes it time for a sound sleep. Slowly moving to the bed room with walker. Had plenty of pills as per physician’s advice and lie down on the bed.

Slowly am losing my conscious due to heavy dosage but I am still rewinding granddaughter’s voice and the way they spoken to me.
Yes, things are not in control, mmmm…Slept! Walker is also sleeping in standing posture.

It’s 4 o’clock in the morning. I am still struggling to keep my eye’s closed!!!!

     

Friday, 19 June 2015

ஒரே கதைக்குள் இரு கதைகள்!

- அதிகாலை மூன்று மணி. ரவி அயர்ந்து தூங்குறான், இதுவே தக்க சமயம் தப்பித்துக் கொள்ள  என்று முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியே வருகிறான் செந்தில். மரத்தடியில் நிறுத்தி இருக்கும் காரை கிளப்பியபடி தப்பித்தான்.

+ தப்பித்தே விட்டேன் என்று நினைத்தால்,  இல்லவே இல்லை, சரியாக மாட்டிக் கொண்டதாகவே தோன்றிற்று. கொஞ்சம் தைரியம் இருந்தும், பயமே மேலோங்கி நிற்கிறது. என்னையும் அறியாமல் காரை விரட்டுகிறேன். இருண்ட ரோட்டில் மின்னல் ஒளியாக பரவித் திரிகிறேன்.

- முடியாது என்று எவ்வளவு சொன்னாலும், சொந்தமும், சொத்தும் விட்டு விலகி விடக்கூடாது என்று செந்திலின் அம்மா வற்புறுத்தி, இந்த திருமண ஏற்ப்பாட்டை செய்துவிட்டாள். இன்று காலை 730 க்கு திருமணம் நடப்பதாய் இருந்தது.   தப்பித்துவிட்டான்! நிம்மதி பெருமூச்சு விட்டபடி செல்லும்போது, ஒரு சந்தில் இருந்து தீடீர் என்று ஒரு ஸ்கூட்டி வெளியே வர. செந்திலால் பிரேக் போட முடியாமல் மோதி, தலையில் பலத்த அடி பட்டு, சித்த பிரம்மை கலங்கி மயங்கி கிடந்தான். ஸ்கூட்டியோடு அவளும் தூக்கி எறியப் பட்டாள்.

+ டமார் என்று இடித்ததால். காரை நிறுத்தி விட்டு, பயத்தை அடக்கிக் கொண்டு, இறங்கினேன். ஏம்பா பாத்து வரமாட்ட? இப்படியா வந்து மோதுவ? என்றார் ஒருவர். அய்யா, ஏதோ ஒரு ஞாபகத்துல வந்துட்டேன், தப்புதான் என்று மன் னிப்பு கேட்டேன். பெயரைச் சொல்லி விவரத்தைச் சொன்னேன். ஒரே ரத்த வெள்ளம், குமட்டிக் கொண்டு வந்தது.

- சிறிது நேரம் கழித்து வேகமாக இரு புறமும் தலையை ஆட்டி விட்டு,  மெல்ல அருகில் சென்று பார்த்தான் செந்தில். வட்டமான முகம், பால் நிறம், பச்சை நிறச் சுடிதார், சிரித்த படி சரிந்து கிடக்கிறாள். பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. எனக்காக, என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடவுள் அனுப்பிய தேவதையாய் உணர்ந்தான், வாய் விட்டுச் சிரிக்கிறான் . மயங்கி கிடக்கிறாள், ஆனால் உடல் மட்டும் துடியாய் துடிக்கிறது.

+ தம்பி, ஒன்னும் பயப்படாதீங்க, வாங்க வந்து ஒரு கை பிடியுங்க என்றார். நடுக்கத்தோடே நாடினேன். இருவரால் பிடிக்கவே முடியவில்லை. சரிந்து சரிந்து போகிறது. லேசாக மே மெ என்று முனகல் சத்தம் வேறு. என் கைகள் பட்டவுடன் உடல் திமிறுகிறது.

- மென்மையான தேகம், மல்லிகை பூ வாசம் செந்திலை வசீகரித்தது. முடிவே செய்துவிட்டான், இவளையே மனமுடிப்பதென்று!  கண்கள் மூடியே கோமா நிலையில் இருக்கிறாள். கண்கள் திறப்பதர்க்குள் தாலியே கட்டிவிட்டால் என்ன? என்று ஒரு கிறுக்கு பிடித்தவன் போல எண்ணலானான். காரின் பின் கதவை திறந்து வைத்தான்.

+  கை தாங்களாக, அனைத்தபடி காரின் பின் சீட்டில் படுக்க வைத்தேன். வைத்திருந்த துணியால் மூடிவிட்டேன். கால்களை ஒரு கயிறு கொண்டு  கட்டிவிட்டேன். வயிறு மேலும் கீழும் சுருங்கி விரிந்தபடியாய் காட்சியளித்தது.

-  எப்படியோ காரில் ஏற்றியாகி விட்டது. வீட்டிக்கு செல்லலாம் என்று முடிவு செய்து முன் சீட்டில் ஏறினான். இதுபோல் ஒரு வாய்ப்பு என்றுமே அமைந்தது இல்லை, ஆகவே லேசான பயம் வேறு. பிரச்சனை செய்யாமல் வருவாளா என்ற கவலை வேறு.

+ காரில் மென்மையான பாடல்கள் கசிவிட்டு செல்லும் பொழுது, பின் கண்ணாடியில் பார்க்க பார்க்க, இந்த ஜீவன் மேல்  அன்பும், ஆசையும் பொங்கி வந்தது. முகம் வாடி இல்லை ஆனால் பாவமாய் பட்டது. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இன்று எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும்,  வாழ்க்கையை அர்பணிக்க இருப்பதற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தேன்.

- நிகழ இருந்த கல்யாணக் கவலை கொஞ்சமின்றி ஒரு பைத்திய காரனைப் போல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்திருப்பது செந்திலுக்கு தீராக் கஷ்டம் வருமென்று புரிந்து கொள்ளாமல் புறப்படுகிறான். இந்த செய்தி மட்டும் பெண் வீட்டாருக்கு தெரிய வரும்போது, முதல் காரியமாக இவளின் தலையை வெட்டி எரிவது உறுதி!

+ கடிகாரத்தை நோக்கியபடி ஒரு கூட்டமே என் காரின் வரவை நோக்கி காத்திருக்கிறது. இப்போது இருப்பது பழைய வீடு, அருகிலோ நாங்கள் ஆசை ஆசையாக கட்டி முடித்திருக்கும் புது வீடு. குடி புக குடும்ப ஜோசியர் தோஷ நிவர்த்தி சொன்னபடி ஆடோ, கோழியோ பலி கொடுக்கவேண்டுமாம். இன்னும் அது நடந்தபாடில்லை.

- இன்னும் ஒரு மணி நேரமே வீடு சென்று சேர்வதற்கு. இப்போதே அங்கு கலவரம் அரங்கேறி இருக்கும் என்று தோன்றிற்று. மொபைல் எடுத்து அன்னை தந்தைக்கு விபரத்தை பற்றி விலக்கினான். தனக்கு திருமணமே  வேண்டாம் என்பதையும் தீர்க்கமாக எடுத்துரைத்தான், செந்தில்!

+ அய்யர் முதல் கட்டிட சித்தாள் வரை குழுமி இருந்தனர். தோரணங்கள் ஒரு புறம், பிளாஸ்டிக் இருக்கைகள் , வாழை மரம், சீரியல் செட் மற்றும் பாவமாய் ஒரு பசு மாடு மேய்ந்த புல்லை மேய மனமின்றி மேய்ந்து கொண்டிருந்தது.

- மணியோ 430, மாப்பிள்ளை செய்த காரியம் அறிந்த பெண் வீட்டார், செந்திலின் வீட்டில் முற்றுகை இட்டு இருந்தனர். நெருங்கிய சொந்தமாய் இருந்தும் ஆவேசமாய் கொந்தளித்தனர்.

+ எப்படியோ நினைத்தது நினைத்தபடி, பின் சீட்டில் இட்டு பிரச்சனை ஏதுமின்றி  வீட்டின் தெருவடைந்தேன்.

- கார் வந்து நின்றது, செந்தில் இறங்கிய அடுத்த நொடி, திபு திபுவென்று பெண் வீட்டார் காரை நோக்கி ஓடி வந்தனர். செந்திலை முற்றுகை இட்டு, மறுமொழி கேட்டனர். செந்திலோ மிகத் தெளிவாக மணந்தால் காரில் உள்ள பெண்ணையே மணப்பேண், இல்லையேல் பிரமச்சாரியாக மீதிக் காலத்தை களிப்பேன் என்றான். செந்திலை கீழே தள்ளிவிட்டு, ஆத்திரத்தோடு யாருடி நீயி, சொத்துக்கு ஆசைப் பட்டா வந்த, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் சாவு எங்க கையில தாண்டீனு, கோமாவுல இருந்த குனவதியிடம் அலறிக் கொண்டே, பின் கதவை திறந்தனர்.

+ அலேக்காக தூக்கி, கீழே இறக்கி, வைத்திருந்த கொடக் கத்தி கொண்டு ஒருவன் வெடுக்கென்று கழுத்தைக் கீறினான். ரத்தம் பீச்சி அடிக்க, அதைப் பார்த்த நான் மயங்கி ஒரு புறம் விழுகிறேன். முண்டத்தைப் பிடித்து இழுத்தபடி, நாக்கை மடித்து கொண்டு, புது வீட்டின் நான்கு மூளையையும் ரத்தம் பதிய முட்டி முட்டி எடுத்தனர். தோஷப் பரிகாரம் நிறைவேற்றப் பட்டு, தலையில்லா முண்டத்தை வீசி எறிந்தனர்!!!






Sunday, 17 May 2015

உங்களின் கனிவான கவனத்திற்கு

வயது நாற்பது தான்,
நியாயமாய் சந்தோசம்
கூதுகளிக்கும் பருவம் தான்.

ஆனால் எனக்கோ,
விரக்த்தி பிடித்து ஆட்டுகிறது.

எதைக் கேட்டாலும் எரிச்சல்,
எதைப் பார்த்தாலும் படபடப்பு,
என்ன செய்கிறோம், தெரியவில்லை,
எங்கே செல்கிறோம், விளங்கவில்லை.

குழம்பிக், குழம்பி
மனம் குன்றி,
மாண்டு போக முடிவாய்
இருந்தேன்.

நேற்று இரவு,
எதிர் வீட்டு தாத்தா,
குறி சொல்லுவது போல்,
"கவனமாய் இருந்தா
குழப்பம் குழம்பி ஓடிடும்"
என்றார்.

"கவனம்" என்றால் என்ன?
யோசிக்க இஸ்டமின்றி,
வலைதளத்தில் வலை வீசினேன்.
புரிந்து கொண்டேன்.

படுத்தேன்,
அயர்ந்து தூங்கி
அதிகாலை விழித்தேன்.

கவனமாய் படுக்கையை சுருட்டி,
அழகாய் மடித்து,
படுத்திருந்த இடத்தில் கால் வைத்தால்,
இதமான சூட்டில் இருந்தது.

தண்ணீர் குழாய் திறந்து,
வலது கை குறுக்கி,
தண்ணீர் நிறைத்தால்,
பல பலவென்று மிண்ணியது,
கூச்சம் விலகாத கண்களை,
தண்ணீர் இட்டு கழுவினேன்.

கழுவிய முகத்தை,
கண்ணாடியில் பார்த்தால்,
ஜொலிப்பது புரிந்தது.

கவனம் குறையாமல்,
பல்  துலக்கினால்,
பற்கள்  என்னைப் பார்த்து
வெட்கத்தில் சிரித்தது.

இதேபோல் கவனத்தோடு,
ஒவ்வொரு வேலையாய்
முடித்துவிட்டு, வெளியே வந்தேன்.

சிவப்பும், மஞ்சளும் கலந்த
வண்ணத்தில் வானம் வசீகரித்தது.
குறுக்கும், நெடுக்குமாய்
குருவிகளும், காக்கைகளும்
கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்ந்தபடி
இருந்தது.

எங்கோ எனக்காக ஒரு குயில்,
கூ கூ கூ என்று கூவிய நாதம்,
என்னை குஷிப் படுத்தியது.

கவனத்தை பாதையில்
இட்டு நடந்தேன்.
ஒரு வீட்டு வாசலில்
எனாமல் பெயிண்ட் இல் ஒரு கோலம்,
அதில் காய்ந்து போன நாயின் விட்டை.

கூச்சப் படாமல்,
காலால் அதை உதைத்தெரிந்தேன்.
இப்போது கோலம் கோலாகலமாய்
சிரித்தது - கூடவே அந்த வீட்டாரும்
நன்றி கூற கூச்சப் பட்டு
புன்னகை பூத்தனர்.

அடுத்த தெருவில்,
தேநீர் விடுதி,
தேர் கூட்டம்.
வரசை இல்லாத
வரிசையில் நின்று,
தேநீர் பெற்று,
அருகிலிருந்தவரிடம் அளவாடிக்கொன்டே,
கவனமாய் அருந்தினால், அலாதி சுவை.
சுவையின் சுகத்தை டீ
மாஸ்டர் இடம் சொன்னால்,
சமைந்த பெண்போல் வெட்கப் படுகிறார்.

அப்படியே,
பூக்கார அம்மாளிடம்
பூ கட்ட பழகிக் கொண்டு.
பழ வண்டி காரரிடம்
பழ நிலவரம் கேட்டு தெரிந்து,
எழனி காரரோடு
பொள்ளாச்சியை புரிந்து கொண்டு,
பேப்பர் கடையில்,
நாளிதழ் வாங்கி வீடு திரும்பினேன்.

புத்துணர்ச்சி பொங்கிற்று,
புது அனுபவமாய் தோன்றிற்று.
ஏதோ என் மனம் சொல்லத் துடித்தால்,
காது குடுத்துக் கவனமாய் கேட்டேன்...

மனம் பேசலானது....

இந்த உலகம்
எவ்வளவு அழகுடையது?
உன்னை பூமிப் பந்தில்
பிறக்க வைத்த காரணம் தெரியுமா?
அழகாய் இருக்கும் உலகத்தை,
மேலும் அழகாக்கவே!

உனக்கு கொடுத்திருப்பதோ,
குறைவான அவகாசம்.
உன் நேரம் முடிவதற்க்குள்,
பார்க்க வேண்டிய இடங்கள்,
பேசவேண்டிய விஷயங்கள்,
கற்க வேண்டியவைகள்
அனைத்திலும் ஆட்படுத்திக் கொள்.

நேரத்தை நொந்துகொண்டு,
விரயமாகாத்தே.

இங்கு நீ,
எதையும் செய்யலாம்,
எதுவாகவும் மாறலாம்,
யாரையும் மாற்றலாம்,
ஏன் இந்த உலகத்தையே மாற்றலாம்.

ஏதாவது புதியதை
கற்றுக்கொள்.
கற்றதை செயலாக்கு.
செயல் படுத்தியபின்,
வேறொன்றை புதிதாக
கற்றுக்கொள்.

வெற்றி, தோல்வியை விட
அனுபவமே அறிய பரிசு.

கவனமே அனுபவத்தை
ஆட்கொள்ளும் சூட்சமம்.

ஆகவே,
எதிலும் கவனமாய் இரு,
பாசமாய் பழகு,
நேசக் கரம் நீட்டு,
மன்னிக்கும் மனதை விசாலப் படுத்து,
மரியாதை கொடு,
நம்பிக்கை கொள்,
இயற்கையோடு கை கோர்த்து நட,
யாருடைய கோபத்தின் மீதும் கொதிப்படயாதே,
அன்பை வெளிப்படுத்த தயங்காதே,
அன்பைப் பெற்றுக்கொள்ளவும் மறக்காதே.

மதிகலங்க ஆடு,
உள்ளம் இன்புற கீதங்கள் பாடு,
வயிறு இனிக்க உண்டு மகிழு,
சத்தமாய் சிரி,
குழந்தைபோல் அழுது முடி.

வயது உன் சரீரத்திற்கே தவிர,
உள்ளத்திருக்கு இல்லை என்று உணரு.

கவனத்தோடு அன்பைப் பரப்புவோம்,
வாழும் நாட்க்களை பயனுள்ளதாய்
மாற்றுவோம்.

நிர்வாண மீன்கள்

எளிமையான வாழ்க்கை,
எதார்த்தமான நிகழ்வுகள்,
பெரிய பெரிய கனவுகளோ,
லட்சியங்களோ இல்லாத
இளைஞனாய்  இருந்தேன் - திருமணம்
முடியும்வரை.

இன்றோடு விளையாட்டுபோல்
பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது.

இந்த திருமண பந்தம்,
என்னென்ன மாற்றங்கள்,
என் மீது நிகழ்த்தியுள்ளது?

யோசிக்கிறேன்.....!

கண்விழிக்கும் நேரத்தில்
மாற்றமில்லை.
கண்ணயரும் நேரமும்
என் விருப்பமே.
இதில் மாற்றம் வேண்டி - என்னவள்
செல்லச் சண்டை இடுவாளே தவிர,
செங்கொடி பிடித்தாய் நினைவில்லை.

எதுவும் படிக்கலாம்,
எப்போதும் எழுதலாம்,
இது குறைந்த நேரமே என்றாலும்,
குணவதியின் குமுறல் கேட்டதில்லை.

வாசகியாய் சிலநேரமும்,
விமர்சகியாய் பலநேரமும் செலவிட்டாலும்,
எனக்கு ஒருபோதும் திகட்டியதில்லை.

அலுவலக  அவஸ்தையோ,
நண்பர்களின் நாசவேலையோ
இல்லை நான் விரும்பியோ
நேரம் தாழ்த்தி வீட்டையும் போது
பயமின்றி உள்ளே செல்லலாம்.

ஆன்மீகப் பயணத்திற்கும்
தடை போட்டதில்லை.

நான், என் தாய்,
தகப்பனிடம் பழகும் பக்குவத்திலும்
பங்கமில்லை.

சில மாற்றங்கள்
என் வயது முதிர்ச்சியாலும்,
அறிவு முதிர்ச்சியாலும்
நிகழ்தவையே.

திருமணம் என்னை
பட்டை தீட்டவில்லை,
மழுங்கிப் போகவும் விடவில்லை.

நான் நானாகவே
இருந்கிறேன்,
அவளும் அவளாகவே
இருக்கிறாள் என்று நம்புகிறேன்.

நாங்கள் இருவரும்,
பெரிதாக ஆசைப்பட்டதோ,
பொறாமை பட்டதோ,
பணத்தை சேர்க்க திட்டம் தீட்டியதோ,
சேர்த்த பணத்தை முதலீடு செய்ததோ,
ஆதங்கபட்டதோ, தோல்வியில் துவண்டதோ,
வெற்றிகளில் வெறி கொண்டு ஆடியதோ,
இல்லையென்று தீர்க்கமாய் கூறுவேன்.

இது சரியான வாழ்க்கை முறையா?
தெரியவில்லை.

ஆனால்,
ஒன்றே ஒன்றை,
நிதம் நிதம் பின்பற்றுவோம்,
அது -
யாருடைய மனதையும்,
எதற்க்காகவும்,
எந்த சூழலிலும்,
தெரிந்தோ,
தெரியாமலோ,
புண் படுத்திவிடக் கூடாது,
என்பதில் கவனம் செலுத்துவோம்.

மற்ற நேரமெல்லாம்,
நிர்வாண மீன்கள் போல நீந்துகிறோம்,
இன்னும் நெடுந்தூரம் நீந்துவோம்..................................!

சுடு சோறு

அளவறியா அலுவல் வேலை,
அசதியில் வீடடைந்தேன்.

கை கால் முகம் கழுவி,
சொகுசு சோபாவில்
சோர்ந்தமர்நதேன்.

புத்துணர்ச்சி பெற்றிட,
முகப்புத்தகம் திறந்தேன்.

புகைப்படங்களோ புகைப்படங்கள்....!
மஞ்சள் நிற முள்ளங்கி சாம்பார்,
உதட்டை தூக்கியும்,
இறக்கியபடி செல்பிகள்,
செல்லப் பிராணிகள்,
விரைத்த புஜங்கள்,
பயந்து விழிக்கும் குழந்தைகள்
என அனைத்துக்கும் லைக்குள் இட்டேன்.

அடுத்து நண்பர்களின் நிலவரம்...!
சினிமா சென்றவன்,
ஹோட்டல் அடைந்தவன்,
காரில் இருப்பவன்,
காறித் துப்பியவனென்று,
அனைத்து அம்சங்களையும்
கண்டு ஆனந்தப்பட்டு,
ஆத்திரப்பட்டு,
ஏக்கப்பாடு,
எரிச்சல்பட்டு,
முகச் சுளிப்போடு
முகப்புதக்கத்தை மூடிவிட்டு.

கமலகாசனும், தோனியும்
இன்று என்ன செய்தார்களென்று
எட்டிப் பார்த்துவிட்டு.

ஆன்மீக சிந்தனைகளை,
அசை போட்டு விழுங்க முடியாமல்,
விழுங்கி விட்டு.

ஆயுள் முழுதும்,
அலுவலகத்தில் அசையா இடத்தை பெற்றுவிட,
முழுத் தேங்காயை உண்ண விரும்பி,
உருட்டி திரியும் நாயைப்  போல,

வலைதளத்தில் கண்டதை எல்லாம்,
படித்து புரிந்துவிட்டதாய்
நம்பிவிட்டு நிமிர்ந்தால்?
முதுகுத் தண்டில் சுளீர் என்றது.

வலி மறக்க,
தொலைக்காட்சி திறந்தேன்.

பாடலில் ஆரம்பித்து,
விவாதமேடை அடைந்து,
வீதிச் சண்டை பார்த்து,
நகைச்சுவை ரசித்து,
சமையல் நிகழ்ச்சி ருசித்து,
நாடகங்களை திட்டுவிட்டு,
ஐபிஎல் லில் கொஞ்சம் ஆர்பரித்து,
சில்மிசக் கேள்விகளில் சிக்காமல்,
செய்திகளில் வந்து நின்றேன்.

அதுவும் அலுத்துப் போகவே,
உண்ண முடிவெடுத்து,
உணவு கேட்டேன்.

சாதமும், மிளகு ரசமும்,
மொரு மொரு பாவற்காய் சிப்ஸும்
தட்டில் வந்தது.

பார்த்தவுடன் பசி பற்றிக்கொள்ளவே,
பாய்ந்து விட முடிவு செய்து,
சோற்றில் கை வைத்தேன்.

கொதி (சூடு) குறையாத சோறு,
கையை பொசுக்கி விட
ஆ! என்று அலறியபடி நிமிர்ந்தால்!

தொலைகாட்சியில் ஒரு
பஞ்சாபி விவசாயி,
நாக்கு தள்ளியபடி,
மரமொன்றில் தூக்கில்
தொங்கிக் கொண்டிருக்கிறான்.......!

Saturday, 14 February 2015

அன்புள்ள காதலியே

பத்து வருடங்கள் தாண்டிவிட்டது.
எத்தனையோ சாவல்களை,
சமாளித்து இருக்கிறோம்.


அளவில்லா அன்பை 

அள்ளித் தெளித்திருகிறோம்.


காலச் சுழற்சியில்

சிக்கிய போதும்,
மனவுலச்சலின்றி மீண்டிருக்கிறோம்.


இருந்தாலும்,

முன்பிருந்த தருணங்கள் தந்த 
ஆனந்தம், இந்நாளில் எங்கும் 
காணோம்.


அதே காதலன்,
அதே காதலி,
புரியும் காதலிலும் மாற்றம் இல்லை.
இருந்தும், ஏன் இந்த மாற்றம்?

யோசிக்கிறேன்!

அன்று, 
இருவரின் நோக்கமும்,
கைத்தலம் பற்றுவதே,
பற்றியதை பற்றியவண்ணம் கடைபிடிப்பதே!

இன்று, 
என் நோக்கம் 
உன்னை காதலிப்பதும், 
காதலித்துகொண்டே சமுதாயத்தில் 
சிறந்து விளங்க ஒரு நிலையான 
இடத்தை அடைவதும்.
அதற்கான போராட்டமும்..

தொடர்ந்து போராட,
என் அறிவும்,
என் ஆற்றலும்,
கூடவே நேரத்தையும் செலவிடுகிறேன்.

செலவிட்ட அறிவும்,
அட்ற்றலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால், நேரமோ தொலைந்து விடுகிறது.

தொலைத்த நேரத்தில்,
காதலும் கரைந்து காணாமல் போகிறது.

காணாமல் போன காதலோடு,
என் காதலியும் தொலைத்து விட்டதால்,
என் முன்னே மனைவி மட்டுமே தெரிகிறாள்.

மனைவிக்கு கணவனாய் நடக்கும்போது....

ஆசைகள் அனைத்தும்,
ஆடம்பரமாய் படுகிறது.

அன்பை அள்ளித்தெளிக்க 
அளவுகோல் தேடுகிறது.

கோபங்கள் மட்டும் குறைவின்றி 
தெறித்து கொட்டுகின்றன.

குதுகல வார்த்தைகள் கூட,
குஷி படுத்த மறுக்கின்றன.

இப்படி இருக்க...

மறுபுறத்தில்,
காதலியாய் மட்டுமே காத்துக் 
கொண்டிருக்கும் மனைவியின் 
நோக்கம் மாறாமலே இருக்கிறது.

இவ்வாறே நாட்கள் நகர்ந்தால்,
நீயும் என்னை காதலனாய் 
பார்க்க மறுத்து, 
கணவனாய் பாவிக்க நேரும்.

பாவித்துவிட்டால்!
நான் இப்போது 
சமுதாய இடத்துக்காக போராடும் 
போராட்டத்தை, என் இல்லற வாழ்விருக்கும் 
போராட நேரும் அவலம் நேரிடும்,
எனப் புரிகிறது.

ஆகவே,
காதலிக்கும் நேரத்தை 
இந்த காதலர் தினத்திலிருந்து,
கூட்டப் போகிறேன்,
என் ஆசைக் காதலியே!

தொலைய இருந்த காதலை,
உயிர் கொடுத்து,
ஊக்கபடுத்துவோம்,
ஓடி வா!

Saturday, 11 October 2014

அறுபது வயது குடு குடு கிழவன்

நடுத்தர வர்க்கம்,
போராட்டமான வாழ்க்கை,
தூக்கி விட, தடவிக் குடுக்க
யாருமில்லை.

ஆடலையும்,
பாடலையும்,
காதலையும் நுகர்ந்தது
சினமாவில் மட்டும் தான்.

முட்டி மோதி,
கற்றுத் தேறி.
முடிந்த வரை,
ஞாய வழியில் சென்று.

வேலையும் வாங்கி,
நிம்மதிப் பெறுமூச்சு விடுவதற்க்குள்,
அடுக்கடுக்காய் குடும்பச் சுமைகள்,
குழுமி நின்று கழுத்தை நெருக்கியது.

உடன் பிறந்தோர் நிலை உயர,
அலுவலகத்தில் அடைபட்டுக்,
கரைந்தேன்.

முதிர் கண்ணனாவதர்க்குள்,
கனாக் கூட காணாமல்,
கரம் பிடித்தேன்.

இருக்கப் பட்டவனுக்கே,
ஆசை அறுபது நாள்.
எங்களைப் போன்றோருக்கு,
ஆறு நாள் ஆசை இருந்தாலே அதிகம்..

ஊதியம் பெருக,
அறிவை பெருக்கி.
குடும்பச் சுகத்தை பின் தள்ளி.

உயர் பதவிகளே, உயிரென மதித்து.
அலுவலக இலட்சியத்திற்காக
பாடு பட்டு.

திறமையானவன் என பெயருமெடுத்து.
ஒரு நாள், ஒய்வு பெற்றேன்.

இன்று விடிந்தும், விடியாமலும்,
சிறு நீர் சீற்றம்,
என்னை சித்திரவதை
செய்யத் துடங்கியது.

மங்கிய கண்கள் கொண்டு,
நான்காவது முறை ஜன்னல்,
திரையை விலக்கிப் பார்த்தேன்.

இவ்வளவு நேரம் கண்ணாம்பூச்சி
ஆடிக் கொண்டிருந்த சூரியன்,
இப்போது அகப்பட்டுவிட்டான்.
ஆம் விடிந்து விட்டது.

இனி நான் எழுந்தாலும்,
நடந்தாலும், விழுந்தாலும்,
பிறர் தூக்கம் தடை படாது!

வலுவிழந்த வலதுகையை,
மெதுவாக பின்னிழுத்து,
கைமூட்டை படுக்கையில் ஊன்றி,
உடல் தூக்கி, ஒட்டிக்கிடந்த
கால்களை அசைக்கப் பார்த்தேன்,

ஏனோ அசைய மறுத்து,
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

தட்டி எழுப்ப இடது கை தூக்கும்போது,
கோபப்பட்ட வலது கை மடித்துக்கொண்டு,
என்னை குப்புறத் தள்ளியது.

இதை ஜன்னல் வழியே,
கண்டு கொண்ட சூரியன்,
குலுங்கி குலுங்கி சிரித்து,
என் கண்களை கூசியது.

அறை மணி நேரப்
போராட்டத்திற்க்குப் பின்- அசைந்தது
என் இடது கால்.

அசைத்து அசைத்து இரண்டு,
கால்களையும் கட்டிலுக்கு
வெளியே தள்ளினேன்.

மடித்திருந்த வலது கையை,
உள்ளங்கை கொண்டு நிமிர்த்தி,
தலையாட்டி பொம்மைபோல்,
விசிறி அமர்ந்தேன்.

இந்நேரம் கால்கள்,
தரை பதிந்திருக்கும் என்று
நம்புகிறேன்.

கண்ணாடி எடுக்க வளைந்தபோது,
முதுகெலும்பு மடங்க மறுத்தது,
மரண வலியை முழுங்கிக் கொண்டு,
எடுத்துவிட்டேன்.

ஏனோ கண்ணாடி அணிந்தும்,
பார்வையில் மாற்றம் காண முடியவில்லை.

அருகிலிருந்த நடை பழக்கியை,
தர தரவென இழுத்து கொண்டேன்.

இரு கைகள் பற்றி எழ
முயன்றேன், பலனில்லை.
மூன்று முறை தொடர்ந்தேன்,
அதே நிலைதான்.

யோசித்தேன்...
புரிந்துவிட்டது.
என் வலது கால் பாதம்,
இடதுகால் மேல்,
சுயநினைவின்றி,
சிலுவையில் அறையப் பட்டதுபோல்
சிக்கிக் கிடந்தது.

பக்குவமாய் பேசிபேசி,
ஒட்டிக் கிடந்தவரை பிரித்துவிட்டேன்.

சிறுநீர் சீற்றம் கொஞ்சம்,
கொந்தளித்தது.

அவசரமாய் எழ முயன்றேன்,
முகத்தில் மட்டுமே அவசரம் தெரிந்தது,
உடல் உரல்போல உறுதியாய்
உறைந்திருந்தது.

எப்படியோ, தட்டுத்,
தடுமாறி, தவழ்ந்து,
குனிந்த படி நடை பழகியை
கட்டியபடி நின்றேன்.

இடது மூட்டில் ஈட்டி
ஒன்று பாய்ந்தது.
பல்லைக் கடித்துக்கொண்டேன்.

வலது காலோ வலுவிழந்து,
சரியத் தொடங்கியது.
இடது கையால்,
முட்டுக் கொடுத்து பார்கிறேன்.

பட படவென வலது புற எலும்பு,
துடி துடிக்க ஆரம்பித்தது.

உடல் முன்புறம் வளைய வளைய,
தரையில் விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்,
கைகள் கொண்டு பின்புறம் ஒரே
தள்ளாய்த் தள்ளி, படுக்கையில் விழுந்தேன்.

விழுந்ததில்,
கட்டில் தலைமாட்டில்,
பின் தலை மோதி,
வலி தாங்காமல் வாய்
திறந்து கூவிவிட்டேன்.

ஆறு மணிக்கு அயர்ந்து இருந்த மகன்,
அப்பாவென்று ஓடி வந்தான்.

வலுக்கட்டாயமாக தண்ணீர் குடுத்து,
என்ன வேண்டும் என்றான் -கோபத்தை
அடக்கிக் கொண்டே.

சிறுநீர் என்றேன்!
தோல் கொடுத்து,
தூக்கி விட்டு,
நிற்க்க வைத்தான்.

தத்தி தத்தி நகர்ந்தேன் -நடை
பழக்கியோடு.

பாத்ரூம் நெருங்குவதற்குள்,
இடைமறித்து, மாமா என்ன ஆச்சு என்றாள் -என்
மருமகள்.

எடுத்துரைப்பதற்குள் ,
மூத்திரப்பை வீங்கி,
அடக்க முடியாமல்,
தொள தொள டிராயரை,
நனைத்துக் கொண்டு,
தரையில் படர்ந்தது சிறுநீர்.

அவமானத்தை மறைக்க,
கூனிக் குறுக்கி,
குழந்தை போல் சிரித்தேன்......